BREAKING NEWS
Search

‘ரஜினி சார் பாராட்டுதான் எனக்கு ரீ சார்ஜ்!’

‘ரஜினி சார் பாராட்டுதான் எனக்கு ரீ சார்ஜ்!’

”நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஆராதிச்சதைவிட இப்ப அதிகமா வியக்கும் ரஜினி சாரோட பாராட்டு!

‘தளபதி’ படத்தில் ஒரு சீன் வரும்… அரவிந்த்சாமிகிட்ட ‘தம்பி நீ போயிடு’னு ரஜினி சொல்வாரு. ‘தம்பியா? என் அம்மா மட்டும் உன்னைப் பெத்திருந்தா அப்பவே குப்பைத்தொட்டியில வீசியிருப்பா’னு அரவிந்த்சாமி சொல்வார்… அப்போ ரஜினி சார் ஒரு ரியாக்ஷன் காட்டுவார் பாருங்க… சான்ஸே இல்லை!

அப்படிப்பட்ட ரஜினி சார் ‘மொழி’ படம் பார்த்துட்டு, அவரே என்னை போன்ல கூப்பிட்டு, இருபது நிமிஷம் பாராட்டிப் பேசிட்டே இருந்தார். நான் சினிமாவில் இருக்கிற வரைக்கும் அந்த ரீ-சார்ஜ் எனக்குப் போதும்.”

-விகடனில் நடிகர் பிருத்விராஜ்

‘நான் நம்பவே இல்லை. ஆனா லதா நம்பினாங்க’ – சினேகாவிடம் ரஜினி’

ஜினிகிட்ட ஆசீர்வாதம் வாங்கினீங்களே… என்ன சொன்னார்?”

”ரொம்ப அன்பாப் பேசினார். ராகவேந்திரர் படம் கொடுத்தார். அவர் ஆரம்பத்துல எங்க காதலை நம்பவே இல்லையாம். ‘கிசுகிசுதான்… ஜஸ்ட் பாஸ் ஆகிடும்’னு நினைச்சாராம். லதாம்மாதான், ‘இல்லைங்க… இரண்டு பேரும் லவ் பண்றாங்க. நிச்சயம் கல்யாணம் வரைக்கும் போகும்’னு சொன்னாங்களாம்.

‘அவங்க சொன்ன மாதிரியே நடந்திருக்கு. சூப்பர் சூப்பர். நல்லா இருங்க’னு ஆசீர்வாதம் பண்ணினார்!”

-சினேகா – பிரசன்னா

பிரபு மகனுக்காக ரஜினி, கமலிடம் தேதி கேட்கும் பிரபு சாலமன்


விரைவிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியை ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்க்கும் வாய்ப்பிருக்கிறது.

பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்க, பிரபு சாலமன் (எத்தனை பிரபு’கள்…!) இயக்கும் கும்கி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

இந்த விழாவுக்காக கமல்ஹாசனிடமும் தேதி கேட்டுள்ளாராம் இயக்குனர் பிரபு சாலமன்.

ரஜினி, கமல் இருவருமே நடிகர் பிரபு மற்றும் சிவாஜி குடும்பத்தின் செல்லப் பிள்ளைகள் என்பது தெரியும்தானே!

-என்வழி ஸ்பெஷல்




2 thoughts on “‘ரஜினி சார் பாராட்டுதான் எனக்கு ரீ சார்ஜ்!’

  1. vasanthan

    நல்ல செய்தி ,தலைவர் மேடைகளில் பேசும் அழகே தனி ,

  2. kabilan

    வினோ அண்ணா k.v.ஆனந்த மேட்டர் அஹ விட்டுடிங்களே !!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *