BREAKING NEWS
Search

ரஜினியிசம் 44!

மீபத்திய வருடங்களில் இசங்கள் பேசும் நம் உரையாடலகள் மத்தியில் புதிதாக இணைந்திருக்கும் ஒரு இசம் ரஜினியிசம்.. குறிப்பாக சமூக ஊடகத்தில் புழங்கும் பலருக்கும் இந்த வார்த்தை புதிதாக இருக்காது.. ரஜினியிசம் என்பது ரஜினியின் கொள்கை சித்தாந்தங்கள் தாண்டி அவரின் பேச்சு, நடை, உடை, பாவனை­ஸ்டைல் என ரஜினியை பொதுமைப்படுத்தும் ஒரு வார்த்தையாக வழங்கி வருகிறது… வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆச்சர்ய வார்த்தை இது…அந்த ரஜினியிசம் எனும் வார்த்தைக்கு விதைபோடப்பட்ட நாள் தான் இன்று. அதாவது சிவாஜிராவ் எனும் எளிய பேருந்து நடத்துனர் ரஜினிகாந்த் எனும் திரை நடிகராக வெள்ளித்திரையில் அறிமுகமான நாள் இன்று.. நண்பர்களிடம் அடிக்கடி நான் கர்வத்துடன் பகிரும் ஒரு செய்தி, இந்த 44 வருட கலை வாழ்வில் கிட்டத்தட்ட 41 வருடம் நிரந்தர உச்ச நட்சத்திர அந்தஸ்து
தான்.. வேறு எந்த துறையிலும் யாருக்குமே இது சாத்தியம் இல்லை.. இனியும் சாத்தியம் ஆகப்போவதும் இல்லை என்பதை மீண்டும் பதிவுசெய்ய ஆசைப்படுகிறேன்..😎
.
உழைப்பு, அவரின் தொழில்பக்தி, நேர்மை எல்லாமும் ரஜினியின் சாதனைகள் பற்றி பதிவு செய்யும் அனைவரும் பதிவு செய்யும் விசயங்கள்தான்.. ரஜினியிடம் கேட்டால் ஒற்றை வார்த்தையில் கடவுள் அனுகிரகம் என்று சொல்லிவிட்டு சிரிப்பார்.. உண்மையில் இந்த நிலைக்கு அவர்பட்ட கஷ்டங்களும் உழைப்பும் அசாத்தியமானது. கே.பாலசந்தர் கையில் கிடைத்ததால்தான் இத்தனை பெரிதாக உயர்ந்திருக்கிறார் என்று இல்லை… வேறு யார் கையில் கிடைத்திருந்தாலும் ரஜினி எனும் வைரம் ரஜினியாகவேதான் ஜொலித்திருக்கும்…. யார் அறிமுகம் செய்திருந்தாலும் இதே உச்ச நட்சத்திர அந்தஸ்தை ரஜினி அடைந்திருப்பார் என சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்….
.
ரஜினியின் வெற்றியை வெறும் லக் என்றோ கடவுளின் செயல் என்றோ புறம் தள்ளிடவே முடியாது.. ஒவ்வொரு செயலிலும் அவரின் திட்டமிடல் இருக்கும்… படங்கள் தேர்வு முதல் அது ஓட வேண்டும் என்ற நினைப்பு வரையில் மெனக்கெடல்கள் இருந்து கொண்டே இருக்கும். அதுதான் ரஜினியிசத்தின் ஆரம்பப் புள்ளி.. திராவிடம் உச்சத்தில் இருக்கும் மண்ணில் பட்டையையும் ருத்ராட்சத்தையும் அணிந்து கொண்டு ஆத்திகம் பேசும் தைரியம்தான் ரஜினியிசம்… அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என்ற பெயர்கள் தேர்வு ரஜினியிசத்தின் துணிச்சல் என்றால், பாட்சா எனும் பெயர் தேர்வு ரஜினியிசத்தின் பாய்ச்சல்.

சினிமா எனும் வட்டத்தைத் தாண்டி பொது வெளியில் சமூக பிர்க்ஞையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே அவர் ஜெவை எதிர்த்துக் குரல் கொடுத்தார். அது அரசியல் வெளியில் அவருக்கான இடத்தை உருவாக்கியது.. ஆனால் நேரடியாக நான் வருவேன் என்றோ வரமாட்டேன் என்றோ அறிவிக்காமல் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தன் அரசியல் வருகையை எதிர்பார்க்க வைத்ததுதான் என்னைப் பொறுத்த வரை, ரஜினியிசத்திம் உச்சபட்ச சாதனை என்பேன்… வேறு யாரும் ‘நான் அரசியலுக்கு வருவேன்.. ஆண்டவன் சொன்னால் வருவேன்’ என வெறும் 5 வருடம் கூட பம்மாத்து காட்ட முடியாது… காட்டிவிட்டு தப்பிக்கவும் முடியாது. ரஜினி வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பே இவர் ஏன் இன்னும் வராமல் இருக்கிறார் என்ற கோபமாய் மாறி ரஜினியிசத்தை உயிர்ப்போடு வைதிருக்கிறது.. ரஜினியிசத்தின் இத்தனை பிரம்மாண்ட வளர்ச்சியில் ரஜினி எதிர்ப்பாளர்களுக்கும் முக்கிய இடம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.. எதிர்ப்புதானே மூலதனம்!

கடந்த 25 ஆண்டில் அவர் நடித்த படங்கள் வெறும் 12 மட்டுமே.. அவற்றில் பாபா, லிங்கா என்ற இரு படங்களை திட்டமிட்டு தோல்விப் படங்களாக்கினர். ஆனால் ரஜினியிசம் உச்சம் அடைந்ததும் இந்த 25 ஆண்டுகளில்தான்.. ரஜினியிசம் என்பது அவரின் செயல்பாடுகள் தாண்டி அவரை எதிர்பார்ப்பவர்களின்­ பின் தொடர்பவர்களின் செயல்பாடுளையும் உள்ளடக்கிக் கொண்டதும் இந்த 25 ஆண்டுகளில்தான்..

ஒரு பிம்பம் கட்டமைக்கபடுவது எளிது.. ரஜினியிசமும் அவ்வாறு கட்டமைக்கப்பட்ட பிம்பம்தான் என பலரும் பல்வேறு சூழல்களில் எழுதியிருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர். கட்டமைக்கப்படுகிற பிம்பம் அதற்கான தாங்கு திறன் இல்லை என்றால், அந்த பிம்பத்தை தக்கவைக்கும் திறமை இல்லை என்றால் சீக்கிரமே உடைந்துவிடும். ஆனால்­ ரஜினியிசம் உடையவில்லை… உடைக்கவும் முடியவில்லை. காரணம் நிஜமான திறமை.. பிம்பத்தை சிதையவிடாமல் பார்த்துக்கொள்ளும் திறமை.. ரஜினியிசத்தில் அது ரஜினியாலும் சில சமயம் அவர் ரசிகர்களாலுமே கூட ஈடுகட்டப்படுகிறது.

சரி சினிமாவில் கை கொடுக்கும் ரஜினியிசம் அரசியலில் கை கொடுக்குமா என்றால், கண்டிப்பாக கொடுக்கும். ஏனென்றால் நாளை ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு அவர் பேசும் கருத்துகள், அறிவிக்கும் கொள்கைகள், எடுக்கும் முடிவுகள் அனைத்தும் ரஜினியிசமாகவே பார்க்கப்படும். அவை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கப்பட்டிருக்கலாம்.. ஏன் திராவிடத்தில் இருக்கும் நல்ல கொள்கையைக் கூட அவர் தன் ஆன்மிக அரசியலில் சேர்த்துக் கொள்ளலாம். அப்போது அதுவும் ரஜினியிசமாகவே பார்க்கப்படும். அரசியல் வருகை குறித்த உறுதிப்பாடு, அடிப்படை கட்டமைப்பின் மீது இருக்கும் நம்பிக்கை, எடுத்தோம் கவிழ்த்தோம் என தொடங்காத பொறுமை, தனது நேரத்துக்காக காத்திருக்கும் மன திடம் என ரஜினியிசம் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது.. நாம் அவருடைய ரசிகர்களாக காவலர்களாக அந்த ரஜினியிசத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒரு விதைக்குள்ளே அடைபட்ட ஆல மரம் கண்விழிக்கும் அதுவரை பொறு மனமே என்ற ரஜினியிச பாடல் போலவே காத்திருக்கவும் வேண்டும்.

இந்த 44 ஆண்டு ரஜினியிசத்தை ஒவ்வொரு வருடமும் உற்சாகமாய் கொண்டாடுவோம்.. இன்றும், என்றும் நாளை அரசியலிலும் தனித்துவமாக நம்மை இயங்கவைக்கப் போவதும் இந்த ரஜினியிசம் தான்.. நன்றாக கொண்டாடுங்கள்… லவ்யூ தலைவா!

– ஜெய்சீலன் ஜெய்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *