BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் கபாலி.. ரிலீஸ் எப்போ?

சூப்பர் ஸ்டாரின் கபாலி.. ரிலீஸ் எப்போ?

12042850_536602076498885_1066673022324406774_n

பாலி ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள், வீடியோக்கள் தினசரி இணையத்தில் கசிய ஆரம்பித்திருப்பது இயக்குநருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் பெரிய தர்மசங்கடத்தைத் தந்துள்ளது.

இனி இந்த மாதிரி ஸ்டில்களைப் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆளுக்கொரு ஆன்ட்ராய்ட் வைத்துக் கொண்டு சுற்றும் காலத்தில் இதெல்லாம் சாத்திமா தெரியவில்லை.

இந்த நிலையில் படத்தை எப்போது வெளியிடுவது என்பதில் ஒரு இறுதியான முடிவுக்கு வந்திருக்கிறாராம் தாணு.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை பொங்கல் வெளியீடு என்று கூறி வந்தனர். ஆனால் ஷெட்யூல்படி படம் வரும் ஜனவரியில்தான் முடிகிறது. போஸ்ட் புரொடக்ஷனுக்கு குறைந்தது 3 மாதங்களாவது தேவை.

எனவே பக்கா திட்டமிடலோடு படத்தை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் சித்திரைத் திருநாளில் வெளியிட்டுவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

தமிழ்ப் புத்தாண்டில் வெளியான ரஜினி படங்கள் வசூலில் சக்கைப் போட்டிருக்கின்றன. அந்த சென்டிமென்டும் கூட, இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார்கள்.

-என்வழி




4 thoughts on “சூப்பர் ஸ்டாரின் கபாலி.. ரிலீஸ் எப்போ?

  1. குமரன்

    விரல் நுனியில் விஷயம்
    என்று மகிழ்ந்தால் …….
    விரல் நுனியில் விஷமும் வருகிறதே ………..?

  2. குமரன்

    தமிழ்ப் புத்தாண்டு அன்று வருவது பல விதத்தில் சாலச் சிறந்தது.

    கிட்டத்தட்டப் பள்ளிக்கூடங்களில் பலவும் பாடம் முடித்து விட்டிருக்கும், சொல்லப் போனால் தேர்தல் வரும் ஆண்டானதால், விரைவில் பாடம் முடித்துத் தேர்வும் முடித்துவிட அரசும் ஒத்துழைத்து, வரும் தமிழ்ப் புத்தாண்டு பலரும் Relaxed ஆக இருக்கும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கும் சுழலில் அரசியலாருக்கும் தலைவர் படம் ஒரு நல்ல ஆரம்பத்தைத் தரும் என்று நம்பலாம். தொண்டர்களுக்கும் குஷியாக இருக்கும்.

  3. venkat

    i believe shankar did some thing to stop leaking the photos to website during enthiran

    what a look thaliavar

  4. srikanth1974

    திரு.குமரன் சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
    ஏப்ரல் மாதம் [தமிழ் புத்தாண்டு] அன்று வெளிவந்த தலைவர் படங்கள்
    மிகப் பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளது.
    உதாரணத்திற்கு அருணாச்சலம்,படையப்பா,சந்திரமுகி,போன்ற படங்களைக்
    கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *