BREAKING NEWS
Search

தமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ..!! – ‘கலாய்த்த’ ரஜினி – கலகலத்த அரங்கம்!

தமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ..!! – ‘கலாய்த்த’ ரஜினி – கலகலத்த அரங்கம்!

ஜெயா டிவியின் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியில் அரங்கை அதிர வைத்த விஷயம், சோ பற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் கமெண்ட்தான். சோ – ரஜினி நட்பு குறித்து புதிதாக சொல்ல வேண்டியதில்லை.

நேற்றைய விழாவில், ஜெயா டிவியின் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த ரஜினி, சோவின் எங்கே பிராமணன் தொடர் பற்றிக் குறிப்பிட்டார்.

அதில், “…அப்புறம் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். அதில் சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி.

நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், ‘சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே’ன்னார். இந்த தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்…” என்றார்.


ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அரங்கமே கைத்தட்டலிலும் சிரிப்பிலும் அதிர்ந்தது… அப்போது சோ முகத்தைப் பார்க்க வேண்டுமே… தலையில் கை வைத்துக் கொணடு, ‘ஏம்பா இதெல்லாம்?’ என்று லேசாக சிரித்தபடி அவர் வாய் முணுமுணுத்தது, தொலைக்காட்சியில் தெரிந்தது.

பேச்சு முடிந்து, பாடல்களைக் கேட்க மேடையிலிருந்து முதல்வர் ஜெயலலிதா இறங்கி வந்ததும், முதலில் அவரை நோக்கி வேகமாக வந்தவர் சோதான். ரஜினியின் பேச்சு குறித்து அவர் ஏதோ சொல்ல முயல.. ‘நான் அதை ரொம்ப ரசிச்சேன். சீக்கிரம் ஆரம்பிச்சிடுங்க (தொடர்)’, என சிரித்தபடி கூறிவிட்டு அமர்ந்தார் ஜெயலலிதா!

-என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “தமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ..!! – ‘கலாய்த்த’ ரஜினி – கலகலத்த அரங்கம்!

  1. enkaruthu

    தலைவர் பேசுவது இங்கே இதை ஏன் சொல்கிறார் என்று ஆரம்பத்தில் குழப்பமாக இருக்கும்.ஆனால் அவர் சொல்லும் அர்த்தத்தை சற்று உற்று நோக்கினால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.இந்த விஷயத்திலும் அவர் சொல்ல வருவது ஆயிரம் அர்த்தங்கள் கொண்டதே.எனக்கு புரியாதது என்னவென்றால் தலைவர் ஜாலிக்காக சொன்ன இந்த விஷயத்துக்கு இவ்வளவு ஒரு நடுநிலையாளர் ஏன் ஜெயலலிதாவிடம் விளக்கம் சொல்ல ஓடியது ஏன்.

    பத்த வச்சுடீன்களே தலைவர் என்கின்ற பரட்டை அவர்களே. அநேகமாக அடுத்த துக்ளக் இதழில் கேள்வி பதில் பகுதியில் யாரும் கேட்க வில்லை என்றாலும் இவராகவே இதை பற்றி யாரோ ஒருவர் கேட்பது ஒரு கேள்வி கேட்டு அதற்க்கு ஒரு நீண்ட ஒரு விளக்கமும் கொடுப்பார் என்று நம்பலாம்.

  2. வாண்டன்

    சோ பற்றிய செய்திகளை தவிருங்கள். இவன் எல்லாம் ஒரு ஆளு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *