BREAKING NEWS
Search

பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்! – இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்! – இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

teassr-5

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் பல கோடி ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி தரும் செய்தியாக இது அமைந்துள்ளது.

கோச்சடையான் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. இந்தப் படம்தான் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் 3டி படம். ரூ 100 கோடியில் பல நாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் மதுரையை தலைநகராகக் கொண்டு தர்ம ஆட்சி செலுத்திய மன்னன் கோச்சடையான் மற்றும் அவர் மகன் இளவரசன் ராணா ஆகிய இரு வேடங்களில் வருகிறார் ரஜினி.

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஷோபனா, ருக்மணி, நாசர், ஜாக்கி ஷெராப் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்க மேற்பார்வை பொறுப்பை கேஎஸ் ரவிக்குமார் கவனித்தார். ரஜினி, தீபிகா நடித்த நிஜ காட்சிகள் அனைத்தையும் இவர் மேற்பார்வையிலேயே இயக்குநர் சௌந்தர்யா படமாக்கினார்.

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று ரஜினி திரும்பிய பிறகு சில மாதங்கள் கழித்து இந்தப் படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. லண்டனில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பின்னர் கேரளாவிலும் சென்னை ஸ்டுடியோக்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழ், இந்திப் பதிப்புகளுக்கு ரஜினியே சொந்தக் குரலில் டப்பிங் பேசினார்.

ஜப்பான் மொழியில் வெளியாகும் கோச்சடையானுக்காக, ஜப்பானிய மொழி கற்று படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார் ரஜினி. ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலையும் தமிழ், இந்தியில் ரஜினி பாடியுள்ளார்.

தெலுங்கில் இந்தப் படத்துக்கு விக்ரம் சிம்ஹா என்று தலைப்பிட்டுள்ளனர். தெலுங்கில் மிகப் பெரிய அளவில் இந்தப் படம் வெளியாகிறது. தெலுங்கானா பிரச்சினையில் தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் தவிப்பதால், எந்தப் பிரச்சினையும் இல்லாத கோச்சடையானை வெளியிடுவதில் ஆந்திர சினிமா விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

படத்தின் அனைத்து வேலைகளும் தற்போது முடிந்துவிட்டன. ஒரு டீசர் மற்றும் ஒரே ஒரு பாடலின் ஒலி டீசர் மட்டுமே இப்போதைக்கு வெளியில் வந்துள்ளது. இதில் பாடல் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் முழுமையான இசையை கடந்த அக்டோபரில் வெளியிடுவதாகக் கூறியிருந்தார்கள். இப்போது டிசம்பர் மாதம் ஆடியோ ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

படத்தின் இணை தயாரிப்பாளரும் மீடியா ஒன் அதிபருமான டாக்டர் முரளி மனோகர் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், “அனைத்துப் பணிகளும் முடிந்து, இப்போது பின்னணி இசை சேர்ப்பு நடக்கிறது. டிசம்பரில் ஆடியோ வெளியிடப்படும்.

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 10-ம் தேதியே கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளோம். விளம்பர வேலைகள் டிசம்பரில் தொடங்கும்,’ என்று அறிவித்துள்ளார்.

-என்வழி ஸ்பெஷல்
15 thoughts on “பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்! – இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 1. குமரன்

  அப்பாடா, வெகுநாள் காத்திருந்தோம்.

  அப்போ பொங்கலுக்கு வந்துவிடும் என்று சொன்ன வீரம், ஜில்லா எல்லாம் தமிழ்ப் புத்தாண்டுக்குத்தான் வரும் !

 2. jey_uk

  This confirmation going for past one year… and still goes on….but no one know when movie will release

 3. Chithamparam

  கோச்சடையான் பற்றி இயக்குனர் சௌந்தர்யா ஆனந்தவிகடனுக்கு தெரிவித்திருந்தது.
  ”படத்தில் சீனியர் ரஜினிதான் கோச்சடையான். அவர் ஒரு தளபதி. நாட்டின் மன்னன் ரஜினியின் பெஸ்ட் ஃப்ரெண்ட். அந்த நண்பனுக்காக உலகத்தையே ஜெயிச்சு அவர் காலடியில் கொண்டுவந்து கொட்டணும்னு துடிக்கிற வீரர்.”

  தவறாக மன்னன் என்று கூறிவிட்டீர்கள்.

  படம் பொங்கலுக்கு வெளியாவதில் மகிழ்ச்சி

 4. மு.முத்துக்குமார்

  18 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது (பாட்ஷா). காத்திருக்கிறோம்.

 5. Raj

  சூப்பர் நியூஸ். படம் எப்படி இருந்தாலும் நிச்சயம் தியேட்டரில் போய் பாருங்கள். நன்றி.

 6. micson

  இந்த செய்தியே தலைவர் படம் பார்த்த மாதிரிதான் . தலைவா உன் படம் பார்த்தா தான் படம் பார்த்த மாதிரியே இருக்கு.

 7. saktheeswaran

  காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு
  உலகின் ஒரே உச்ச நட்சத்திரமே வருக எந்திரனின் சாதனையை முறியடிப்பதற்கு

 8. Unamaiyai Uragakurru

  காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு
  உலகின் ஒரே உச்ச நட்சத்திரமே வருக எந்திரனின் சாதனையை முறியடிப்பதற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *