BREAKING NEWS
Search

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத் தர ராஜீவ் விரும்பினார் – சொல்கிறார் கருணாநிதி

பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார்: கருணாநிதி வெளியிட்ட ‘ரகசியம்’

சென்னை: இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்ட்யன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

ஒற்றுமை இல்லையே..

தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை.

மீண்டும் டெசோ மாநாடு

இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப்போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு வீரமணி இடத்திலும், சுப.வீரபாண்டியன் இடத்திலும் உரையாடினேன். அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு, எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ, தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்தஇருக்கிறோம்.

ராஜீவ் ரகசியம்

தி.மு.க. சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதல்-அமைச்சரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ்காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். என்னிடம் ராஜீவ்காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார்.

அதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ்காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத்தந்திருப்பார்,” என்றார் அவர்

-என்வழி செய்திகள்
9 thoughts on “பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத் தர ராஜீவ் விரும்பினார் – சொல்கிறார் கருணாநிதி

 1. கிரி

  கலைஞர் கொஞ்ச நாள் ஈழத்தை பற்றி பேசாமல் இருந்தால் நிம்மதியாக இருக்கும். இரண்டு மூன்று மாசமா ஈழம் ஈழம் என்று அழுது புரண்டு கொண்டுள்ளார்.. பேச வேண்டிய நேரத்தில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டு அவசியமில்லாத நேரத்தில் அறிக்கைகளாக விட்டு கடுப்பேத்திக்கொண்டு இருக்கிறார்.

 2. குமரன்

  ///தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை.///

  திமுக என்றால் கருணாநிதி குடும்பம். கருணாநிதி குடும்பம் என்றால் திமுக.
  தனது குடும்பத்தில் ஒற்றுமை இல்லை, மொழி ஆர்வமும் குறைந்து கொண்டே வருகிறது என்பதை இப்படி விவரமாகக் கூறி விட்டாரே !

  ///ராஜீவ்காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத்தந்திருப்பார்///

  எத்தனை வருடங்களுக்குப் பின் இந்த உண்மையைச் சொல்கிறார்? இதை மே 20 , 1990 க்கு முன் சொல்லியிருந்தால் சரித்திரமே வேறு அல்லவா?

  இதில் எந்த அளவு உண்மை கலந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

  தில்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரனைச் சிறை வைத்தது ஒருவேளை அவருக்கு ஈழத்துப் பிரதமராக முடி சூட்டவா?

 3. HOTLINKSIN.COM

  நரம்பில்லாத நாக்கை வெச்சு எப்படித்தான் இப்படி எல்லாம் மாத்தி மாத்தி பேசுறாங்களோ…
  ………..
  சச்சின் தந்த பரிசு?குதூகலத்தில் த்ரிஷா!!
  http://www.hotlinksin.com/story.php?id=10878
  …………
  அஜித்தின் அடுத்த படம் எப்போது?
  http://www.hotlinksin.com/story.php?id=10929

 4. karthik

  ஐயோ சாமி.. இவர தட்டி கேட்க யாருமே இல்லையா ? கத கதைய முந்திரிக்கா.. கலைஞர் அடிச்சுவிட்ட கத்திரிக்கா..

 5. Krishna

  //பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத் தர ராஜீவ் விரும்பினார்//

  இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார்? ராஜீவ் காந்தி பிரபாகரனுக்கு இவ்வளவு பெரிய உபகாரம் செய்ய முன் வந்தாலும் பிரபாகரன் நன்றி இல்லாமல் ராஜிவை படு கொலை செய்ய உத்தரவிட்டார் என்று சொல்ல வருகிறாரா?
  ஈழம் சம்பந்தமாக இவருடைய கருத்துக்களை எல்லாம் தொகுத்து சிரிப்பொலி தொலைக்காட்சியில் போட்டால் பொருத்தமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *