BREAKING NEWS
Search

ராணாவுக்கு ரஜினி கொடுத்த இன்னொரு அசத்தல் போஸ்- ஸ்பெஷல் படம்!

ராணாவுக்கு ரஜினி கொடுத்த இன்னொரு அசத்தல் போஸ்- ஸ்பெஷல் படம்!

கோச்சடையான் குறித்து மேலும் சில தகவல்கள். ஆனால் ஜூவி உள்ளிட்ட பத்திரிகைகள் வெளியிட்டவைதான். இன்னும் உறுதி செய்யப்படாதவை.

‘ராணா’ படத்தின் முதல் பாகமாக தயாராகிறது, ‘கோச்சடையான்’.

ந்திரன்’ படத்தைவிட அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தில், அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ந்தைக்கு ஜோடி ஷோபனா, தனயனுக்கு தீபிகா படுகோன்.

ங்கை கேரக்டரில்  நடிப்பவர் ‘பொம்மலாட்டம்’ ருக்மணி. அவருக்கு ஜோடி… ஆதி.

றந்துபோன நடிகரை நடிக்கவைக்கும் விஞ்ஞான முயற்சியை படத்தில் செய்கிறார்கள். ஆம், தொழில்நுட்பத்தின் உதவியால், மறைந்த நாகேஷ் நடிக்கிறார். மகன் ரஜினியுடன், ‘காதலிக்க நேரமில்லை’ ஒல்லி நாகேஷூம், அப்பா ரஜினியுடன் ‘பஞ்சதந்திரம்’ நாகேஷூம் நடிக்கிறார்கள்.

வில்லன் ரோலுக்கும் மறைந்த இந்தி நடிகர் அம்ரீஷ்பூரியை இதேபோன்று நடிக்கவைக்க நினைத்தார்களாம். அந்த வேடத்துக்கு இப்போது ஒப்பந்தம் ஆகி இருப்பது ஜாக்கி ஷெராஃப்.

ரித்திர வசனங்களை கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இருக்கிறார்.  டப்பிங் ஸ்டுடியோவில் அந்த வரலாற்று வசனங்களை பல்வேறு ஸ்டைவில் பேசிப் பார்த்து, தனக்கு திருப்தியான ஒன்றைத் தேர்வு செய்திருக்கிறார்.

மார்ச் 19-ம் தேதி லண்டனில் கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இங்கே நீங்கள் பார்ப்பது ராணாவுக்காக தலைவர் கொடுத்த இன்னொரு அதிரடி போஸ்!

-என்வழி




4 thoughts on “ராணாவுக்கு ரஜினி கொடுத்த இன்னொரு அசத்தல் போஸ்- ஸ்பெஷல் படம்!

  1. குமரன்

    நாகேஷுக்கு இந்தப் படத்திலாவது மத்திய அரசின் விருது கிடைக்குமா?

    மிகச் சிறந்த கலைஞர் அவருக்கான சரியான அரசின் அங்கீகாரம் இல்லாமலே போய்விட்டார், ஆனால் மக்கள் மனங்களில் வாழ்கிறார்.

  2. மிஸ்டர் பாவலன்

    ஆரம்ப காலத்தில் KB இயக்கிய படங்களில்
    நாகேஷிற்கு நல்ல பாத்திரங்கள் கிடைத்தாலும்,
    பின்னாள்களில் அவருக்கு நல்ல பாத்திரங்கள்,
    நல்ல இயக்குனர்கள் கிடைக்காமல் போய் விட்டது.
    மக்கள் மனதில் நாகேஷ் என்றும் இருப்பார்.

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  3. RAVI

    இறந்துபோன நடிகரை நடிக்கவைக்கும் விஞ்ஞான முயற்சியை படத்தில் செய்கிறார்கள். ஆம், தொழில்நுட்பத்தின் உதவியால்

    இந்த புதிய முயற்சி வெற்றியடைந்தால் முந்தைய தலைமுறை நடிகர்களையும் கண்டு களிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *