BREAKING NEWS
Search

ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு.. ரஜினி இரங்கல்

ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு.. ரஜினி இரங்கல்

rajini-dhaya

சுவாமி தயானந்த சரஸ்வதியை தன் ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தயானந்த சரஸ்வதி சுவாமிகள் சென்னைக்கு வந்தாலும், அல்லது கோவை ஆனைகட்டி ஆசிரமத்திலேயே இருந்தாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் அவரைச் சந்திக்கத் தவறியதில்லை.

அண்மையில் சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ரஜினி.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஆனைக்கட்டி ஆசிரமத்துக்கே சென்ற ரஜினி, அங்கு சில தினங்கள் தங்கி சுவாமிகளின் உரையைக் கேட்டார். அப்போது, ரஜினிக்காக அங்கே தனிக் குடிலே உருவாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

Untitled

சுவாமிகள் மறைவுச் செய்தி அறிந்த ரஜினி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், “பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளே, எங்களை ஆசீர்வதியுங்கள். தங்களை பிரிவது வேதனையாக உள்ளது. தங்கள் பாதங்களில் எங்கள் பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கிறோம்.. எப்போதும் எங்களுடன் இருங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

 
4 thoughts on “ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு.. ரஜினி இரங்கல்

 1. குமரன்

  சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் சுவாமி சின்மயானந்தா அவர்களின் நேரடிச் சீடர்.

  இளவயதில் விமானி ஆக விரும்பி இந்திய விமானப்படையில் சேர்ந்த சுவாமிகள் ஆறு மாதங்களிலேயே அங்கிருந்து விலகி, பத்திரிகையாளராகத் தொடர்ந்து பணியாற்றினார்.

  பின்னர் சுவாமி சின்மயானந்தா அவர்களின் சீடராகி, சுவாமிகள் 1962 இல் துறவு மேற்கொண்டது முதல் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நமது நாட்டின் பாரம்பரிய வேதக் கோட்பாடுகளை விளக்கி உலகம் முழுக்க உரைகளை நிகழ்த்தி இருக்கிறார். கோவை ஆணைக்கட்டியிலும், உத்தரக்கண்ட மாநில ரிஷிகேசத்திலும் உள்ள அவரது ஆசிரமங்களில் வேதக் கல்வி நிலையங்கள் உள்ளன.

  சுவாமிகள் ஐக்கிய நாடு சபையிலும், யுனெஸ்கோவிலும், பல அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலும், பல்வேறு பன்னாட்டு மாநாடுகளிலும் பேருரை ஆற்றியிருக்கிறார்.

  சுவாமிகள் நிறுவிய “சேவையே நோக்கமாக” (எய்ம்ஸ் பார் சேவா) என்ற அமைப்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் கல்வி, குடிநீர், மருத்துவ வசதிகளைச் செய்து தொடர்ந்து மலைவாழ் மக்களுக்குப் பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது. சுவாமிகள் பூர்வக் குடிமக்களுக்கு ஆற்றிவந்த தொண்டு நகரம் சார்ந்த இன்றைய சமுதாயத்தில் மக்களுக்கு அதிகம் தெரியவராமல் போனதில் வியப்பில்லை.

  பல்வேறு இந்துத் துறவியரை உள்ளடக்கி 2005 இல் துவக்கப்பட்ட ஆசாரிய சபை என்ற அமைப்பின் தலிமைப் பொறுப்பில் துவக்கம் முதல் இன்றுவரை இருந்து வருவது, சுவாமிகள் எந்த அளவுக்குத் துறவியர் மத்தியில் மதிக்கப் பட்டார் என்பதைப் பறைசாற்றும். அவரது மறைவு நமது சமுதாயத்துக்குப் பேரிழப்பு ஆகும்.

 2. குமரன்

  ஹிந்து தர்ம ஆசாரிய சபையின் அமைப்பாளராகச் சுவாமிகள் தொடர்ந்து சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்வதையும், செய்வதையும் எதிர்த்துத் துறவியரிடையேயும் தமது சீடர்கள் உள்ளிட்டோரிடமும் பிரசாரம் செய்து வந்தார். அவர் 2010 இது குறித்து ஒரு அறிக்கையயும் வெளியிட்டார். அது இதோ:

  There is no Vedic scriptural sanction for any act of cruelty or oppression or unfair discrimination based on anyone’s birth. Many non-Vedic scriptures as well as devotional texts in our country’s regional languages are replete with verses extolling the essential oneness of all humanity and rejecting unjust or unfair discrimination based on difference in gender, creed, or caste, as the word is currently understood. The most widely used Hindu tradition of greeting anyone, including strangers, is with the term, “Namaste,” which is the same as that used in worshiping Ishwara, the Divine Almighty incarnate.

  Birth-based discrimination and cruel treatment of individuals and families which developed in Hindu society over time as socially sanctioned practices are in gross violation of ancient Hindu teachings and philosophy. Many people that revere and owe allegiance to our ancient Dharmic teachings and philosophy have suffered over the years as a result of such discriminatory practices. Such suffering continues even today, despite the law of the land and enlightened social and religious leaders having continued to make, over the centuries, major and effective contributions to diminish the depth and extent of these discriminatory practices, which have nothing to do with Hindu Dharma.

  HDAS is aware that what started as rural kinship, creating a sense of security and identity in communities, developed over the centuries into entrenched social practices, particularly in deep rural areas. Consequently, complete elimination of such practices will take time. Therefore, concerted, sustained and proactive action at the grass roots is required to rid our society of these birth-based unfair discriminations.

  HDAS is also aware of the nefarious role played over the years by missionaries of Abrahamic Faiths seeking to swell their strength, by ascribing what belongs to the social realm, to our Hindu Dharma per se. More unfortunate is the fact that after Independence of our country from alien rulership, political parties in our democracy have consistently exploited caste affiliations in constructing and sustaining their vote banks. Lack of education at the grass roots, income-earning capabilities and poor basic health in the poor and deprived communities have been exploited to the hilt in this regard.

  HDAS is strongly committed to promoting the dignity of the human being and social harmony. It considers that the Hindu religious leadership in the country, including the venerated members of the Acharya Sabha, must play a strong proactive role in condemning and discouraging such birth-based rigidities. They need to do so, not only within the precincts of their Mathas and Peethas, but in the society at large, in their Pravachans. In this regard, enlightened Hindu activists must also set up more entities to educate and empower, socioeconomically, the vast mass of poor and lay population.
  Anaikatti
  26.05.2010

 3. குமரன்

  சுவாமிகள் பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு பாராட்டுவதை எதிர்த்துத் தொடர்ந்து செயலாற்றியவர். ஆனால், அவர் தமது செயற்பாடுகளை விளம்பரப் படுத்தியதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *