BREAKING NEWS
Search

இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர்தான் பாத்தா அசந்துடுவீங்க! – சௌந்தர்யா ரஜினி

இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர்தான் பாத்தா அசந்துடுவீங்க! – சௌந்தர்யா ரஜினி

rajini-trailer
 
சென்னை: நேற்று நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் காண்பிக்கப்பட்ட படத்தின் ட்ரைலர் மற்றும் ரஜினியின் சில நிமிட ருத்ர தாண்டவக் காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

கோச்சடையான் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கார்ட்டூன் மாதிரி இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின.

இது டீசர்தான்… அதுவும் ரஜினி வாய்ஸ் கூட கிடையாது. மெயின் ட்ரைலர் கலக்கலாக வரும் என்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தெரிவித்திருந்தார்.

தான் சொன்னபடியே ட்ரைலரில் அசத்தியிருந்தார் சவுந்தர்யா. கோச்சடையான், ராணா என இரண்டு பாத்திரங்களையுமே வித்தியாசப்படுத்திக் காட்டியிருந்த சவுந்தர்யா, இளம் ரஜினியை வியப்பூட்டும் வகையில் வடிவமைத்திருந்தார்.

சண்டைக் காட்சிகளும், ரஜினியின் குரலும் அந்த ட்ரைலரின் சிறப்பு அம்சங்களாக அமைந்தன.

அடுத்து ரஜினியின் ருத்ரதாண்டவக் காட்சியை மட்டும் தனியாக போட்டுக் காட்டினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துறையினரும் பிரமித்துப் போனார்கள். அனிமேஷனில் இத்தனை கச்சிதமாக ருத்ரதாண்டவ காட்சிகளை வடிவமைத்த சவுந்தர்யாவைப் பாராட்டினார்கள்.

பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, ‘இதுதான் அனிமேஷன் சாதனை. இவ்வளவு காலம் ஆனதற்கு காரணம் இதுபோன்ற பர்பெக்ட்னஸ் வர வேண்டும் என்பதுதான். நீங்கள் ட்ரைலர்தான் பார்த்திருக்கிறீர்கள். மெயின் பிக்சர் பார்த்தால் இன்னும் பிரமிப்பீர்கள்,” என்றார்.

ட்ரைலர்

-என்வழி




4 thoughts on “இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர்தான் பாத்தா அசந்துடுவீங்க! – சௌந்தர்யா ரஜினி

  1. குமரன்

    வாழ்த்துக்கள் சௌந்தர்யா …..

    அண்மைச் செய்தி …….

    ரஜினியின் கோச்சடையானை பார்க்க ஆசைப்பட்ட அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்!

    உலக அளவில் முதன்முறையாக மோஷன் கேப்சர் முறையில் அவதார் படத்தை எடுத்து சாதனை நிகழ்த்தியவர் ஜேம்ஸ் கேமரூன். 237 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஐந்து ஆண்டுகளாக இப்படம் உருவாக்கப்பட்டது. ஆனால், 3000 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது இப்படம். இப்படம் உருவான மோஷன் கேப்சர் டெக்னாலஜியை தழுவித்தான் ரஜினி நடித்துள்ள கோச்சடையானும் உருவாகியிருக்கிறது. ஆனால் 125 கோடி பட்ஜெட்டில் 2 வருடங்களில் படத்தை முடித்துள்ளார்கள். இப்படியொரு படம் இந்தியாவில் உருவாகியிருக்கிற விசயம் ஜேம்ஸ் கேமரூனுக்கு தெரிந்ததையடுத்து, கோச்சடையான் படத்தை தான் பார்க்க வேண்டும் என்று படத்தின் டைரக்டரான செளந்தர்யாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளாராம் அவர். அதைத் தொடர்ந்து, தற்போது படத்தை ஏப்ரலில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையிலும், விரைவில் ஜேம்ஸ் கேமரூனுக்கு கோச்சடையானை திரையிட்டு காண்பிக்கவும் முடிவு செய்திருக்கிறார் செளந்தர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *