BREAKING NEWS
Search

அரசியலில் எப்போது ஈடுபட வேண்டும்? – இது தலைவர் ரஜினி சொன்னதுதான்!

‘அரசியலில் எப்போது ஈடுபட வேண்டும்?’

58

பிரபலங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அரசியலில் ஈடுபடுவதற்கு முன் ஜனங்களுக்கு உதவி செய்யவேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும், அதிலிருந்து நாம் பின்வாங்கக்கூடாது என்கிற உறுதியான எண்ணம் நம் மனதில் வரவேண்டும்.

அரசியலை “சாக்கடை” என்று சொல்கிறார்கள். நல்ல அரசியலை அப்படிச் சொல்ல முடியாது. நாமும் அந்தச் சாக்கடையில் ஐக்கியமாகாமல் எதிர்நீச்சல் போட்டு எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்கிற உறுதி வேண்டும்.

அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நம்முடைய பொருளாதார வசதி, குடும்பச் சூழ்நிலை முதலியவற்றை ஒருநிலைப்படுத்திக் கொண்டு “இனி இங்கே வேலை கிடையாது. எனவே அரசியலுக்குப் போவோம்” என்ற எண்ணமில்லாமல், உண்மையிலேயே மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற குறிக்கோளுடன் அந்தச் சாக்கடையை சுத்தம் பண்ண நாம் போகவேண்டும். இல்லேன்னா சாக்கடைப் பக்கமே போகக்கூடாது!

-தலைவர் ரஜினிகாந்த் (1985)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *