BREAKING NEWS
Search

தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு!

ஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம் நேற்று தலைவர் ரஜினியைச் சந்தித்தார்.

ராஜு மகாலிங்கம் குறித்து பல்வேறு வதந்திகளை மீடியாக்கள் வெளியிட்டு வந்தன. இதனால் அவர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது.

இந்த நிலையில்தான் அவர், போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட ராஜு மகாலிங்கம், “தலைவரை இன்று சந்தித்தேன்.. எப்போதும் போல அவரே எனது உந்துசக்தி,” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/rajumahalingam/status/1025388078318333954

இதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தில் ராஜு மகாலிங்கம் எப்போதும்போல தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் ‘குழப்பம் தீர்ந்தது… தொடர்ந்து செயல்படுங்கள்,’ என ராஜு மகாலிங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

– என்வழி




2 thoughts on “தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *