BREAKING NEWS
Search

3 டியில் உருவாகும் சூப்பர் ஸ்டாரின் ப்ளாக்பஸ்டர் சிவாஜி!

3 டியில் சூப்பர் ஸ்டாரின் ப்ளாக்பஸ்டர் சிவாஜி!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘சிவாஜி – தி பாஸ்’ படத்தை ‘3டி’ தொழில் நுட்பத்தில் உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

வடபழனியில் உள்ள ஸ்டூடியோக்களில் தொழில்நுட்ப நிபுணர்களை வைத்து இதற்கான பணிகள் நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த படம் சிவாஜி. சர்வதேச அளவில் இந்தியப் படங்களுக்கு பெரிய மார்க்கெட்டையும் இந்தப் படம்தான் உருவாக்கிக் கொடுத்தது.

12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான டைட்டானிக் ஆங்கிலப் படத்தை, சமீபத்தில் 3டி தொழில்நுட்பத்துக்கு மாற்றி வெளியிட்டனர். பெரும் வரவேற்பு கிடைத்து. அதே பாணியில், 2007-ல் வெளியாகி வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடி சாதனை படைத்த சிவாஜியை 3டிக்கு மாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தில் ரஜினி, பலவித கெட்டப்புகளில் தோன்றினார். ஸ்ரேயா ஜோடியாக நடித்தார். ஷங்கர் இயக்கினார். ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது.

பணக்காரர்கள் பதுக்கி வைத்த பல ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை மீட்பதே இப்படத்தின் கதை.

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான தியேட்டர்களில் 3டி படங்களை ரிலீஸ் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 டி படங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கின்றனர்.

எனவே தான் சிவாஜி படத்தை 3டி தொழில் நுட்பத்துக்கு மாற்றுகிறார்களாம். ஓரிரு மாதங்களில் 3டி சிவாஜி வெளியாகலாம் என்கிறார்கள்.

கோச்சடையான் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. அதற்கு முன்பு 3டி சிவாஜி படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

என்வழி செய்திகள்




10 thoughts on “3 டியில் உருவாகும் சூப்பர் ஸ்டாரின் ப்ளாக்பஸ்டர் சிவாஜி!

  1. JB

    சூப்பர். இந்த படம் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. ரஜினியை பல்வேறு விதத்தில் காட்டிய ஒரு படம். எந்திரன் ஷங்கர் படம் என்றால் சிவாஜி ரஜினி படம்.

    இதை நான் 3 DVD Boxset ஆகவும் Blu-Ray ஆகவும் வைத்து இருக்கிறேன். 3Dயாக வந்தால், அதையும் வாங்குவேன்.

  2. kumaran

    எவரும் எளிதில் தொடமுடியாத ரெகார்ட் சிவாஜி தி பாஸ் செய்யும்.

  3. Manoharan

    சிவாஜிக்கு பதில் எந்திரனை 3D யில் மாற்றலாம். அருமையாக இருக்கும்.

  4. Sudhagar S.

    good news…awaiting the 3D visual treat…
    unseen thalaivar’s sivaji snap….looks stunning!

  5. குமரன்

    இந்திரன் மட்டும் 3 D யில் வந்தால் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை மீண்டும் ஒருமுறை பாதிக்கும்.

  6. குமரன்

    இந்திரன் மட்டும் 3 D யில் வந்தால் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை மீண்டும் ஒருமுறை பதிக்கும்.

  7. prakash

    சூப்பர் still. Particular scene where thalai talks about black money and followed by first office room scene. Endhiran will be the next 3D especially climax will be a treat to watch

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *