BREAKING NEWS
Search

எந்திரன் 2.. பட்ஜெட் ரூ 250 கோடி… சூப்பர் ஸ்டார் – ஷங்கர் – ரிலையன்ஸ் கைகோர்க்கிறார்கள்?

எந்திரன் 2.. பட்ஜெட் ரூ 250 கோடி… சூப்பர் ஸ்டார் – ஷங்கர் – ரிலையன்ஸ் கைகோர்க்கிறார்கள்?

shankar_rajini-oscar

சென்னை: லிங்கா படத்தின் ஷூட்டிங் இப்போதுதான் பாதியைத் தாண்டியிருக்கிறது. ஆனால் அதற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்துக்கான திட்டமிடல், முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கவிருப்பது ஷங்கர் இயக்கத்தில்தான் என்பது உறுதியாகிவிட்டது. இதுகுறித்து முன்பே செய்திகள் வந்துள்ளன. இப்போது அதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் எந்திரனின் தொடர்ச்சிதான் என்பது உறுதியாகியுள்ளது. கூடவே, இந்தியன் தாத்தா மாதிரி ஒரு கேரக்டர் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்கள். இதுவரை தன் கேரியரில் இல்லாத பிரமாண்ட படமாக இந்தப் படம் அமைய வேண்டும் என்பதில் ரஜினி ஆர்வமாக உள்ளாராம்.

இந்தப் படத்துக்கு பட்ஜெட் தோராயமாக ரூ 250 கோடி என ஷங்கர் சொன்னதுமே, ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிப்பதாகக் கூறிவந்த கல்பாத்தி அகோரம் பின்வாங்கிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் ஷங்கருக்கும் கல்பாத்தி அகோரத்துக்கும் சரிப்பட்டு வரவில்லை என்கிறார்கள்.

rajini-shankar

இதைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸையே தயாரிக்கச் சொல்வதா.. அல்லது வெளியில் வேறு தயாரிப்பாளரைத் தேடுவதா என்ற யோசனையின் முடிவில், ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் இந்த மெகா பட்ஜெட் படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ரஜினி – ஷங்கர் நேரில் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வர வாய்ப்புள்ளது.

இப்போதைய நிலவரப்படி, இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டில் தயாரித்தால், இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் முதல் படம் எந்திரன் -2 ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள்!

-என்வழி
12 thoughts on “எந்திரன் 2.. பட்ஜெட் ரூ 250 கோடி… சூப்பர் ஸ்டார் – ஷங்கர் – ரிலையன்ஸ் கைகோர்க்கிறார்கள்?

 1. BP

  at this junction – I wish SS does medium budget movies and make big profits.

  though kochadiiyan ran well – it can’t be said as blockbuster due to high budget.

 2. jegan n

  hope this happens soon.only thalaivar have the guts to do mega budget movies..rajini + shanker is the top most combination in Indian cinema.this can create huge record breaking collections which can make thalaivar’ s fans happy and proud.such collection they can talk and discuss for a long time.thalaivaroda nalla manasuku ellame success ah amayum.

 3. Elango

  அற்புதமான செய்தி …இதை தான் நான் ரஜினி அவர்களிடம் எதிர்பார்தேன் …எந்திரன் போன்று வித்யாசமான கதை களம் தான் அவரின் நடிபாற்றளுக்கு சிறந்தது!

  இந்த செய்தி உண்மையானால் …இந்த திரை படம் இமாலய வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

  அவரின் நடிப்பு திறமைக்கும் …துடிபிற்கும் ..கடினமான உழைப்பிற்கும் .. ஏற்ற முடிவு இது!

 4. Elango

  பழைய ரஜினியை விட சிகிச்சை முடிந்து …இப்பொழுது யோகாவின் மூலம் புது மனிதனாய் மாறியிருக்கும் ரஜினி இதில் அட்டகாசமாய் ஜொலிப்பார் ……ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்து காத்திருகின்றது!

 5. Rajagopalan

  The news is good…But shankar means , minimum we have to wait for two more years…
  Also i wish Rana to take off partly Motion Capture & partly real…

 6. மிஸ்டர் பாவலன்

  கோச்சடையான் -2 படம் முதலில் எடுத்து அது நல்ல படி
  வெளிவந்த பின் – எந்திரன்-2 வெளியிடலாம்..

  -===மிஸ்டர் பாவலன் ====-

 7. மு.முத்துக்குமார்

  ரஜினி+ஷங்கர் சூப்பர். ஆனா எந்திரன்-2 வேணாம். கம்மி budget அதிக லாபம் தான் கரெக்டா இருக்கும். சந்திரமுகி 12 கோடி செலவு, 65 கோடி வசூல். 5 மடங்கு லாபம். லிங்கா 20 கோடி புட்கேட், கண்டிப்பாக வசூல் 150 கோடி தாண்டும். 7+ மடங்கு லாபம். இது தான் சரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

 8. Thalaivar fan

  Avar yethil nadichalum blockbuster tan. Dont worry. He knows wat to do.
  But just keep hope tat vishvaroopam 2 will b out w/o any fiasco.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *