BREAKING NEWS
Search

ஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்!


ரண மாஸ், தலைவர் பைலா என இரண்டு அதிரடிப் பாடல்களை பேட்ட படத்திலிருந்து வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். இந்த இரு பாடல்களுமே இதுவரை ரஜினி ரசிகர்கள், தலைவர் படங்களில் கேட்காத ரகப் பாடல்கள். பாடல்கள் வெளியானதிலிருந்து இணைய வெளியே தெறிக்கிறது.

2.0 படத்தின் வெற்றியும் இமாலய வசூலும் தந்த உற்சாகம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் பேட்ட படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் முனைப்பில் சன் பிக்சர்ஸ் செய்யும் அதிரடி விளம்பரங்கள், பாடல் வெளியீடுகள் சந்தோஷத்தில் மூச்சு முட்ட வைப்பதாக உள்ளன.

பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தோற்றமும், டான்ஸ் மூவ்களும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளன. தளபதி, பாட்ஷா படங்களில் பார்த்த ரஜினியை மீண்டும் பார்த்த திருப்தியில் ரசிகர்கள் பேட்ட படத்தின் ஒவ்வொரு பாடல், ஸ்டில்லையும் கொண்டாடி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் வெளியான மரணமாஸ் பாடல் 10 மில்லியன் பார்வைகளை யுட்யூபில் பெற்றுள்ளது. நேற்று வெளியான உல்லாலா பாடலோ சில மணி நேரங்களில் 2.3 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *