BREAKING NEWS
Search

’20 ஆண்டு ரஜினி அரசியல் பட்டிமன்றத்துக்கு விடை தரும் சந்திப்பு இது!’ – தமிழருவி மணியன்

இனி கேள்விக்கே இடமில்லை… ரஜினியின் அரசியல் ஆரம்பம்!

Rajini-Tamilaruvi

சென்னை: இந்த மாத இறுதியில் மீண்டும் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள 6 நாட்கள் ஒதுக்கியுள்ளார் தலைவர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பு 20 ஆண்டு ரஜினி அரசியல் பட்டிமன்றத்துக்கு விடை தரும் சந்திப்பாக அமையும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் கடந்த மே மாதம் 15 மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்களிடையே பேசிய ரஜினி அரசியலுக்கு வரத் தயாராகிவிட்டதை அறிவித்தார்.

அன்றிலிருந்து பல அரசியஸ் கட்சிகளுக்கு தூக்கம் போனது. திடீர் அரசியல்வாதிகள் சிலர் முளைத்தனர். ட்விட்டர், சமூக வலைத்தளங்கள், டிவி சேனல் விவாதங்களில் பலரும் ரஜினிக்கு எதிராக உளறிக் கொட்டினர். ரஜினி வந்தால் நிச்சயம் முதல்வர் ஆகிவிடுவார், அதற்கு நாங்கள் விட மாட்டோம் என்று மூக்கைச் சிந்தினர்.

ஆனாலும் ரசிகர்களில் ஒரு பகுதியினர் மற்றும் பொது மக்களுக்கு ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து சில சந்தேகங்கள் தொடர்ந்தன. இதனைப் போக்கும் வகையில், ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்யும் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் தமிழருவி மணியன். அந்தக் கூட்டத்துக்கு யாருமே எதிர்பாராத வகையில் பெருந்திரளான மக்கள் குழுமி அதிர வைத்தனர்.

இதையெல்லாம் பார்த்த கமல் ஹாஸன், ரஜினிக்கு முன் நான் வருகிறேன் அரசியலுக்கு என பிக் பாஸிலும் ட்விட்டரிலும் மல்லுக் கட்ட ஆரம்பித்தார். ரஜினியோ 5 மாதங்கள் அமைதி காத்தார்.

இப்போது தனது அடுத்த கட்ட நகர்வை அறிவிக்கத் தயாராகிவிட்டார். இதுகுறித்து ரஜினியின் நெருங்கிய நண்பரான தமிழருவி மணியன் கூறுகையில், “20 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற பட்டிமன்றம் நிகழ்ந்து வருகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தரக்கூடிய வகையில் வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையிலான ரசிகர்கள் சந்திப்பு இருக்கும். நிச்சயம் அறிவிப்பு அந்த 6 நாள்களில் ரஜினிகாந்த் தமிழகத்தின் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்க போகும் செய்தியை அவர் மிக நிச்சயம் அறிவிப்பார்.

இனி ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விக்கு இடமே இல்லை. இதை என்னால் உறுதியாக கூறமுடியும். இடைத்தேர்தலை மட்டுமே சந்திக்கக் கூடிய ஒரு வேட்பாளராக ரஜினிகாந்த் தன்னை முன்னிறுத்துகிற மனிதர் இல்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நல்ல ஒரு அரசியலை வளர்த்தெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால்தான் அவர் தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது என்று கூறியிருந்தார்,” என்றார்

சரிதான்… இனி நிரந்தரமாக தூக்கம் போய்விடும், தமிழ்நாட்டு அரசியல்வியாதிகளுக்கு!

– என்வழி
3 thoughts on “’20 ஆண்டு ரஜினி அரசியல் பட்டிமன்றத்துக்கு விடை தரும் சந்திப்பு இது!’ – தமிழருவி மணியன்

  1. jegan

    He should enter politics…vetriyum tolviyum talaivar parthuvittar arasiyalilum avar eedupattu vetrikanavendum

  2. S Venkatesan

    இந்த முறை தலைவர் பிறந்த நாளின் போது ரசிகர்களிடம் எனர்ஜி லெவல் ரொம்ப அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

  3. Suresh

    நிரந்தரமாக தூக்கம் போகணும் , தமிழ்நாட்டு அரசியல்வியாதிகளுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *