BREAKING NEWS
Search

நடிகர் சங்கத் தேர்தலும் ரஜினியின் நிலைப்பாடும்!

நடிகர் சங்கத் தேர்தல்… ரஜினியின் நிலைப்பாடு இப்போதாவது புரிகிறதா?

thalaivar-spl

மிழ் சினிமாக்களைவிட அவற்றில் நடித்த நடிகர்களின் சங்கத்துக்கு நடக்கும் தேர்தல் கூத்துகள் கடந்த ஆறு மாதங்களாக மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக அமைந்துவிட்டன.

ஆரம்பத்தில் ஏதோ சாதாரண மோதல்தான்… தேர்தல் வரை அப்படித்தான் இருப்பார்கள்.. அப்புறம் சரியாகிவிடும் என்று நினைத்தவர்கள், தேர்தல் நாளான இன்றைய நிலவரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தத் தேர்தல் ஒன்றும் அத்தனை பெரிய விஷயமில்லை. மக்களை பாதிக்கும் சமாச்சாரமில்லைதான். ஆனால் மக்கள் அதை தங்கள் பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். காரணம், தினசரி இவர்களை தங்கள் வீட்டு வரவேற்பறையிலும் படுக்கை அறையிலும் பார்த்துப் பார்த்து தங்களுக்குள் ஒருவராகவே கருதிக் கொண்டிருப்பதுதான். இதுதான் பொதுத் தேர்தலுக்கு இணையாக நடிகர் சங்கத் தேர்தலை மக்கள் நோக்கக் காரணம்.

போகட்டும்…

இந்தத் தேர்தலில் இரண்டு அணிகளாய்ப் பிரிந்து நிற்கிறது நடிகர் சங்கம். ஒன்று இப்போதுள்ள நிர்வாகிகளான சரத்குமார் – ராதாரவி அணி. அடுத்து அவர்களை தீவிரமாக எதிர்க்கும் விஷால் அணி.

இந்த இருவருமே செய்த தவறு என்ன தெரியுமா? தத்தமது பலத்தைக் காட்டுவதற்காக அணிக்கு ஆதரவாளர்களைத் திரட்ட ஆரம்பித்ததுதான்.

நடிகர் சங்கத்தில் மொத்தம் 29 பொறுப்புகள் உள்ளன. இந்த 29 பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர் மட்டும் பிரச்சாரம் மற்றும் தேர்தல் வேலைகளைப் பார்த்திருக்க வேண்டும். மற்றவர்களை நடுநிலையாகச் செயல்பட விட்டிருக்கலாம்.

அதைவிட்டுவிட்டு வெறும் வாக்காளர்களாக மட்டுமே இந்தத் தேர்தலைப் பார்க்கும் பெரிய நட்சத்திரங்களின் ஆதரவைக் கேட்டு அல்லது அவர்களையும் தங்கள் அணி பக்கம் இழுக்க, இப்போது இரண்டாகப் பிளந்து நிற்கிறது நடிகர் சங்கம்.rajini-vishal

இதன் விளைவு, விஷால் அணியைச் சேர்ந்தவர்கள் சரத்குமார் அணியைத் திட்ட, அதைவிட மிகக் கேவலமாகத் திட்டுகிறது சரத்குமார் அணி. ஏதோ தேர்தலுக்குப் பிறகு இவர்கள் பார்த்துக் கொள்ளாமலேயே இருந்துவிடுவார்கள் என்ற ரேஞ்சுக்கு. பொதுத் தேர்தலில் கூட காணமுடியாத அத்தனை காரசாரம், ஆவேசம், ஆபாச சாடல்கள்.. விட்டால் கட்டி உருண்டு அடித்து உதைத்துக் கொள்வார்கள் போல!

இந்தத் தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்ற கேள்விதான், வழக்கம் போல முக்கியத்துவம் பெற்றது. அதுவும் கமல் ஹாஸன் தனது ஆதரவை விஷால் அணிக்கு வழங்கி, நாசரை தலைவராக முன்மொழிய, ரஜினியும் இப்படி ஒரு முடிவை வெளியிடாதது ஏன் என்ற கேள்வியை, நேற்று முளைத்த பேஸ்புக் காளான்கள் கூட கேட்க ஆரம்பித்துவிட்டன. அதாவது ஒரு பெரிய குற்றச்சாட்டாக ரஜினி மீது வைக்கின்றனர்.

அட முட்டாள்களே… ரஜினி ஏன் ஒரு குறிப்பிட்ட அணியை ஆதரிக்க வேண்டும்? தமிழ் சினிமாவின் ‘முதல்வரான’ அவருக்குத் தெரியாத தேர்தலா… சினிமா அரசியலா?

கமல் ஹாஸன் அவசர அவசரமாக விஷால் அணியை ஆதரித்தார். அவருக்குள்ள நெருக்கடி அது. ஆனால் அதைவிட பல மடங்கு அதிகமான நெருக்கடி இருந்தாலும், அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அனைவருக்கும் பொதுவான நண்பராக, மனிதராக, கலைஞனாக தன்னைக் காட்டிக் கொண்டார் ரஜினி. அதுதான் அவரது அரசியல் பக்குவம்.

விஷால் தரப்பு வந்து ரஜினியிடம் ஆதரவு கேட்டது. அவர்களிடம் ஒரு மணிநேரம் பேசி பிரச்சினைகளைக் கேட்டார்.

‘எனக்கு எல்லோரும் பொதுவானவர்கள்தான். தேர்தலில் இளைஞர்கள் நிற்கிறீர்கள். ஆல் த பெஸ்ட்!’ – இதுதான் சூப்பர் ஸ்டார் அவர்களிடம் சொன்னது.

அடுத்து சரத்குமாரும் ராதாரவியும் வந்தனர். பொன்னாடை போர்த்தினர். ‘என்னதான் பிரச்சினை சரத்.. என்னென்னமோ சொல்றாங்களே?’ என்று கேட்டபோது, சரத்குமார் நடிகர் சங்க நிலம், சத்யம் சினிமாஸுடனான ஒப்பந்தம் பற்றியெல்லாம் விளக்கமாகச் சொன்னார். ‘ஓ.. அப்படியா… நல்லது. வாழ்த்துகள்!’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

sarath

இதற்குப் பெயர் நழுவல் என சிலர் அரைவேக்காட்டுத்தனமாக உளறியிருந்தனர்.

இதுவா நழுவல்? இதை ராஜதந்திரம் என்று கூடச் சொல்ல முடியாது. பக்குவமான அணுகுமுறை.

விஷால் – சரத்குமார் அணிகள் இரண்டுமே ஏதோ ஒரு பதட்டத்திலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் உள்ளது. இரு தரப்பையும் தன்னைச் சந்திக்க அனுமதித்து, பொறுமையாகப் பேசி, தேர்தலை ஜனநாயக முறைப்படி சந்தியுங்கள்… வாழ்த்துகள் என்று சொல்லி அனுப்ப எத்தனைப் பக்குவம் வேண்டும்?

விஷால் அணியோ ராதாரவி அணியோ… போய்க் கேட்ட உடனே கமல் மாதிரி உணர்ச்சிவசப்பட்டு ஆதரவை அளித்திருந்தால், எதிர் அணி எத்தனை கோபப்படும்? சக கலைஞர்களின் சண்டையை ஊக்கப்படுத்துவது போல் அமைந்துவிடாதா? கலைஞர்கள் எல்லோரும் தமக்கு வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் தலைவரின் நிலைப்பாடு.

பிரதமர் பதவிக்கான வேட்பாளரான நரேந்திர மோடியே வீடு தேடி வந்து ஆதரவு கேட்டும்கூட, தன் நடுநிலைமையை வெளிப்படையாக நிலைநாட்டியவர், மன உறுதி படைத்தவர் ரஜினியாக மட்டும்தான் இருக்க முடியும்.

அதனால்தான் இரு தரப்புக்குமே தனது ராகவேந்திரா மண்டபத்தை ஆலோசனைக் கூட்டம் நடத்தத் தந்தார்.

தலைவர் சாதாரண மனிதர் அல்ல. சாதாரண நடிகர் அல்ல. இப்போது போட்டியிடுகிறார்களே இரு அணியினர்… அவர்களைவிடப் பொறுப்பும், அந்தத் துறை மீதான பற்றும் அதிகம் கொண்டவர். அதனால்தான் முட்டி மோதி பிரிந்து போகத் துடிக்கும் இந்த சங்கத்தை பொதுவான மனிதராக இருந்து காப்பாற்றப் பார்க்கிறார்.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள். இந்தத் தேர்தலில் எந்த அணி வென்றாலும் தோற்றாலும் தலைவர் கவலைப்படமாட்டார். இந்த இரு தரப்பையும் ஒன்றுபடுத்தி பலமான சங்கமாக்கவே முயற்சிப்பார். ஏனெனில் அந்தத் தகுதி இப்போது அவருக்கு மட்டுமே உள்ளது!

ரஜினியின் நிலைப்பாடு இப்போதாவது புரிகிறதா?

rajini-feat

வினோ
என்வழி ஸ்பெஷல்
17 thoughts on “நடிகர் சங்கத் தேர்தலும் ரஜினியின் நிலைப்பாடும்!

 1. jegan N

  சில அரைவேக்காடுகளுக்கு ரஜினிய திடற்துக்கு காரண்ம் கிடைககாம இப்ப அவர் யாரயும் ஆதரவு குடுக்கல ணு வந்துடடாணுக

 2. மிஸ்டர் பாவலன்

  உலக நாயகன் பாண்டவர் அணிக்கு பெரும் பக்கபலமாகவும், அதன் வழிகாட்டியாகவும் உள்ளார்.

  அஞ்சா நெஞ்சன் கமல் ஜெண்டில்மேன் நடிகர் நாசரை நடிகர் அணியின் தலைவராக முன்னுரைத்ததொடு இளைஞர் அணி ஒற்றுமையுடன் களம் இறங்க தோள் கொடுத்துள்ளார். பாண்டவர் அணி வெற்றி பெற்றால் அதன் முதல் நன்றி உலகநாயகன் கமல் அவர்களுக்கே இருக்கும். பாண்டவர் அணி களத்தில் வெற்றிக்கனி பரித்ததும் சென்ற சங்கத்தினர் செய்த தவறுகளைக் களைந்து நடிகர் சங்கம் சீர்தூக்கி பேர் வாங்க மிஸ்டர் பாவலனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

  நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

  நீதிக்கு இது ஒரு போராட்டம்
  இதை நிச்சயம் உலகம் பாராட்டும்

  நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

  ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
  இயற்கை தந்தப் பரிசாகும்
  இதில்நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
  நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்
  நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
  அல்லதை நினைப்பது அழிவாற்றல்

  நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
  நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 3. MK

  டியர் வினோ ,
  தலைவரின் நாடி துடிப்பை தொட்டு எழுதியது போல் உள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 4. CHOZHAN

  ரஜினி அவர்கள் எடுத்த நிலைப்பாடு மிக மிக சரி, கமல்தான் அரைவேக்காடு அது நீங்கள் சொன்ன மாதிரி எதோ நெருக்கடி, அவர் மிகப்பெரிய சந்தர்ப்பவாதி என்பதை பலமுறை நிருபித்தவர். விஷால் வென்றால் அதற்க்கு பிறகு விஷால், கார்த்தி, சூர்யா, ஞானவேல்ராஜா, உதயநிதி ஸ்டாலின் & கோ இவர்கள் போடும் ஆட்டம் கருணாநிதி & கோ மாறன் & கோ இவர்கள் அனைவரையும் விட மிக பெரியதாக இருக்கும். தமிழே படிக்க எழுத தெரியாதவர் தமிழ் சினி பீல்ட் உயர்த்துபவர். வேடிக்கை, எதிர்காலத்தில் மேற்கண்ட இவர்கள் தான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்

 5. ரஜினி ரவி

  நண்பர் வினோ அவர்களே, நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. இது தெரியாமல் சில அரைவேக்காடுகள் தலைவர் அவர்களை வசைமாரி பொழிய ஒரு சந்தர்ப்பம் அமைந்ததாக கருதினர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஏற்க்கனவே சொன்னது போல “இறைவா, நண்பர்கர்கள் இடமிருந்து என்னை காப்பாற்று” என்ற வசனம் தான் நினைவிற்கு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நல்ல மனதிற்கு ஏற்ப முடிவு அமைந்து உள்ளது. விஷால் அணிக்கு, தலைவர் அவர்கள் தான் முதன் முதலில் நேற்று இரவே வாழ்த்து சொல்லி விட்டார். அது தான் சூப்பர் ஸ்டார். விஷால் அவர்கள் தலைவர் சொன்னது போல “தமிழ்நாடு நடிகர், நாடக நடிகர் சங்கம்” என்று பெயர் மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.
  (நண்பர் வினோ அவர்களே, உங்கள் பொன்னான இந்த கட்டுரையை, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை எதிர்போருக்கு உங்கள் அனுமதியின் பயன்படுத்தி கொள்கிறேன், நன்றி நன்றி நன்றி).

 6. குமரன்

  இரு அணிகளுக்கும் எப்படிச் சங்கம் பொதுவோ அப்படித்தான் சூப்பர் ஸ்டாரும் பொது.

  அதாவது சூப்பர் ஸ்டாருக்கும் சங்கத்துக்கும் வித்தியாசம் இல்லை.

  Rajini is an Institution not an individual. Time alone will make detractors understand the truth.

 7. RAGHURAMAN

  தலைவர் அவர்களின் பாபா, குசேலன், லிங்கா படப் பிரச்சனைகளுக்கு சூப்பர் ஸ்டார் அவர்களே தான் முன் நின்று தனது பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வந்தார். அன்றைக்கு இருந்த நடிகர் சங்கத் தலைமையும் உதவ வில்லை. இன்றைக்கு உள்ள நடிகர் சங்கத் தலைமையும் உதவ முன் வரவில்லை. அவர்கள் தான் பிரச்சனையை பெரிதாக்கி காட்டினர். மேலும், இது என்னவோ தலைவர் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல அமைதியாக இருந்து கொண்டனர். தலைவர் அன்பு ரசிகர்கள் உதவ வந்த போதும் தலைவர் அவர்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். இந்த பெருந்தன்மை வேறு எந்த நடிகனுக்கும் வராது. தனது ரசிகர்களை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தி இருப்பார்கள். இதனால், நடிகர் சங்கம் ஒன்று இருப்பதே தேவை இல்லாத ஒன்று என்பது எனது தனிப்பட்ட கருத்து.
  வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

 8. srikanth1974

  \\இந்தத் தேர்தலில் எந்த அணி வென்றாலும் தோற்றாலும் தலைவர் கவலைப்படமாட்டார். இந்த இரு தரப்பையும் ஒன்றுபடுத்தி பலமான சங்கமாக்கவே முயற்சிப்பார். ஏனெனில் அந்தத் தகுதி இப்போது அவருக்கு மட்டுமே உள்ளது!//

  நூத்துக்கு நூறு உண்மை!

 9. Siva

  மண்டபம் வாடகை விட்டதில் ரஜினிக்கு 9 லட்சம் ரூபாய் வருமானம் என அனைவரும் koorugiraargal….. ஒவ்வொரு அணியும் தலா 4.5 லட்சம் குடுதர்கலாம். எது eppadiyo.. கமல் ரஜினி என்ற இரு வேறு கோஷ்டி மீண்டும் உருவாகாமல் இருந்தால் sari…. மிஸ்டர் பாவலனின் கருது என்ன ?

 10. மிஸ்டர் பாவலன்

  உலக நாயகனிடம் கருத்து கேட்பதில் தவறில்லை..

  தூய தமிழில் குறைந்தது 5 நிமிடம் பேசுவார்..

  ஆனால் அவர் சொல்வது அவரது தீவிர ரசிகர்களுக்கு கூட புரியாது..

  த்ரிஷாவின் அடுத்த பட ரிலீசிற்கு ஆவலாக உள்ளேன். கமல் தீபாவளி
  ரிலீஸ் செய்தால் கலக்கலாக இருக்கும்.. நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *