Breaking News

‘ஏ பாட்ஷா பாரு… பாட்ஷா பாரு…’

Sunday, April 1, 2012 at 2:49 pm | 1,734 views

மீண்டும் சூப்பர் ஸ்டாரின் ஆக்ஷன் க்ளாஸிக் பாட்ஷா!


சூப்பர் ரஜினியின் திரையுலக வாழ்க்கையிலும் பொது வாழ்விலும் பெரிய திருப்பங்களை ஏற்படுத்திய படம் என்றால் ‘பாட்ஷா’தான்.

ஒரு விறுப்பான, அனைத்து அம்சங்களும் நிறைந்த, பார்க்கச் சலிக்காத திரைக்கதை எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்தப் படம் மிகச் சிறந்த உதாரணம்.

அதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத ஆக்ரோஷமும், இளகிய மனமும், அப்பாவித்தனமும் நிறைந்த ஒரு ரஜினியை இந்தப் படத்தில் பார்க்க முடிந்தது ஒரு முக்கிய காரணம். இப்படி ஒரு நல்ல மனிதன், நல்ல மகன், நல்ல அண்ணன், வாய்க்கவில்லையே என பலரையும் வாய்விட்டு சொல்ல வைக்கும் அளவுக்கு தலைவர் பட்டைய கிளப்பியிருப்பார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, ஒரு நாணயமான ஆட்டோக்காரராக பெயரெடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பல நல்ல விஷயங்களைச் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள் பலரை உதாரணமாகச் சொல்ல முடியும். பாட்ஷாவுக்குப் பிறகு, ஆயுத பூஜையை பாட்ஷா ஸ்டைலில் கொண்டாடுவதை ஒரு வழக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்!

அரசியல் அரங்கில் தொன்னூறுகளில் வீசிய ரஜினி புயலுக்கு கால்கோலிட்டது இந்த பாட்ஷா படவிழாவில் ரஜினி பேசிய பேச்சுதான். இந்தப் பேச்சுக்குப் பின் வந்த நாட்களில் ஏற்பட்ட அரசியல் சூறாவளியில் ஆட்சியே தூக்கி எறியப்பட்டது.

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் வேறு எந்தப் படமும் சம்பாதித்துக் கொடுக்காத அளவுக்கு கோடிகளைக் குவித்த படம் என்றால் பாட்ஷாதான்.

இந்தப் படத்தை சன் டிவி முதன்முதலாக ஒளிபரப்பியபோது, தமிழகத்தில் பந்த் நடக்கிறதோ என வியந்து போய் கேட்கும் அளவுக்கு ஊரே வெறிச்சோடிப் போயிருந்தது. அத்தனை பேர் கவனமும் பாட்ஷா ஓடும் சன் டிவி மேல்தான்.
அதற்குப் பிறகு ஒரு நூறு முறையாவது பாட்ஷாவை ஒளிபரப்பியிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் வசூலுக்குக் குறைவேயில்லை.

ரஜினியின் டாப் 10 படங்களில் முதல் மூன்று இடத்துக்குள் வரும் படங்களில் பாட்ஷாவும் ஒன்று எனலாம். அவரிடம் இப்போதும், உங்களுக்குப் பிடித்த படங்களை பட்டியலிடுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். தன்னிச்சையாக பாட்ஷா என்றுதான் பட்டியலை ஆரம்பிப்பார்!

இத்தனை சிறப்புகளுக்கும் உரிய பாட்ஷா, 17 ஆண்டுகள் கழித்த பிறகு பார்த்தாலும் அதே விறுவிறுப்பும் இனிமையும் நிறைந்த படமாகத் திகழ்கிறது.

அதனால்தான், இந்தப் படத்தை மறுவெளியீடாகக் கொண்டு வருகிறார்கள். அதுவும் இந்தியில்.

காட்சிகளையும், ஒலியையும் முழுக்க முழுக்க டிஜிட்டல் செய்துள்ளர், படத்தை வெளியிடும் பத்ரகாளி பிலிம்ஸ்.

இந்திப் பதிப்புக்கான வசனங்களை கோபால் ராம் எழுதியுள்ளார். தேவாவின் இசைக்கு, இந்தீவர், கோபால் ராம் பாடல்களை எழுதியுள்ளார். பாட்ஷாவில் ராரா ராமையா பாடலுக்கு இந்தி வரிகளை இவர்தான் எழுதியிருந்தார்.

வரும் ஏப்ரல் 20-ம் தேதி உலகம் முழுவதும் படத்தை வெளியிடப் போகிறார்களாம்.

ஏ பாட்ஷா பாரு… பாட்ஷா பாரு…

-என்வழி ஸ்பெஷல்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

7 Responses to “‘ஏ பாட்ஷா பாரு… பாட்ஷா பாரு…’”
 1. Manoharan says:

  It’s really an April fool .coz I thought that they r releasing in Tamil. Before a month Baasha has been telecasted in Sun TV n I m in d bar that Sunday noon. I heared d sAme story which d barman told before12 years. Once Baasha stArts at 11.00 till d the end around 3.00 no one wil move out of d bar.

 2. Kannan says:

  சென்னையில் எங்க ரீலிஸ் ஆகும்….கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் . (என்னக்கு ஹிந்தி தெரியாது…)

 3. கிரி says:

  தமிழில் என் மறுவெளியீடு செய்யவில்லை வினோ? ஏற்கனவே ஒரு முறை கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து வெளியிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

  பாட்ஷா படம் தான் இன்று வரை என்னோட விருப்பப் படம். நான் எழுதிய விமர்சனம் http://www.giriblog.com/2011/12/baasha-review.html

  இந்தப்படத்தை சிறப்பான ஒலி மேம்பாடு செய்து அதை ஒரு ஹோம் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.

  தமிழில் இதை செய்து Blue Ray ல் வெளியிட்டால் ரொம்ப சந்தோசமடைவேன்.

  பின்னணி இசை இன்று வரை எனக்கு ரொம்ப பிடித்த படம் பாட்ஷா தான். ஒவ்வொரு இடம் அத்துப்படி. இதுவரை 24 முறை பார்த்து இருக்கிறேன்.
  _______________

  பாட்ஷாவை திரையரங்குகளில் மட்டும் தினசரி இரவுக் காட்சியாக தொடர்ந்து 20 நாட்களும் (கோவை கேஜி காம்ப்ளெக்ஸ்), 25வது நாள், 50வது நாள், 75வது நாள், 99வது நாள், 100வது நாள், 101-வது நாள் என தொடர்ந்து ஒரே காம்ப்ளெக்ஸில் படம் பார்த்தவன் நான் (தியேட்டர் நிர்வாகம் சிறப்பு அனுமதி கொடுத்தது). அப்போது நான் கோவையில் நிருபராக இருந்தேன். இந்தப் படத்தை முதல் நாள் மேட்டுப்பாளையம் சுமதியில் பார்த்தேன். அன்று உட்கார இடமில்லை. எனவே அடுத்த ஷோவையும் அங்கேயே பார்த்தேன்.

  அதற்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம். எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கு கூட என்னிடமில்லை. ஆனால் என் சக நிருபர் பூபதி, இந்தப் படத்தை தொடர்ந்து 120 நாட்கள் கேஜியில் பார்த்தார். காசு கொடுத்துதான்! ஆனால் அவரது ஆர்வத்தைப் பார்த்து, பின்னர் பாஸ் கொடுத்துவிட்டது கேஜி காம்ப்ளக்ஸ் நிர்வாகம். அவர் தொடர்ந்து 300 நாட்களும் இந்தப் படத்தைப் பார்த்து ‘சாதனை’ படைத்தார் போங்கள். அவர் சாதனையை பின்னர் நானே ஒரு கட்டுரையாக எழுதினேன் என்றால் பார்த்துக்கங்க!

  தமிழில் ஏற்கெனவே சன் டிவியும் கே டிவியும் தேயத் தேய போட்டு சம்பாதித்துவிட்டார்கள். அதனால் ஒரு மாறுதலுக்கு இந்தியில் வெளியிடுகிறார்கள். இன்று அந்த இந்திப் பதிப்பையும் பார்த்தேன். சூப்பர்ப்!

  -வினோ

 4. raj says:

  vino, did u see planned negative campaign against 3 movie by the fraudster nikil. surya family was perfectly right in chucking him out.

 5. Ganesh says:

  car ellam parakkurthu ? (i think no scenecs )
  .
  Re-releae in tamil with DTS & digital print wow !

 6. prabakar says:

  Batchaa blueray is already in the market but the quality as poor as a DVD. Hope some one produce it with good 5.1 or 7.1 audio with a crystal clear copy

 7. கிரி says:

  :-) ரணகளமா பார்த்து இருக்கீங்க. கோவையில் ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். சென்னைக்கு ஈடாக.

  வினோ புதிய ஹிந்தி பதிப்பில் படம் ஒலி சிறப்பாக வந்துள்ளதா? அல்லது ஓகே ரகமா. ஏனென்றால் மறுபதிப்பு கர்ணன் படத்தில் சில இடங்கள் பளிச் என்றும் சில இடங்கள் சரி இல்லை என்றும் கூறினார்கள். பழைய படத்திற்கும் புதிய படத்திற்கும் நன்கு வித்யாசம் தெரிகிறதா? இங்கே (சிங்கப்பூர்) வராது என்பதால் நான் பார்க்க கொடுத்து வைக்கல :-(
  ____________
  நன்றாக உள்ளது. குறிப்பாக பாடல்கள் மிக திருப்தி. டைட்டிலை மாற்றிவிட்டனர். அது ரொம்பவே சுமார்தான்.
  -வினோ

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)