BREAKING NEWS
Search

டோக்கியோ திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி – தி பாஸ்!

டோக்கியோ திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி – தி பாஸ்!

சிவாஜி – தி பாஸ்… பொழுது போக்கின் உச்சமாகப் பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த மெகா ஹிட் படம்தான் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ரஜினியின் சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என்று பிரித்துக் கொள்ளலாம்.

ஒரு படத்தை எப்படி மார்க்கெடிங் செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தது இந்தப் படம்தான்.

வெளிநாடுகளில் இந்திய சினிமா பற்றிய பார்வையை மாற்றியது. தமிழ் சினிமாவை உலகளவுக்கு எடுத்துச் சென்றது என பல பெருமைகள் கொண்ட படம் சிவாஜி.

ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளியாகி தமிழ், தெலுங்கு, இந்தி என அத்தனை ஏரியாக்களிலும் அதிரடி வசூல், ஏராளமான விருதுகளைக் குவித்த இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது மேலும் ஒரு பெருமையாக டோக்கியோ நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

ஏற்கெனவே எந்திரன் ஃபீவரில் இருக்கும் ஜப்பானிய ரசிகர்களுக்கு, ‘முத்து மகாராஜா’ ரஜினியின் சிவாஜி படம் திரையிடப்படும் செய்தி மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளது.

செப்டம்பர் 14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் இந்த விழா நடக்கிறது. இந்த மூன்று நாட்களுமே சிவாஜி திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள படத்தின் நாயகி ஸ்ரேயா டோக்கியோ செல்கிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை எம்எஸ்ஜி ஜப்பான் கார்ப்பொரேஷனின் கணேஷ் ஹரி நாராயணன் செய்து வருகிறார்.

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “டோக்கியோ திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி – தி பாஸ்!

  1. vasanthan

    விரைவில் ஜப்பான் திரையரங்குகள் அதிர வைப்பன் இந்த பாஸ் ,எப்பவோ ஜப்பானில் திரையிட வேண்டிய படம் ,ஆனால் ஏவிஎம் ஏற்கனவே வந்த வசூலில் முக்கடைத்து விட்டது.

  2. vijay

    please note the date of the festival. Anything strikes you all? yes ,it may be the time for Kochadaiyaan audio release.They were planning to release in Tokoyo. Double treat for Japan fans. This may be the time they were palnning.

  3. vasanthan

    எப்பவோ ஜப்பான்ல அதிர வேண்டியது ,தலைவர் உட்பட யாரும் அங்கு திரையிட அக்கறை காட்டவில்லை,(அவனவன் எப்படியோ எல்லாம் அலையிறான் புகழுக்காக**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *