BREAKING NEWS
Search

டாக்டர் அப்துல் கலாம் மறைவு.. சூப்பர் ஸ்டார் ரஜினி அதிர்ச்சி, இரங்கல்!

டாக்டர் அப்துல் கலாம் மறைவு.. சூப்பர் ஸ்டார் ரஜினி அதிர்ச்சி, இரங்கல்!

rajini-kalam

சென்னை: இந்தியாவின் மகத்தான மக்கள் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நேற்று இரவு மேகலாயாவின் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த கலாம், ஷில்லாங் பெதானி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். அவரது உடல் தற்போது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை காமராஜர் அரங்கில் அமரர் எம்எஸ் விஸ்வநாதனுக்கு இளையராஜாவின் இசையஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு திடீரென வருகை தந்த ரஜினிகாந்த், மூன்று மணிநேரம் அமர்ந்து பாடல்களைக் கேட்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் டாக்டர் அப்துல் கலாம் மரணமடைந்த செய்தி வெளியானது.

நிகழ்ச்சி முடிவில் எழுந்து வந்த ரஜினியிடம் இந்த செய்தியை பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

அதிர்ச்சியில் சில விநாடிகள் அப்படியே நின்றுவிட்ட ரஜினி, பின்னர் தன் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

-என்வழி




One thought on “டாக்டர் அப்துல் கலாம் மறைவு.. சூப்பர் ஸ்டார் ரஜினி அதிர்ச்சி, இரங்கல்!

  1. srikanth1974

    நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
    ஆனால்
    நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்!

    -Dr .அப்துல் கலாம் .

    இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்கவேண்டும் என்ற -எங்கள்
    ஏவுகணை நாயகன் கண்ட கனவு மெய்பட வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *