BREAKING NEWS
Search

டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிப்பு – போராட வந்த பெண்களைத் தாக்கிய போலீஸ்!

டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிப்பு – போராட வந்த பெண்களைத் தாக்கிய போலீஸ்!

police_sot_slap_reports

டெல்லி: பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தலைநகர் டெல்லியில் தொடர் கதையாகி வருகின்றன. சமீபத்தில் 5 வயது சிறுமியை கடத்திய பக்கத்து வீட்டு நபர் 4 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கொடுமை நிகழ்ந்துள்ளது. அந்த சிறுமி இப்போது டெல்லி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், 4 மாதங்களில் கிட்டத்தட்ட 100 கற்பழிப்புச் சம்பவங்கள் நாடெங்கிலும் நடந்துள்ளன. குறிப்பாக டெல்லியில் வாரம் ஒரு கற்பழிப்பு நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி, தான் வசித்து வரும் வீட்டின் கீழே விளையாட சென்றபோது, தரை தளத்தில் வசித்துவந்த நபர் சிறுமியை இழுத்துப் போய் வீட்டிற்குள் அடைத்து வைத்து கடந்த நான்கு தினங்களாக கற்பழித்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த 40 மணி நேரம் கழித்தே அச்சிறுமியின் அழுகுரலை கேட்டு அவளது குடும்பத்தினர் நேற்று மாலை கண்டுபிடித்தனர். படுகாயத்துடன், மயக்கமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அச்சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அடுத்த 48 மணி நேரம் கழித்தே சிறுமியின் நிலை குறித்து கூற முடியும் என்றனர்.

மேலும் சிறுமியின் கன்னம், உதடு ஆகிய இடங்களில் காயங்கள் இருப்பதோடு, கழுத்திலும் கயிற்றை இறுக்கி கொல்ல முயன்றதற்கான வடு காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்னொரு கொடுமை, அச்சிறுமியின் பிறப்புறுப்பில் 200 மி.லி. பாட்டில், இரண்டு மூன்று மெழுகுவர்த்தி துண்டுகள் உள்ளே நுழைக்கப்பட்டிருந்ததாகவும், 5 வயது சிறுமி ஒருத்தி இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டிருப்பதை தான் இப்போதுதான் பார்ப்பதாகவும், சிறுமி சிகிச்சை அளிக்கும் சுவாமி தயானந்த் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.கே. பன்சால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

இந்நிலையில் சிறுமியின் நிலை மோசமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக ( எய்ம்ஸ் – AIIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே சிறுமியை சீரழித்த குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றத்தை மறைக்க சிறுமியின் பெற்றோருக்கு லஞ்சம் கொடுத்த போலீஸ்

இதற்கிடையே முதலில் தாங்கள் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் கொடுக்க முயன்றபோது, அவளை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ள சிறுமியின் பெற்றோர், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததும், இது குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என்று சிறுமியின் தந்தைக்கு போலீஸ்காரர் ஒருவர் 2000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

போராடிய பெண்ணை  கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரி

delhi cop slapping womanஇச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இளம் பெண்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியை பார்க்க கிழக்கு டெல்லி எம்.பி. சந்தீப் தீட்சித் மற்றும் மாநில சுகாரத்துறை அமைச்சர் ஏ.கே. வாலியா ஆகியோர் வந்தனர்.

போராட்டக்காரர்கள் அவர்களை முற்றுகையிட்ட நிலையில்,  போலீஸை கண்டித்து முழக்கம் எழுப்பிய இளம்பெண் ஒருவரை அங்கு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் பானி சிங் அகலாவாத் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.

இதனை தொலைக்காட்சிகள் படம்பிடித்து ஒளிபரப்பியதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் இதில் தலையிட்டது. இதனையடுத்து அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சம்பத்தை கண்டித்து டெல்லி காவல்துறைக்கு எதிராகவும், முதல்வர் ஷிலா தீட்சித்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

-என்வழி செய்திகள்
2 thoughts on “டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிப்பு – போராட வந்த பெண்களைத் தாக்கிய போலீஸ்!

  1. srikanth1974

    வன விலங்குகள் அழிந்து வரும் சூழ்நிலையில் இப்படிப் பட்ட ஜன விலங்குகள்
    அதிகரித்து வருவது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

  2. மு. செந்தில் குமார்

    பாதி கட்டுரைக்குமேல் படிக்கமுடியவில்லை – அவ்வளவு கொடூரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *