BREAKING NEWS
Search

கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

Bnn0VYOIIAIrsRG

கேன்ஸ்: உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது.

இப்படத்தில் பணியாற்றிய சவுன்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி இந்த திரையிடலில் பங்கேற்றார்.

கேன்ஸில் தான் பங்கேற்றதை, கோச்சடையான் பேனருடன் நின்று படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டே கேன்ஸ் விழாவில் கோச்சடையான் ட்ரலைவர் வெளியிடப்படும் என்றும், ரஜினி அதில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் ரஜினியால் பங்கேற்க முடியவில்லை. அதன் பிறகு பல மாதங்கள் கழித்தே கோச்சடையான் ட்ரைலர் வெளியானது.

இந்த ஆண்டு கேன்ஸ் தொடங்கும்போது, படமே வெளியீட்டுக்கு தயாராகிவிட்டதால், இப்படத்தை கேன்ஸ் விழாவின் போட்டியற்ற பிரிவில் திரையிட முடிவு செய்து அனுப்பி வைத்தனர்.

கோச்சடையான் திரையிடலின்போது, படத்தில் பணியாற்றிய ஆஸ்கர் விருது வென்ற சவுன்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கலந்து கொண்டார். வெளிநாட்டு திரைக்கலைஞர்கள், பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசித்துப் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.

வரும் மே 23-ம் தேதி கோச்சடையான் உலகெங்கும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

-என்வழி




2 thoughts on “கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

  1. குமரன்

    மகிழ்ச்சியான தகவல்.

    ஒன்று உறுதியாகி விட்டது. பட வெளியீட்டுத் தாமதத்துக்குக் காரணம் தொழில் நுட்பக் கோளாறு அல்ல.

    ஏதோ பழைய கடனை தயாரிப்பாளரிடம் வசூல் செய்ய கடன் கொடுத்தவர்கள் செய்து வந்த தகராறு/ கட்டப் பஞ்சாயத்து/ பிளாக் மெயில். தமிழ்த் திரைப் படத் தயாரிப்பாளர்களுக்கு விடிவு காலம் எப்போது?

  2. மிஸ்டர் பாவலன்

    //பட வெளியீட்டுத் தாமதத்துக்குக் காரணம் தொழில் நுட்பக் கோளாறு அல்ல.//

    இதைப் பற்றி ‘விறுவிறுப்பான’ தகவல் நான் இரண்டு வாரம் முன்பே
    கொடுத்திருந்தேன்.

    குமரன் அவர்களே – ஸ்டாலின் அவர்களின் “மூன்று மணி” நேரம்
    ராஜினாமா பற்றி உங்கள் கருத்து என்ன? Times Now, Headlines Today
    போன்ற செய்தி சேனல்களின் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்
    என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. இவை தி.மு.க.-வின் செல்வாக்கை
    குறைக்கும் செயல்கள் என்ற பொறுப்புடன் அவர்கள் நடந்து கொண்டால் நலம்.

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *