BREAKING NEWS
Search

ரஜினி பிறந்த நாள் விழா: திருப்பூரை திகைக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் ரசிகைகள் ‘மாநாடு’!

திருப்பூரில் சூப்பர் ஸ்டாரின் மகளிர் ரசிகைகள் நடத்திய ‘மாபெரும் மாநாடு’!


ளுங்கட்சியே முன்னின்று அழைத்திருந்தால் கூட அவ்வளவு பெண்கள் திரண்டு வந்திருப்பார்களா… என்று கேட்கும் அளவுக்கு அமைந்துவிட்டது, சமீபத்தில் திருப்பூரில் நடந்த ‘மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’ நடத்திய நலத்திட்ட உதவி விழா.

கிட்டத்தட்ட ஒரு மாபெரும் மகளிர் மாநாடு மாதிரி அத்தனை ஒழுங்குடன் நடத்தப்பட்ட இந்த விழாவில், ரஜினியின் 62வது பிறந்த நாளையொட்டி ஏராளமானோருக்கு இலவச உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் மனித தெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொது நல இயக்கம் நடத்தி வரும் ரஜினி ரசிகர் எஸ் எஸ் முருகேசன், மகளிருக்கென்று உருவாக்கிய அமைப்புதான் இந்த ‘மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’.

இதன் 15 வது ஆண்டு விழாவில்,  63 பேருக்கு தலா 2 சென்ட் நிலமும், 50 பேருக்கு கை ராட்டைகளும், 25 பேருக்கு தையல் எந்திரங்களும், 200 பேருக்கு 25 கிலோ அரிசி மற்றும் 1 மாதத்துக்கான மளிகைப் பொருள்களும் உதவியாக வழங்கப்பட்டன.


இந்த விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் ஆதனூர் ஜமீனைச் சேர்ந்த சாந்தி வானவராயர். தலைவர் ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமான வானவராயரின் மனைவி.

விழாவுக்கு வந்த பெண்கள் கூட்டம் திருப்பூரையே அதிர வைத்தது என்றால் மிகையல்ல. வந்திருந்த பெண்களுக்கு 8500 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் அதைவிட இருமடங்கு கூட்டம் திரண்டது விழாவுக்கு.

விழாவில் பேசிய சாந்திய வானவராயர், “ரஜினிகாந்த் மிகச் சிறந்த மனிதாபிமானி. இது ரஜினி விழா என்பதால்தான் வந்தேன். ரஜினியைப் போலவே அவரது ரசிகர்களும் பரந்த மனம் படைத்தவர்களாக, நல்ல மனிதாபிகளாக இருப்பது பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அவர் இன்னும் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து இந்த சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும்,” என்றார்.

ஒரு அங்குல நிலம் என்றாலும், மிகவும் காஸ்ட்லியாகிவிட்ட இந்த நாளில், ஏழைகளுக்கு தலா 2 சென்ட் நிலம் வழங்கியுள்ள ரஜினி ரசிகர் முருகேசனை என்னவென்று சொல்வது!

இலவச வீட்டு மனை…

தையல் எந்திரம்..

கை ராட்டைகள்…

 

இலவச அரிசி, மளிகைப் பொருள்கள்…

…’தங்கமகனு’க்காக திரண்ட தாயன்பு!

-என்வழி ஸ்பெஷல்




7 thoughts on “ரஜினி பிறந்த நாள் விழா: திருப்பூரை திகைக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் ரசிகைகள் ‘மாநாடு’!

  1. enkaruthu

    கலக்கிடீங்க திருப்பூர் நண்பர்களே குறிப்பாக தாய்மார்களே. இந்த விழாவுக்கு மேலும் தலைவர் கட்சி ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று யாருக்காவது சந்தேகம் வருமா.

  2. r.v.saravanan

    சும்மா அதிருதில்லே இது தலைவர் டைலாக்

    இங்கே நிஜமாகவே அதிர வைத்திருக்கிறார்கள் நம் ரசிக தோழர்கள்
    வாழ்த்துக்கள் நண்பர்களே

  3. parthiban

    ithu anbala serntha kootam, thani samrajyam,

    thalaivar vazhga

    with love

    Parthi the boss (Endrum super star path)
    Mobile:- 9994019552
    (thalaiva unga kitta pesa asaiya irukku,enakku unga phone no email pannunga)

  4. parthiban

    ithu anbala serntha kootam, thani samrajyam,

    thalaivar vazhga

    with love

    Parthi the boss (Endrum super star path)
    Mobile:- 9994019552
    (thalaiva unga kitta pesa asaiya irukku,enakku unga phone no email pannunga please please please please)

    thanks to envazhi viewers

  5. Jeeva

    இப்படி ஒரு உண்மையான மாநாட்டை எந்த கட்சியாலும் நடத்த முடியாது
    இது தலைவரின் அன்பு சாம்ராஜ்யம்,
    திருப்பூர் மகளிர் ரஜினி ரசிகைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை
    தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .
    இப்படிக்கு
    ரஜினி ஜீவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *