BREAKING NEWS
Search

நான் ஏன் இலங்கை செல்ல சம்மதித்தேன் தெரியுமா? – சூப்பர் ஸ்டார் அறிக்கை

thalaivar-wish

‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கு வணக்கங்கள்…

லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் இலங்கையில் உள்ள வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அளிப்பதற்காக அவருடைய தாய் ஞானாம்பிகை பெயரில் 150 வீடுகளைக் கட்டியுள்ளார்.

சுபாஷ்கரன் அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர், அவர் கட்டிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவதற்கான விழாவிற்கு என்னை அழைத்திருந்தார்.

வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி மாலை கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ள அந்த விழாவில் மலேசிய செனட் உறுப்பினர் விக்கேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டணித் தலைவர் சம்பந்தன், லண்டனைச் சேர்ந்த எம்.பி. ஜேம்ஸ் பெர்ரி, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ஆகியோருடன் நானும் அவ்விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளிக்கு வீட்டுச் சாவி கொடுப்பதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சி கட்டிட நிதி கொடுப்பதாகவும் திட்டம்.

மறுநாள் ஏப்ரல் 10-ம் தேது வவுனியா சென்று வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடும் திட்டம், அதன் பிறகு முல்லைத்தீவு, கிளி நொச்சி, புது குடியிருப்பு போன்ற இடங்களை பார்வையிட்டு மக்களை சந்திப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நான் இரண்டு விஷயங்களுக்காக இந்த விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன். காரியம்: அந்த வீடுகளை திறந்து வைப்பது, காரணம்: காலம் காலமாய் வாழ்ந்த தங்களின் பூமிக்காக, தங்களின் இனத்துக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கவுரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து தங்களை தாங்களே சுய சமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த, நடமாடிய இடங்களைப் பார்த்து அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாய் என்னுள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு, பல லட்சக்கணக்கில் கூடவிருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ் மக்களைப் பார்க்க வேண்டும். மனம் திறந்து பேச வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்.

அதுமட்டுமன்றி இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவை சந்திக்க நேரம் கேட்டு, சந்தித்து ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரைப் பணயம் வைத்து வேறு எந்த தொழிலுமே தெரியாததனால் கடலில் போய் மீன் பிடிக்கும் என்னுடைய மீனவ சகோதரர்களுடைய உயிரை பறித்து அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை சிறைபிடித்து வைக்கும் சம்பவங்களை அன்றாட பத்திரிகைகளில் படிக்கும் போது நெஞ்சம் துடிக்கிறது. அதைப்பற்றி என்னளவில் அவருடன் இதற்கு ஒரு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணியிருந்தேன்.

இத்தருணத்தில் நண்பர் தொல். திருமாவளவன் ஊடகங்களின் மூலமாகவும், வைகோ தொலைபேசி மூலமாகவும், வேல்முருகன் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன்.

இச்சமயத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். திருமாவளவன் சொன்னதைப் போல மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை.
இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களை மகிழவைத்து அந்த புனிதப் போர் நிகழ்ந்த பூமியைக் காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.”

அறிக்கை

 

-என்வழி

 
2 thoughts on “நான் ஏன் இலங்கை செல்ல சம்மதித்தேன் தெரியுமா? – சூப்பர் ஸ்டார் அறிக்கை

 1. Raghul

  Thalaiva.. your inner feelings are well reflected in the report.

  These so called political leaders although have just a few hundreds of supporters, but manage to get the prime time coverage in the 24X7 media. That’s pathetic to us. We are fed with the news of the people we had totally rejected.

  I personally feel, Thaliavar could have explained the fact as he has done in this press report and continued to visit the holy land and his interaction with the lankan Tamils would have not only brought cheers but “hope” to them.

  Finally, ONE SINGLE FACTOR WHICH UNIFIES THE ENTIRE TAMIL SPEAKING GLOBAL POPULATION (WHICH IS OTHERWISE FRAGMENTED BY GEOGRAPHY, CLASS, RELIGION, CASTE) IS NONE OTHER THAN OUR ONE ONLY THALAIVAR, THALAIVAR HIMSELF !!…

 2. M.RAMESH

  மற்ற அரசியல் வாதிகள் இலங்கை பிரச்சனையை ராஜா பக்சேவிற்கு தண்டனை வாங்கித்தருவதும், தமிழகத்தில் அரசியல் நடத்தவும் பயன்படுத்துகிறார்கள். திரு. அப்துல்கலாம் ஐயா, திரு ரஜினிகாந்த் போன்றோர் தான் அந்த மக்களின் உண்மையாக நேசித்து அவர்கள் மேலும் துன்பப்படாமல் இருக்க வேண்டும். ராஜபக்ஷேவிற்கு தண்டிப்பதைவிட இலங்கை வால் நம் நாட்டில் இருந்து அங்கு சென்ற மக்கள் இனிமேல் வெளியே சொல்லமுடியாத பிரச்சன்னைகள் இருந்து வெளிவர வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்க்கு இங்கு இருந்து கூச்சல் இடுவதைவிட அங்கு சென்றால் வெளியுலகம் பத்திரிக்கை பார்க்கிறது என்ற எண்ணத்தில் தங்கள் (இலங்கை) அரசுக்கு கேட்ட பெயர் வரக்கூடாது என்ற எண்ணத்திலும் அந்த பாதிக்க பட்ட மக்கள் மேலும் பாதிக்காமல் இனிவரும் காலம் அவர்களுக்கு பாதுகாப்பான சுதந்திரமான வாழ்கை வாழ உள்ளுணர்வோடு நினைக்கிறார்கள். வாழ்க என் மக்கள். அவர்கள் சோகம் கஷ்டம் தொலையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *