BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் லிங்கா! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் லிங்கா! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

unnamed (1)

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிவிட்டது.

ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்து சில தினங்களுக்கு முன் என்வழி செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இன்று அந்தப் படம் குறித்து தலைவர் தரப்பிலிருந்தே அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இன்று ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் லிங்கா என தலைப்பிடப்பட்டுள்ளது. கே எஸ் ரவிக்குமார் இயக்க, ராக்லைன் வெங்கடேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் படத்தின் டிசைன் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆங்கிலத்தில் சாதாரணமாக வடிவமைக்கப்பட்ட ஒரு படத்தை மட்டும் வெளியிட்டுள்ளார். அதில் கேஎஸ் ரவிக்குமார், ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, ஏஆர் ரஹ்மான் படங்கள் இடம் பெற்றுள்ளன.

sonakshi-3 copy

லிங்கா படப்பிடிப்பு வரும் மே 2-ம்தேதி மைசூரில் தொடங்குகிறது. ரஜினி – சோனாக்ஷி சின்ஹா தொடர்பான காட்சிகள் முதலில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக பிரமாண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

-என்வழி ஸ்பெஷல்
14 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் லிங்கா! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 1. M.MARIAPPAN

  படம் ஹிமாலய வெட்சி பெற வாழ்த்துகிறேன் , என்றும் தலைவரின் முரட்டு ரசிகன் .

 2. srikanth1974

  லிங்கா லிங்கா காலிங்கா

  நல்ல பெயர் தலைவரோட இரண்டாவது பேரனின் பெயர்.

 3. saktheeswaran

  தலைவரின் அடுத்த படைப்பான லிங்கா மாபெரும் வெற்றி அடைய இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்

 4. anbudan ravi

  மகிழ்ச்சியில் மனம் துள்ளி குதிக்கிறது தலைவா…..இதைவிட வேறு எதுவும் எங்களுக்கு தேவை இல்லை.

  அன்புடன் ரவி.

 5. Marthu

  லிங்கா…

  னேற்றே இதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என நினைத்திருந்தேன், இன்று அறிவிப்பு வந்து விட்டது…

  “லிங்கா” மிக மிக அருமையான பெயர்…

  இறைவனை வேண்டுவதெல்லாம் லிங்கா…பாட்ஸா, அண்ணாமலை, மன்னன் மற்றூம் மூன்றுமுகம் போன்ற சூப்பர் கிட்டுகளை விட சூப்பராக இருக்க வேண்டும்…

  சங்கரிடம் கூட ஒரு குறை உண்டு..சிவாஜியிலும் ரோபோவிலும் அவர் ட்ச் அதிகம் இருக்கும் ஆனால் நம் தலைவரின் டச் குறைவாக காணப்படும்….இன்ட்ர்ரொ சீன் அவ்ளோ கெத்தாக இருக்காது…ஆனால் கேஎஸ் பின்னீடுவார் பின்னி…

  அய்யோ முதல்நாள் முதல் சோ…இப்பவே புல் அரிக்குது…

  இன்னொறு விசயம் 20 வருடம் கழித்து இன்னொரு லிங்கா வருதுடா…எங்க அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான்டா….அவர் நிச்சிய்மாக் எங்கள் தலைவனின் செராக்ஸ் தான்டா..

 6. kumaran

  கடவுள் அருளலால் , நல்லது நடக்கட்டும் .

 7. Marthu

  கார்ட்டூன் படம்ன்னு கிண்டலா பண்ணுறீங்க…இதோ சிவனின் லிங்காவதாரமெடுத்து எங்கள் சிங்கம் கிளம்பிவிட்டது….படம் ரிலீசாகும் பொழுது தெளிவா எஸ்ஸாயிரனும் ஓகேவா…

  இன்னொறு கொசுறு செய்தி…எஙகள் கோச்சடையான் வசூலில் சாதனைபடைக்கும் பாரீர்

 8. Jayakumar

  லிங்கா…. பேர கேட்ட உடனே சும்மா அதிருது இல்ல?

 9. மிஸ்டர் பாவலன்

  லிங்கா படம் பேர் நல்லா இருக்கு. பொதுவாக
  ரஜினிக்கு “மூன்றெழுத்து” படங்கள் நல்ல ஹிட்
  மூவி ஆகி இருக்கு. பாட்ஷா, முத்து.. மாதிரி..
  இந்த வரிசையில் லிங்கா-வும் சேர வாழ்த்துக்கள்..

  படத்திற்கு கதை கே.எஸ். ரவிக்குமாரே எழுதினால்
  நல்லது. படையப்பா படத்திற்கு கதை ரொம்ப சூப்பர்.
  படையப்பா ‘intro scene , climax ‘ இரண்டும் மறக்க முடியாது.
  முத்து படமும் KSR நன்றாக செய்திருந்தார். நன்றி

  -=== ம்சிடர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *