BREAKING NEWS
Search

சிவகார்த்திகேயன், லிங்குசாமிக்காக பெயரை விட்டுத் தந்த ரஜினி!

சிவகார்த்திகேயன், லிங்குசாமிக்காக பெயரை விட்டுத் தந்த ரஜினி!

thalaivar-rajini

ஜினி முருகன்… இந்த தலைப்பே படத்தை எந்த அளவுக்கு பரபரப்பாக்கும் என்பது தெரியும். உண்மையில் அந்தத் தலைப்பு மட்டுமே படத்தை பெரும் விலைக்குப் போக வைத்திருக்கிறது.

எந்த நடிகரும், வேறு யாரும் தனது பெயரை விளம்பரத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காத சூப்பர் ஸ்டார் ரஜினி, முதல் முறையாக தனது ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் லிங்குசாமிக்காக அனுமதி கொடுத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஒரு இந்திப் பட தலைப்பில் தலைவர் பெயரைப் பயன்படுத்த உயர்நீதிமன்றத்தில் அவர் தடை பெற்றது நினைவிருக்கலாம்.

லிங்குசாமியைப் பொருத்தவரை இந்தத் தலைப்பு, கிட்டத்தட்ட ரஜினியின் கால்ஷீட் கிடைத்ததற்கு சமம். காரணம் நடந்திருக்கிற வியாபாரம் அப்படி.

அஞ்சான், உத்தம வில்லன் ஆகிய இரண்டே படங்களில் தன் மொத்த சொத்தையும் இழந்து பெரும் கடனாளியாக நிற்கும் லிங்குசாமிக்கு, ரஜினி முருகன் அந்த அளவுக்கு கைகொடுத்திருக்கிறது. ரஜினி முருகன் என்பதற்கு பதில் வேறு ஏதோ ஒரு முருகன் என்று தலைப்பு வைத்திருந்தால், இந்தப் படம் போனியாகியிருக்குமா என்பதே சந்தேகம்தான். அதை லிங்குசாமியே ஒப்புக் கொள்கிறார்.

இந்தப் படத்தின் தலைப்புக்காக ரஜினியிடம் பேசிய அனுபவத்தை ரஜினி முருகன் பிரஸ் மீட்டில் இப்படிச் சொன்னார் லிங்குசாமி:

“எடுத்த எடுப்பிலேயே இப்படத்திற்கு ரஜினி முருகன் என்ற தலைப்புதான் வைத்தோம். தலைப்பில் ரஜினி சார் பெயர் இருப்பதால், ரஜினியிடம் இத்தலைப்பு குறித்து கூறிவிடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்டோம். அவர் இதற்கெல்லாம் ஏன் நேரில் வரவேண்டும், போனில் கூறுங்கள் என்றார்.

DCIM (193)

பின்னர் அவரிடம் நாங்கள் தயாரிக்கும் படத்திற்கு ‘ரஜினி முருகன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் உங்கள் பெயருக்கு இழிவு ஏற்படும் வண்ணம் நாங்கள் ஏதுவும் காட்சிகள் வைக்கவில்லை. உங்கள் பெயருக்கு எந்த அவப்பெயரும் வராது என்று சொல்ல ஆரம்பித்தேன். அதற்குள் அவர், “எதுவும் சொல்லவேண்டாம். உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது.. உங்களுக்கு உதவினால் சரி,’ என்று கூறி தலைப்பை வைத்துக் கொள்ளச் சொன்னார்.

அவரது நம்பிக்கையை இந்தப் படம் நிச்சயம் காப்பாற்றும்,” என்றார்.

ம்ம்.. எல்லாரும் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என மல்லுக்கு நிற்கிறார்கள். சிவகார்த்தி அந்த ரூட்டுக்கு மாறாமலிருக்கும் வரை அவருக்கு நல்லது!

-என்வழி ஸ்பெஷல்




2 thoughts on “சிவகார்த்திகேயன், லிங்குசாமிக்காக பெயரை விட்டுத் தந்த ரஜினி!

  1. kannadasan.k

    facebookil kamalhaasan records entra account ullathu.athil rajini patrium,avarin padangal patrium tharakuraivana vimarsanangal thodarnthu idam perukintrathu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *