BREAKING NEWS
Search

9 ஆண்டுகளுக்கு முன் ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் ராமதாஸ் கைது!

9 ஆண்டுகளுக்கு முன் ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் ராமதாஸ் கைது!

ramadass-arrest

மதுரை: மதுரையில் ரஜினி ரசிகர்களை பாமகவினர் தாக்கிய வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பின் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, அவரை இன்று கைது செய்யப்பட்டார். காலையில் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பாபா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப் பிடித்து நடித்தது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மிக இழிவாகப் பேசி, வன்முறையைத் தூண்டினார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், 2004ம் ஆண்டு ஏப்ரல் 2ம்  தேதி ராமதாஸ் மதுரை வந்தார். நெல்பேட்டை பகுதியில் ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் கருப்பு கொடி காட்டினர். இதை தடுத்த பாமகவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த வக்கீல் மணவாளன் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 11 பேர் மீது விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கு மதுரை  ஜேஎம் 1 கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. ராமதாஸ், இளஞ்செழியன் ஆகியோர் தலைமறைவாக (!?) இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் ராமதாசுக்கு ஏற்கனவே கோர்ட் வாரன்ட் பிறப்பித்திருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இளஞ்செழியன் மதுரையில் கொலை செய்யப்பட்டார். தற்போது ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை தாக்குதல் வழக்கிலும் அவரைக் கைது செய்யும் வகையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி போலீசார் மதுரை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ரவி முன்பு நேற்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், ராமதாசை கைது செய்யும் பிடிவாரன்டை பிறப்பித்தார். இதை போலீசார் பேக்ஸ் மற்றும் இமெயில் மூலம் திருச்சி சிறைக்கு அனுப்பியதால் நேற்றிரவே ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கிடைத்தும் ராமதாஸ் வெளியில் வர முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.

ராமதாசை இன்று மதுரைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை வரும் மே 17 ந் தேதி வரை காவலில் வைத்துள்ளனர்.

-என்வழி செய்திகள்
26 thoughts on “9 ஆண்டுகளுக்கு முன் ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கில் ராமதாஸ் கைது!

 1. மிஸ்டர் பாவலன்

  “எதிரிகள் இல்லை” – இது சூப்பர் ஸ்டார் பாடல்!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 2. நாஞ்சில்மகன்

  உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
  உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
  உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது .

  இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள்.. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
  பாபா கவுன்டவுன் ஸ்டார்ட்

 3. குமரன்

  பாபா படப்பெட்டியைத் தூக்கிப் போய் அராஜகம் செய்த போதே ராமதாசையும் அவரது கட்சியினரையும் கைது செய்திருக்க வேண்டும். அப்போது (2001 முதல் 2004 வரை) பா.ம.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்ததால், அப்போது ஜெயாவும், அவரது போலீசும் சும்மா இருந்தன.

  இந்தக் கறுப்புக் கோடி ஆர்ப்பாட்டமும் அதன் விளைவான பா.ம.கவினரின் ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதலும் நடந்தபோதும் இதே ஜெயாதான் முதல்வர். அப்ப்போதும் அவருக்கு ராமதாஸ் தேவைப்பட்டது.

  ஆனால் இப்போது ராமதாஸ் ஜெயாவுக்குத் தேவை இல்லை. இன்னும் சொல்லப் போனால் இப்படி வழக்கு மேல் வழக்குப் போட்டால் ராமதாஸ் பணிந்து வந்து “அன்புச் சகோதரி”யைப் “பாரதப் பிரதமராக்க” அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.

  எனவே ஜெயாவும் அவரது அடிமைகள் போலப் பணியாற்றும் காவல் துறையும் செய்வது எதுவும் உண்மை, தர்ம, நியாயம் கருதி அல்ல. அவை அனைத்தும் ஜெயாவின் பழி வாங்கும் உணர்ச்சி, காழ்ப்பு உணர்ச்சி, அதிகார வெறி, அகந்தை ஆகிய துர்க்குணங்கள் காரணமாக மட்டுமே.

  ஆனாலும் ஒரே ஒரு ஆறுதல், இந்த முறை ராமதாஸ் தூண்டிவரும் சாதி வெறியும், வன்முறையும் தண்டிக்கப் படுவது குறித்து மகிழ்ச்சியே.

  தமிழகக் காவல் துறையினர் “புரட்சித் தலைவி” தமிழகக் காவல் துறையினர் “புரட்சித் தலைவி” “அம்மா”வைச் சந்தோஷப்படுத்த, ராமதாஸ் ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போது பக்கத்து சீட்டுப் பையனின் பலப்பத்தை எடுத்துக் கொண்டு தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததற்காக, அந்தப் பையனிடம் இப்போது ஒரு புகார் வாங்கி அதற்காகவும் ஒரு வழக்குப் போட்டுக் கைது செய்யலாம்.

 4. Shiva

  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்…
  போடா ஆண்டவணே நம்ம பக்கம் இருக்கான்…

 5. Venkatesan

  **(though this is related with current political fight)** கொஞ்சம் லேட் ஆனாலும் தர்மம் ஒரு நாள் வெல்லும்…!!! போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்…Good to see WRONG ppl getting RIGHT treatments….

 6. நாஞ்சில்மகன்

  மக்களை ஏமாற்றாதே ஏமாற்றாதே
  ஏமாறாதே ஏமாறாதே

  ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
  நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
  பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு
  நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
  இன்றோடு போகட்டும் திருந்தி விடு
  இன்றோடு போகட்டும் திருந்தி விடு
  உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு .

  திருந்துங்கள் ஐயா திருந்துங்கள் இல்லை என்றால் மக்கள் திருந்த வைப்பார்கள். உலகிலேயே காதலை எதிர்த்த மிருகம் நீதான். என்ன இந்தியாவே அதிரும் என்று நினைத்தாய் எல்லாம் நல்லபடியாகத்தான் போய் கொண்டு இருக்கிறது. சங்கராச்சாரியாரையே கைது பண்ணிய அம்மாவின் முன்னாடி நி ஒரு பிஸ்கோத்து. உன் மவன் ஒரு புல்லு.

 7. நாஞ்சில்மகன்

  அம்மா ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
  இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
  உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
  அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

  ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
  அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
  உடல் உழைக்கச் சொல்வேன்
  அதில் பிழைக்கச் சொல்வேன்
  அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன்

  சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
  வாழ்விற்கும் வசதிக்கும்
  ஊரார் கால்பிடிப்பார்
  ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
  அவர் எப்போதும் வால்பிடிப்பார்
  முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
  இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
  இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
  அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
  அந்த மேலோர் சொன்னதை மறந்தார்

  இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
  நானா பார்த்திருப்பேன்
  ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
  அதை எப்போதும் காத்திருப்பேன்
  எதிர்காலம் வரும் என் கடமை வரும்
  இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
  பொது நீதியிலே புதுப் பாதையிலே
  வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
  வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

 8. Deen_uk

  இந்த செய்தியை படித்தவுடன் என் மனதில் தோன்றிய ஒரே வார்த்தை ” அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்!”..எனவே அந்த செய்தியை இங்கு எழுதி ,கடைசியாக அரசன் மேட்டர் எழுதலாம் என வந்தேன்!! இங்கு வந்து பார்த்தால் நமது நண்பர்கள் பின்னி பெடலேடுத்துள்ளனர்! இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்,அனைத்துலக ரஜினி ரசிகர்களும் ஒரே மனம் கொண்டவர்கள் ஒரே சிந்தனை உள்ளவர்கள் என தெரிகிறது!! சந்தோசமாக உள்ளது! ஒவ்வொரு ரஜினி ரசிகன் மனதில் ரணமாக ஊறிப் போன விசயத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது.இது அரசியல் பழி வாங்கலாக இருந்தாலும்,நமக்கு கிடைத்த இந்த சின்ன சந்தோசத்தைக் காட்டிலும்,இவர்கள் உள்ளே போனதில் மிகப் பெரிய சந்தோசம் , இனி சாதி சண்டைகள் ,ஓரளவாவது குறையும்,தமிழ்நாடு கொஞ்சமாவது அமைதியாக இருக்கும்.அதில் எனக்கு மிக சந்தோசம்..இந்த கட்சி முழுமையாக ஒழிக்க படவேண்டும் என இறைவனை வேண்டிகொள்கிறேன்.

 9. Deen_uk

  @ மிஸ்டர் பாவலன்..
  “எதிரிகள் இல்லை” – இது சூப்பர் ஸ்டார் பாடல்!

  -=== மிஸ்டர் பாவலன் ==-/////
  சிம்பிள் அண்ட் நட்ச் கமெண்ட் மிஸ்டர் பாவலன்!! பலான பாடல்கள் தான் ரெட்டை அர்த்தம் தொனிக்கும்! ஆனால் இந்த பாடல் சூப்பர் மீனிங் இன் சிம்பிள் வேர்ட் !! சூப்பர் பஞ்ச்!!! வாழ்த்துக்கள்!

 10. குமரன்

  இன்றைய தினமலர் செய்தியைப் படியுங்கள் நண்பர்களே.

  http://www.dinamalar.com/news_detail.asp?id=705807

  காலம் மாறினதால்தான் இப்போது வழக்கு கைது எல்லாம். ராமதாஸ் ஜெயாவுடன் நட்பாக இருந்தால் இதெல்லாம் கிடையாது.

 11. குமரன்

  செய்தி மீள்பதிவாக இதோ

  தற்போது திருச்சி சிறையில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் , ஜாமினில் வெளிவர முடியாத மதுரை சம்பவத்தில் கைது செய்வதற்காக திருச்சி சிறையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  அது என்ன மதுரை சம்பவம்.
  அப்படி ஒரு சம்பவம் நடந்ததே யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு இருக்கும், உயிரைக் கொடுத்து படம் எடுத்த ஒரு புகைப்படக் கலைஞரால் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் அது.
  அந்த புகைப்படக்கலைஞரின் பெயர் சார்லஸ்.
  மொத்தத்தில் ஐந்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்த அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் ஈரக்கொலையை நடுங்கவைக்கிறது என்று சொல்கிறார்.
  கடந்த 2004ம் வருடம் நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக ராமதாஸ் சில கடுமையான கருத்துக்களை கூறியிருந்தார், அதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமதாஸ்க்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர்.
  மதுரை பார்லிமென்ட் தொகுதிக்கான பிரச்சாரத்திற்கு மதுரை வந்த அவர், தல்லாகுளம் பகுதி ஒட்டலில் இருந்து கிளம்பிவரும் வழியில், நெல்பேட்டை அண்ணாசிலை அருகே கறுப்புக்கொடி காட்டுவது என ரஜினி ரசிகர்கள் முடிவு செய்தனர்.
  இதை கேள்விப்பட்ட புகைப்படக் கலைஞர் சார்லஸ் தான் சார்ந்த வாரப்பத்திரிகைக்காக படம் எடுப்பதற்காக அங்கு போய் ரசிகர்களோடு காத்திருந்தார்.
  இரவு 8 மணிக்கு ராமதாஸ் வாகனம் வரும்போது ரோட்டை மறித்து கறுப்புக்கொடி காட்டினர்.
  அமைதியாக கறுப்புக்கொடி காட்டிவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அங்கு இருந்து சென்றிருப்பார்கள், ஆனால் அதற்குள் யார் “சிக்னல்’ கொடுத்தார்களோ தெரியவில்லை? சபாரி உடையணிந்த ராம்தாஸின் பாதுகாவலர்கள் பாய்ந்து வந்து ரசிகர்களை மிருகத்தனமாக தாக்கினர்.
  இதனை வாகனத்திற்குள் உட்கார்ந்தபடி ராமதாஸ் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர தடுக்கவில்லை.
  எதற்கு இந்த கொலைவெறி தாக்குதல் என்று பதைபதைப்புடன் சார்லஸ் தனது கேமிராவை பட, படவென இயக்க ஆரம்பித்தார்.
  கேமிரா பிளாஷின் வெளிச்சம் தங்கள் மீது பட்டதும் ரசிகர்களை விட்டுவிட்டு, போட்டோகிராபர் சார்லஸ் மீது பாய்ந்தது அந்த சபாரி அணிந்தவர்களின் கூட்டம்.
  அனைவரது எண்ணமும் கேமிராவை பறித்து உடைத்து நொறுக்குவதிலேயே இருந்தது. இதனை உணர்ந்து கேமிராவை மார்போடு இறுக்கி அணைத்தபடி உட்கார்ந்து கொண்டார். கூட்டத்தில் ஒருவர் கோபம் கொண்டு கையில் வைத்திருந்த நீளமான டார்ச் லைட்டால் தலையை நோக்கி ஒங்கி அடித்தார், சார்லஸ் கையைக் கொண்டு தலையை மறைக்க, அடி கைவிரல்களில் இறங்க வலியும், ரத்தமும் பெருகியது.
  மேலும் தட,தடவென சில, பல அடிகள் அடித்த கூட்டம், ஓடிப்போய் ராமதாஸ் வந்த வேனில் ஏறிக்கொள்ள, வேன் அங்கிருந்து கிளம்பியது.
  ரத்தம் சொட்ட, சொட்ட அடிபட்ட ரஜினி ரசிகர்களை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு சென்றனர். தனியாளாக இருந்த சார்லஸ், பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரிக்கு தானாகவே போய் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
  ராமதாஸ் வேன் முன்பாக ரஜினி ரசிகர்கள் கறுப்பு கொடி காட்டினர் என்று மறுநாள் சாதாரணமாகவே அனைத்து நாளிதழ்களிலும் செய்தி பதிவானது.
  இதனால் இன்னும் வேதனை அதிகமடைந்த சார்லஸ் பத்திரிகையாளர்களிடம் நடந்த சம்பவத்தை விவரித்ததுடன் நடந்த சம்பவத்திற்கு சாட்சியான படங்களையும் வெளியிட மறுநாள் தினமலரில் பெரிதாக பிரசுரமானது.
  கொந்தளித்துப் போன ரஜினி ரசிகர்கள் ராமதாஸ்க்கு எதிராக தமுக்கம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்தின் உதவியாளர் சத்தியநாராயணன் பங்கேற்று அடிபட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
  ரசிகர்களை சென்னைக்கு அழைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் சம்பவம் தொடர்பான படங்கள் எடுத்த போட்டோகிராபர் சார்லசைசயும் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார், பிறகு அது நடக்காமலே போய்விட்டது.
  ரஜினி ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செசய்யப்பட்டது.
  ஆனால் ராமதாஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
  வழக்கு விவரங்கள் கோப்பில் கட்டப்பட்டு பரண் மீது தூக்கிபோடப்பட்டது.
  2011ம் வருடம் ராமதாஸ் அதிகாரம் குறைந்த போது அவரது இந்த மதுரை சம்பவ வழக்கு பரணில் இருந்து தேடி எடுக்கப்பட்டு விசாரணை கட்டத்தை எட்டியது.
  விசாரித்த நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை ராமதாஸ்க்கு விதித்தது.
  ஆனாலும் போலீசார் அவ்வளவு ஆர்வம் காட்டாததால் போலீஸ் நிலைய வாசல்வழியாகவே ராம்தாஸ் போய்வந்து கொண்டிருந்தார்.
  அவ்வளவுதான் எல்லாம் நீர்த்து போய்விட்டது என்று நினைத்த நிலையில், தற்போது இந்த மதுரை சம்பவம் தொடர்பாக கைது செய்வதற்கான வாரன்டை மதுரை போலீசார் திருச்சி கோர்ட்டில் கொடுத்துள்ளனர். அதன்படி ராமதாஸ் வெளியில் வந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செசய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
  ஒரு படம் எடுத்து அதற்காக அடிபட்டு, அவமானப்பட்டு, ஒன்பது வருடமாக மனதில் சுமந்து கொண்டிருந்த வலிக்கு இப்போதுதான் மருந்து இட்டது போலிருக்கிறது, இது வேறு எதற்காகவும் அல்ல எனது படத்திற்கு இப்போதாவது உயிர் கிடைத்தது என்பதற்காகவே என்று கூறி முடித்துக்கொண்டார் சார்லஸ்.
  முக்கிய குறிப்பு: இந்த சம்பவம் தொடர்பான படங்கள் அனைத்தும் சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியில் பார்க்கலாம்.

 12. குமரன்

  அம்மாவாவது, ஆட்டுக் குட்டியாவது !!!

  ஜெயாவின் தைரியம் என்றெல்லாம் சொல்வது தவறு. இதற்குப் பெயர் தைரியம் இல்லை, காழ்ப்புணர்ச்சி.

  அன்றே கைது செய்யாதது அன்று இருந்த கோழைத் தனம். பாரபட்சம்.

  இன்று கைது செய்வது சும்மா. ஜெயா தனது அதிகார வெறியைத் தீர்த்துக் கொள்ள. அவ்வளவுதான்.

 13. SUNDHARAIYAH

  LET US CELEBRATE THIS EVENT!!!
  ANDHA RAMADOSS NAYA(DOG) THOOKULA PODANUM!!!!

  NALLAVANGA VALUVANGA !!! KONJAM NERAM AGUM AVLAVU THAN!!!

 14. SUNDHARAIYAH

  ஒவ்வொரு ரஜினி ரசிகனும் கொண்டாட வேண்டிய தருணம் இது !!!

 15. SUNDHARAIYAH

  ரஜினி ரசிகர்கள் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு சரியான மருந்து

 16. bahrainbaba

  பிடிச்சி உள்ள போடட்டும்.. மதுரை, சென்னை, திருச்சி,வேலூர், திருநெல்வேலின்னு மாத்தி மாத்தி கேஸ் போட்டு அலைக்களிக்கணும் என்னமோ வெயில்ல போக மாட்டேன்னு அடம் பிடிச்சாராமே அய்யா.. மனசுல பெரிய vampirenu நினைப்பு..

 17. Krishna

  பாபா திரைப்படத்தில் ரஜினி புகை பிடிப்பது போல் காட்சி இருந்ததால் தான் ராமதாஸ் இழிவாக பேசினார் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பாபா திரைப்படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் ரஜினி சந்தன கடத்தல் வீரப்பனை அரக்கன் என்று தெரிவித்திருந்தார். அதிலிருந்து தான் பிரச்சினையே ஆரம்பானது. தன் சாதிக்காரன் ஒருவனை அரக்கன் என்று தெரிவிப்பதா என்று தான் முதலில் ராமதாஸ் ஆரம்பித்தார். ஆனால் அந்த அறிக்கை மக்களிடம் வெறுப்பு ஏற்படுத்தியது. அதன் பின் தான் ரஜினி புகை பிடிப்பது போல் காட்சி இருக்கிறது என்று பிளேட்டை மாற்றினார். அது மட்டுமின்றி 2004-ல் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டதும் பாமக கட்சி அலுவலகங்களில் கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு வீரப்பனுக்கு மரியாதை செய்தார். இன்று மக்களுக்கு எல்லாம் மறந்து விட்டது என்ற தைரியத்தில் தான் இது போன்று செயல்படுகிறார்.

 18. மிஸ்டர் பாவலன்

  நண்பன் Deen_uk அவர்கள் கருத்துக்கு நன்றி.

  முன்பு ‘ரஜினி ரசிகன்’ என்ற போர்வையில் இந்த வலையில் எழுதும்
  கமல் ரசிகன் என குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் நான் விஸ்வரூபம்
  படத்தைப் பற்றி முன்-பின் முரணாக எழுதி இருந்த பதிவுகளைப் படித்த
  சில நண்பர்கள் ‘நீங்கள் கமல் ரசிகனா, ரஜினி ரசிகனா? இது ஒரு பக்கம்
  இருக்கட்டும். முதலில் புத்தி சுவாதீனம் உள்ளவரா? அது பற்றி சொல்லுங்கள்”
  என்றனர். நான் அவர்களை விட்டு விடுவேனா? வந்ததே கோபம்!
  “என்னைப் பார்த்தா புத்தி சுவாதீனம் உள்ளவரா என கேட்கிறீர்கள்?
  எனது புத்தி சுவாதீனம் பற்றி உங்களுக்கு எப்படி வரலாம் சந்தேகம்?
  எனது புத்தி சுவாதீனம் பற்றி எனக்கே இப்போது சந்தேகம் உள்ளது!”
  என போட்டேன் ஒரு போடு! பார்ட்டி இடத்தை காலி பண்ணி விட்டனர்.

  மனோகரன்-குமரன்-பாவலன் கலக்கல் காமெடி படிக்க கீழே click செய்க:
  http://www.envazhi.com/some-questions-and-one-answer-on-viswaroopam/
  நன்றி!

  -== மிஸ்டர் பாவலன்==-

 19. srikanth1974

  அருமை நண்பர் திரு.கிருஷ்ணா அவர்களே;நீங்கள் சொல்வது உண்மை.
  இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி கருத்து எழுத வேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன் ஆனால் நீங்களே அதை மிக சிறப்பாக எழுதி உள்ளீர்கள் .உங்களுக்கு எனது நன்றி.

 20. Jegan

  Some of thalaivar’s famous dialogues correlates this situation.
  ”kettavangaluku aandavan niraya kudupan ana kaivitruvan”
  ”inta jenmathula senja paavam intha jenmatilaye anupavikanum”
  ”kidaikama irukrathu kidaikathu”(bail)-muthu.
  ” sila pera ipdi thaan thiruthanumnu aandavan solran….-arunachalam”
  ”aandavanoda court onnu iruku”-pandiyan.
  Etc etc..

 21. chenthil UK

  நீதி கிடைத்திருக்கு .. ஆனால் இது தவறான நீதி என்றே தோன்றுகிறது.. அல்லது தமிழ்நாட்டில் ஒருவன் அடிபட்டால்.. அவன் அரசாங்கதிருக்கு எதிராக இருந்தால் தான் கைதே செய்திருகிறார்கள் … இந்த செயலுக்கு ஒரு கட்சி தலைவரை ஜாமீன் இல்லாத கைது பண்ண கூடிய ஒரு குற்றம் நடந்திருகிறது.. அனால் அரசாங்கமோ .. அல்லது காவல் துறையோ… ஏன் சட்டத்தை செயல் படுத்தவில்லை? இப்போது எதற்காக செயல் படுத்தினார்கள்? இப்படி தான் காவல் துறை செயல் படுகிறது எனபது தெரியும்.. ஆனால் இவ்ளவு தாமதமாய் கைது வாரண்ட் கேட்ட உடனே எப்படி நீதித்துறை கேள்வி கேட்காமல் கொடுத்தது? நீதித்துறை மற்றும் காவல் துறையின் இவ்வாறான தவறான செயல்… அரசாங்கம் சார்புடைய வெளிபடையான செயல் கட்டுகோப்பான அரசாங்கம் நமக்கு இல்லை என்று வருத்தம் மற்றும் பயம் தான் வருகிறது.. சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்காது என்பது தெளிவு

 22. Sanjeev

  இந்த செய்தி கேட்டு தேன் வந்து பாயுது காதினிலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *