BREAKING NEWS
Search

ரசிகர்கள் எதிர்ப்பு… செய்தியைத் திருத்தி வெளியிட்ட என்டிடிவி.. ஆனாலும் திருந்தாத தமிழ் ஊடகங்கள்!

ரசிகர்கள் எதிர்ப்பு… செய்தியைத் திருத்தி வெளியிட்ட என்டிடிவி.. ஆனாலும் திருந்தாத தமிழ் ஊடகங்கள்!!

Rajini -fans

சிகர்கள் எதிர்ப்பு மற்றும் கருத்துகளைப் பார்த்த பிறகு, தங்கள் இணைய தளத்தில் வெளியிட்ட தலைவர் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்தியை மாற்றி வெளியிட்டது என்டிடிவி.

தொலைக்காட்சி செய்தியிலும் இதேபோல மாற்றம் செய்தது.

வியாழக்கிழமை காலை கோவாவுக்கு வந்த ரஜினியிடம், அரசியல் பிரவேச திட்டம் எதுவும் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார் என்டிடிவியின் பெண் நிருபர்.

உடனே ரஜினி, ‘இல்லை.. அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை,’ என்று கூறினார்.

ஆனால் அந்த பதிலை, ‘ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டேன்’ என்று கூறிவிட்டதாக திரித்து ஒளிபரப்பினர். அந்த தொலைக்காட்சியின் செய்தி இணைய தளத்திலும் இதே போல தவறான செய்தியை வெளியிட்டிருந்தனர். ஆனால் அந்த தொலைக்காட்சியின் வீடியோவில் ரஜினி என்ன பேசினார் என்பது தெளிவாக இருந்தது.

முதலில் வெளியிட்டது..

முதலில் வெளியிட்டது..

இதைத் தொடர்ந்து என்வழியில் இதுகுறித்த எதிர்ப்பைப் பதிவு செய்து அதை என்டிடிவிக்கு அனுப்பி வைத்தோம். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் உள்ள என்டிடிவியின் பக்கங்களில் அவர்களின் தவறைச் சுட்டிக் காட்டினோம். நம்மைப் போலவே ஏராளமான ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பு மற்றும் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு தொலைக்காட்சி செய்தியில் தவறாக ஒளிபரப்பப்பட்டு வந்த ரஜினியின் அரசியல் பற்றிய பதிலை நீக்கிவிட்டு, அவர் அமிதாப்புடன் நடிப்பது குறித்த கேள்விக்கு அளித்த பதிலை ஒளிபரப்பினர்.

திருத்தப்பட்ட செய்தி

திருத்தப்பட்ட செய்தி

இதே போன்ற மாற்றம் அவர்களின் இணையதளத்திலும் இடம்பெற்றது.

ஆனால் இந்த என்டிடிவி முதலில் வெளியிட்ட தவறான செய்தியை பிடித்துக் கொண்ட தமிழின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் சில இணையதளங்கள், ‘ரஜினி அரசியலுக்கு முழுக்கு’ என்று போஸ்டர் அடித்து செய்து வெளியிட்டுவிட்டன.

குறைந்தபட்சம், நடந்தது என்ன? ஒரு தகவலின் நம்பகத் தன்மை, உண்மை என்னவென்று கூட விசாரிக்காமல், உறுதிப்படுத்திக் கொள்ளாமல், அவசர கோலத்தில் செய்தி வெளியிடும் இந்த பத்திரிகைகளை, இணைய தளங்களை என்னவென்பது?

உள்ளடக்கமும் திருத்தப்பட்டது...

உள்ளடக்கமும் திருத்தப்பட்டது…

நாம் முன்பே கூறியதுபோல, மீடியா பிழைப்பு அவர்களின் தவறான அணுகுமுறைகளால் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

என்டிடிவியாவது பரவாயில்லை.. தலைவரை பலமுறை தேசிய அளவில் கவுரவப்படுத்தியவர்கள். செய்தது தவறு என்பது புரிந்து உடனே திருத்திக் கொண்டார்கள். ஆனால் இங்குள்ள தமிழ்ப் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் தெரிந்தே ரஜினி பற்றி தவறாகவே எழுதி வருகின்றனர். அவர் சொல்வதைத் திரித்துக் கூறி வருகின்றனர். ஒரு நாளும் அதைத் திருத்திக் கொள்ளக் கூட முயன்றதில்லை.

maalai-1

இதுதான் தமிழ்ப் பத்திரிகைகளின் தர்மம்!

இவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையும் நமக்கில்லை. காரணம் பத்திரிகையாளர் என்பதை  இவர்கள் பிழைப்பாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டதுதான்!

என்வழி ஸ்பெஷல்
8 thoughts on “ரசிகர்கள் எதிர்ப்பு… செய்தியைத் திருத்தி வெளியிட்ட என்டிடிவி.. ஆனாலும் திருந்தாத தமிழ் ஊடகங்கள்!

 1. S MANIKANDAN

  Thanks to NDTV for correcting their false news on Superstar’s political stand. Even a North Indian media understand the value of Superstar and the emotions of his fans! But the media in tamilnadu focus only on their business by always using superstar’s name for any reason. They do not have any media ethics.

 2. anbudan ravi

  இது போன்று திருத்தி செய்தி வெளியிட்டு பிழைப்பு நடத்துவதைவிட பேசாமல் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தலாம் மாலை மலர் போன்ற பத்திரிக்கைகள். பொய் செய்தி வெளியிடுவதா பத்திரிகை சுதந்திரம். ரசிகர்கள் அனைவரும் இணைந்து தங்கள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

  பொய்யான செய்தியை என்.டி.டிவி-க்கு எடுத்து சொன்ன என்வழி மற்றும் வினோவின் முயற்சிகள் அளப்பரியாதவை. உங்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்புடன் ரவி.

 3. கணேசன் நா

  //பொய்யான செய்தியை என்.டி.டிவி-க்கு எடுத்து சொன்ன என்வழி மற்றும் வினோவின் முயற்சிகள் அளப்பரியாதவை. உங்களுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

  நாமும் வழிமொழிகிறோம். நன்றிகள் பல………………………………….. வினோ சார்.

 4. srikanth1974

  திரு.வினோ சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  உண்மை ஒருநாள் வெல்லும் -இந்த
  உலகம் உன்பேர் சொல்லும்

 5. M.MARIAPPAN

  நன்றி MR . வினோ , இதே மாதிரி மத்த பத்த்ரிக்கைகளும் தலைவரை பத்தி தப்பா எழுதுகிறார்களே அவங்களையும் ஏதாவது பண்ணலாமா?.

  ___________

  திருந்தவே மாட்டேன் என அடம்பிடிக்கும் ஜென்மங்களிடம் சொல்லி என்ன பயன் மாரியப்பன்? நம்ம தமிழ்ப் பத்திரிகைகள் பெரும்பாலும் அரைவேக்காடுகள். சொன்னாலும் கேட்க மறுப்பவர்கள்.
  -என்வழி

 6. குமரன்

  இவர்கள் திருந்தமாட்டார்கள்.

  மாலைமலர், சில மாதங்களுக்கு முன்னர் மீனவர்கள் விஷயத்தில் விஷமத் தனமான செய்தியை வெளியிட்டது.

  இப்போது சில பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் பணம் சம்பாதிக்க செய்திகளைத் திரித்து வெளியிடும் உத்தியைக் கொண்டுள்ளனர். அதில் மாலை மலரும் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *