BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் – ஒரு முன்னோட்டம்

ரஜினியின் கோச்சடையான் – ஒரு முன்னோட்டம்

rana copy1

கோச்சடையான் பொங்கலுக்கு வருகிறது…. இல்லையில்லை, ஜனவரி 26-க்கு வருகிறது… அட அதெல்லாம் இல்லப்பா, ஏப்ரல் 14 கன்பர்ம்…

-இப்படி இணையங்களிலும் பத்திரிகைகளிலும் ஏராளமான யூகங்கள் கோச்சடையான் வெளியீடு குறித்து.

ஆனால் ஆதாரப்பூர்வமாக தெரிய வந்தது, யார் படத்துக்கும் பாதிப்பு இல்லாத தேதியாகப் பார்த்து, பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் படத்தை வெளியிடுங்கள் என ரஜினி சொன்னதுதான்.

இந்த நிலையில், இந்திய சினிமா சரித்திரத்தில் முக்கிய இடம்பெறவிருக்கும் வரலாற்றுப் படமான கோச்சடையான் குறித்த ஒரு விரிவான முன்னோட்டம்…

யார் இந்த கோச்சடையான்?

‘கோச்சடையான்’ தென் தமிழகத்தை ஆண்ட சங்க கால தமிழ் மன்னன். அவரது மகன் ராணா. அப்பா வீராதி வீரர்… மகன் ராணாவோ, வீரமும், நடனமும் கைவரப் பெற்றவன்.

தமிழ் மன்னன் கோச்சடையானின் ஆதிக்கம் அன்றைக்கு மராட்டியம் வரை பரவியிருந்தது. அவரது மேலாட்சியை ஏற்று மற்ற நாட்டு மன்னர்கள் கப்பம் செலுத்தி வந்தனர். இந்த மன்னனின் ஆட்சிக்காலத்தில் பகைவர்களுடன் நடந்த போர்களும், மன்னர் குடும்பத்துக்குள் நடந்த பாசப் போராட்டங்களையும் மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இரு வேடங்கள்

இந்தப் படத்தில் தந்தை கோச்சடையான் & மகன் ராணா என இரு வேடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ளார். பொதுவாகவே இரட்டை அல்லது மூன்று வேடங்கள் கொண்ட கதைகளி ஊதித் தள்ளிவிடுபவர் ரஜினி.

படத்தில் ராணாவின் வீரதீர சாகஸங்கள் இருக்கும் என்றாலும், படம் முழுக்க ஆதிக்கம் செலுத்தும் பாத்திரம் தந்தை கோச்சடையானுடையது என்கிறார்கள் படம் பார்த்தவர்கள். மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள, அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்கே சென்று ‘கோச்சடையான்’ மீட்கும் காட்சி அரங்குகளை அதிரவைக்கும் என்கிறார்கள்.

ராணாவின் ஆக்ஷன் ஆட்டம்

rana2 copy
இரண்டாம் பாதியில் ராணாவின் ஆக்ஷன் ஆட்டம் இதுவரை எந்தப் படத்திலும் பார்க்காத அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளதாம்.

‘கோச்சடையான்’ ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே,  ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி, கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி, வில்லனாக ஜாக்கி ஷெராப், ராஜகுருவாக நாசர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ருத்ர தாண்டவம்

சிவபெருமானின் ருத்ர தாண்டவ நடன அடிப்படையில் ரஜினி – தீபிகா ஆடும் நடனத்தை இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாகக் கூறுகிறார்கள். இந்த நடனத்துக்காக பல நாட்கள் பயிற்சி மேற்கொண்டார் தீபிகா. ரஜினி ஆன்தி ஸ்பாட்டில் ரிகர்சல் பார்த்ததோடு சரி.

ஷோபனாவுக்கும் இந்தப் படத்தில் நடனக்காட்சி உண்டு.

ரஜினி பாட்டு

படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான். இந்தப் படத்தின் சிறப்புகளில் முக்கியமானது ரஜினி தன் சொந்தக் குரலில் பாடியுள்ள பாடல். “எதிரிகள் இல்லை…” என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்தப் பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், இந்தியில் ரஜினியே பாடியுள்ளார்.

rana3 copy

படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அனிமேஷன் இல்லை
 
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே ரஜினிதான் டப்பிங் பேசியிருக்கிறார். படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இன்டர்வெல் கிடையாது.

படத்தின் பாத்திரங்கள் அனைத்தும் நிஜ மனிதர்களின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது நிஜ மனிதர்களின் அசல் பிம்பங்கள், மோஷன் கேப்சரிங் முறையில் உருவாக்கப்பட்டு உலவவிடப்பட்டுள்ளனர். அனிமேஷனுக்கு அடுத்த கட்ட டெக்னாலஜி இது.

4000 அரங்குகளில்

படத்தை 3டியிலும் வெளியிட இருக்கிறார்கள். சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் 3 டி பணிகள் நடந்தன.

உலகம் முழுவதும் 4000 அரங்குகளில் கோச்சடையானை ஒரே நேரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஜப்பானில் மட்டும் 1000 ம் அதிகமான அரங்குகளில் கோச்சடையானை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

-என்வழி
22 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் – ஒரு முன்னோட்டம்

 1. rajagopalan

  Ennuma ulagam nambudhu… Kochadayan release agum endru?
  Thalaiva sikirama oru pudhu padam pannunga…
  shankarodayo ella ks ravikumar udayo…

 2. udaykumar

  படம் பாப்போம் எப்போடின்னு .. சும்மா பார்த்தாவே graphics மாதிரி இருக்கு, காலம் என்ன சொல்லுகிறது என்று.. wait பண்ணுவோம்.

 3. Basha

  யாருக்கும் பதிப்பு இல்லாமல் என்றால் கமல் விஸ்வரூபம் 2 வருகிறது Jan 26 அப்டினா தலைவர் இன்னும் தள்ளி போகுமா……..!!!!! என்ன நடந்தாலும் தலைவர் படம் வரவேண்டும்……..

  Hope this is the first time this kind of confusions and prolonging happening Though with her daughter direction etc……. feel so

 4. Raghul

  சிவபெருமானின் ருத்ர தாண்டவ நடன அடிப்படையில் ரஜினி – தீபிகா ஆடும் நடனத்தை இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாகக் கூறுகிறார்கள். இந்த நடனத்துக்காக பல நாட்கள் பயிற்சி மேற்கொண்டார் தீபிகா. ரஜினி ஆன்தி ஸ்பாட்டில் ரிகர்சல் பார்த்ததோடு சரி….. trailer உபயம்… காமெரா மான் அதிக நாட்கள் ஒத்திகை பார்த்தாரோ …. (சும்மா குசும்பு….)

 5. Raghul

  தலைவரும்… மகளும் ஆழம் தெரியாம கால வச்சிட்டர்களோ…

 6. Deen_uk

  இளங்கோ சார்..!
  தட்ஸ் தமிழிலும் குறிப்பாக தலைவர் செய்தி அனைத்தையும் வெளியிடுபவர் நம்ம என்வழி வினோ அண்ணா தான் சங்கர் என்ற பெயரில்..! தலைவர் செய்தி மற்றும் சினிமா விமர்சனங்களில் கலக்குபவர் இரண்டு தளங்களிலும்!
  தலைவர் செய்திகள் மட்டும் என்வழியிலும் தட்ஸ் தமிழிலும் வெளியிடப்படும்! so copy paste அல்ல..! உங்கள் குழப்பம் தீர்ந்து இருக்கும்!!

 7. மிஸ்டர் பாவலன்

  //தலைவரும்… மகளும் ஆழம் தெரியாம கால வச்சிட்டர்களோ…// (Raghul)

  யாருடைய திறமையையும் குறிக்காக எடை போடாதீர்கள்!

  தாய்ப்புலி பத்தடி பாய்ந்தால், சேய்ப் புலி இருபது அடி பாயும்! நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. kabilan.k

  இளங்கோ சார்,தட்ஸ்தமிழ் தளத்திலும் செய்தி போட்டது வினோ அண்ணன் தான்.அந்த பதிவின் மேல ஷங்கர் என்று போட்டு இருக்கும்,அது வினோ அண்ணன் தான்.அவர் சேகரித்த செய்தியை தான் இங்கே பதிவிடுகிறார்.தெரிந்து கொண்டு கமெண்ட் போடலாமே

 9. RAVI

  காத்துகொண்டு இருக்கிறோம். தலைவரின் கோச்சடையானுக்காக. நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெரும். ஜனவரி 26-ம் தேதி படம் வெளியாகும் என்று செய்தி வந்துள்ளது. வாழ்க இதய தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

 10. srikanth1974

  அன்புச் சகோதரர் திரு.மிஸ்டர் பாவலன்.அவர்களுக்கு நன்றி.

  என்றும் உங்கள் அன்புச் சகோதரன்

  ப.ஸ்ரீகாந்த்.

 11. Raghul

  //தலைவரும்… மகளும் ஆழம் தெரியாம கால வச்சிட்டர்களோ…// (Raghul)

  யாருடைய திறமையையும் குறிக்காக எடை போடாதீர்கள்!

  தாய்ப்புலி பத்தடி பாய்ந்தால், சேய்ப் புலி இருபது அடி பாயும்! நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

  Mr. Pavalan…
  Don’t ever think we under estimate Thalaivar… not even in dreams.. But motion capturing– realistic 3D etc.. comparison with Avtar… all these are really frightening..Many world heroes in Tamil claim their movie in hollywood quality… etc.
  But Thalaivar- Sankar como Enthiran alone in the whole country matched with hollywood style of film making..
  Watch “Gravity in 3D”… where we are and where hollywood is in these VFX technology..
  Even teaser in a half-baked content took such along time for K…
  So, please understand – as the TRUE fans we are so soo…. worried about thalaivar…. and the comments sathya…, vi.., aji.. would say
  If it pleases everyone and become hit (I pray it should) I can tell you I would be a happier person than anyone…..

 12. bahrainbaba

  எனக்கென்னமோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்னு தோணுது.. தலைவர் படம்னு பார்க்காதீங்க.. படத்தோட காட்சிகளின் பிரம்மாண்டம் மிரள வைக்குது.. கண்டிப்பாக இந்த படம் ஒரு மிகப்பெரிய விசுவல் ட்ரீட் ஆக கருதப்படும்..

 13. மிஸ்டர் பாவலன்

  சத்யராஜிற்கு மார்கெட் போய்விட்டது.. அப்பா வேடத்தில் நடிக்கிறார்..
  குருவிக்கு அவ்வப்போது துப்பாக்கி மாதிரி படம் கிடைத்தாலும்
  குருவியின் தந்தை அவரது படங்களைப் பார்த்துக் கொள்வதால் கவலை
  இல்லை. அஜீத்தின் வீரம் குருவியின் சுறா போல அமையலாம்.
  விஸ்வரூபம்-2, ஷங்கரின் ஐ – இந்த இரண்டு படங்கள் தான் கோச்சடையானுக்கு போட்டியாக களத்தில் இறங்க உள்ளன. நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 14. anbu patrison

  please upload this week kumudam, i am staying at qatar please i want to ready rajini birthday news,please help

 15. KRISHNAN

  Ndtv 25 greatest indian poll , now Rajini sir at second place..do something for thalaivar to retain the top spot..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *