BREAKING NEWS
Search

‘பாசமுள்ள மனிதனப்பா… மீச வச்ச குழந்தையப்பா!’ – வைரமுத்து

‘பாசமுள்ள மனிதனப்பா… மீச வச்ச குழந்தையப்பா!’ – வைரமுத்து

‘ரஜினிக்கும் உங்களுக்குமான மகிழ்வான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளலாமா?’

” ‘பாபா’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த பாடலுக் காக அவசரமாய் அழைக்கிறார் ரஜினி. பரபரப்பாகச் சென்றடைகிறேன்.

கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் உடையையும் காலணிகளையுமே மாறிமாறிக் கவனிக்கின்றன அவரது காந்தக் கருவிழிகள். புறப்பட எத்தனித்தபோது ‘சற்றே பொறுங்கள்’ என்றார். ‘உங்கள் உடைக்கும் காலணிக்கும் பொருத்தமில்லை’ என்றவர், என் பதிலுக்குக் காத்திராமல் ‘வெள்ளைத்தாள் கொண்டுவா’ என்று தன் உதவியாளருக்கு ஓசையோடு கட்டளையிட்டார். அந்த வெள்ளைத்தாளை விரித்து என் பாதம் பதிக்கச் சொன்னார். பேனா எடுத்து அதில் என் பாதத்தை வரையச் சொன்னார். ‘இதே அளவுக்குக் காலணிகளை அனுப்பிவைக்கிறேன்’ என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானைச் சந்தித்துவிட்டுச் சில மணி நேரங்கள் கழித்து வீடு திரும்பினேன். ‘ரஜினி சார் கொடுத்தனுப்பினாராம்’ என்று ஒரு பெட்டியை நீட்டினார்கள் என் உதவியாளர்கள். பிரித்துப் பார்த்தால்,

என் காலுக்குப் பொருத்தமான காலணிகள்!

நான் எழுதியது பொய்யில்லை:

‘பாசமுள்ள மனிதனப்பா
மீச வச்ச குழந்தையப்பா.’

-விகடன் மேடையில் கவிஞர் வைரமுத்து




12 thoughts on “‘பாசமுள்ள மனிதனப்பா… மீச வச்ச குழந்தையப்பா!’ – வைரமுத்து

  1. kumaran

    வைரமுத்து அவர்களும் தலைவரை போல் கிரேட் !

  2. Sudhagar S.

    நண்பர் ஸ்ரீகாந்த் அவர்களே, உங்க கேள்விக்கு ஆசிரியர் விளக்கம் எல்லாம் தேவை இல்ல…..ஏன்னா இதற்கு பதில் ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம்…”வைதெறுச்சல்” என்று!

  3. sellanarayanan

    வீணாப்போன நாயிங்க கத்துது நாம அதுங்கள அடிக்கூட வேண்டாம் .அடிச்சா தலைவர் பெரும் சேந்துதான் கெடும் .பயம் காட்டுங்க போதும்
    தலைவர் மட்டும் இல்ல நாமும் அவர்வழி நடக்கணும்னா நாய அடிக்ககூடாது
    கதரவைக்கணும் ஆனா அதையும் அத தொடாம செய்யணும்

    செல்லநாராயணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *