BREAKING NEWS
Search

பாகுபலிக்கு வந்த பாராட்டுகளிலேயே சிறந்தது ரஜினி சொன்னதுதான்.. ஆனால் அது ரொம்ப பர்சனல்! – எஸ்எஸ் ராஜமவுலி

பாகுபலிக்கு வந்த பாராட்டுகளிலேயே சிறந்தது ரஜினி சொன்னதுதான்.. ஆனால் அது ரொம்ப பர்சனல்! – எஸ்எஸ் ராஜமவுலி

Rajinikanth-Rajamouli-Baahubali-sets

ந்திய சினிமாவில் புதிய சாதனைப் படைத்துள்ள பாகுபலி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குதான் முதலில் போட்டுக் காட்ட விரும்புவதாகச் சொன்னவர் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியும், ஹீரோ பிரபாசும், நாயகி அனுஷ்காவும்.

அந்த அளவுக்கு அந்தப் படக்குழுவே ரஜினி மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்.

படம் வெளியானதுமே ரஜினி பார்த்துவிட்டார். பார்த்து முடித்த கையோடு தனது பாராட்டுகளை எஸ்எஸ் ராஜமவுலிக்கும், அவர் குழுவுக்கும் தெரிவித்துவிட்டார்.

என்ன சொல்லிப் பாராட்டினார் தலைவர்?

இதை ராஜமவுலியிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்:

“பாகுபலிக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு ரஜினி அவர்களின் பாராட்டுதான். ஆனால், அவர் என்ன சொன்னார் என்பதைத் தெரிவிக்க மாட்டேன். அது எனக்கு ரொம்ப தனிப்பட்ட முறையில் அமைந்தது. என்னுள்ளே இருக்கட்டும். வெளியே தெரிவிக்க இயலாது,” என்றார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *