அரசியலுக்கு வர பயப்படவில்லை… ஆனால் தயக்கமிருக்கிறது! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
அரசியலுக்கு வர நான் பயப்படவில்லை.. ஆனால் அரசியல் பற்றி சில தயக்கங்கள் உள்ளன என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை சத்யம் அரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய திரையுலகப் பிரமுகர்கள் அனைவரும் தலைவர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக இயக்குநர்கள் அமீர், சேரன், கே எஸ் ரவிக்குமார், நடிகர் விஜயகுமார் உள்ளிட்டோர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு ரஜினி தந்த பதில்:
அரசியல் பற்றி அமீர், விஜயகுமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் இங்கு பேசினார்கள். பேசாம இருந்தா பரவால்ல.. பேசிட்டாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்லணும்.
என் மனதில் இருப்பது யாருக்கும் தெரியாது என்று வைரமுத்து சொன்னார். உண்மையில் என்னைப் பற்றி எனக்கே தெரியாது. நான் ஒரு சூழ்நிலையின் பொருள். சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறேன்.
அரசியல் என்பது என்ன? அதன் ஆழம் என்ன? என்பது எனக்கு தெரியும். யார் தோளில் ஏறிப் போகவேண்டும் எத்தனை பேரை மிதித்து போக வேண்டும் என்பது தெரியும்.
அப்படிப் போகும்போது நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுவதும் தெரியும். இதெல்லாம் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை மாதிரி. ஒரு அலை மாதிரி. அதெல்லாம் தானாக ஏற்பட வேண்டும்.
அரசியல் ஆழம் எனக்கு தெரியும் என்பதால்தான் தயங்குகிறேன். கவனிக்க, பயமில்லை.. தயக்கம்தான்.
இங்கு பேசியவர்கள் எல்லோரும் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றனர். அதற்கெல்லாம் பதில் பேசாமல் போனால் திமிர் பிடித்தவன். தலைக்கனம் என்றெல்லாம் என்னைப் பற்றி நினைத்து விடுவார்கள். அதற்காகத்தான் என் மனதில் இருப்பதை சொன்னேன். மறுபடியும் நான் எல்லாம் அவன் கையில் இருக்கிறது என்று மேலே தூக்கி கையைக் காட்டுனா, ‘ அடப் போய்யா’-ன்னு சொல்வாங்க. ஆனா அதுதான் உண்மை.
இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன்.
அது நல்ல படங்களைத் தந்து ரசிகர்களை, மக்களை சந்தோகப்படுத்துவதாகவும் இருக்கலாம்!
-இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினி பேசினார்.
-என்வழி ஸ்பெஷல்
அரசியலுக்கு வர நீங்கள் ஏன் பயப்படவேண்டும்?
நீங்கள் வந்துவிடுவீர்களோ என்று கருணா நிதியும் ஜெயலலிதாவும்தான் பயப்படுகிறார்களே !!!
சோ, ஜெயாவுக்கு ஆதரவானவர். எனவே நீங்கள் வராமல் இருக்க, 1996 இல் செய்த சூழ்ச்சி போல ஏதாவது செய்வார். அவரை நீங்கள் நம்ப வேண்டாம். முடிந்தால் அவரைப் பார்க்காமல் இருப்பதே நலம்.
யார் தோளில் ஏறிப் போகவேண்டும் ?
மக்கள் தயார், அவர்கள் தொழில் ஏறிப் போங்கள்.
எத்தனை பேரை மிதித்து போக வேண்டும் ?
கழிசடை அரசியல் செய்யும் கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் அவர்கள் கும்பலையும் மிதித்துப் போகவேண்டும்!!
ரஜினியின் ஆட்டம் தொடங்கப் போகின்றது போல் தோன்றுகின்றது.
தமிழ் நாட்டு மக்கள் காட்டில் இனி அடைமழை தான்.
தமிழ் நாட்டில் ஒரு மனிதனால் பூகம்பம் வரப் போகின்றது. இந்த பூகம்பத்துக்கு பந்தா பண்ணத் தெரியாது.சும்மா சொல்லாம சொல்லி நல்லது பண்ணும்.
அரசியல் ஒன்றும் ஈஸிஇல்லை நீங்க வந்துட்டிங்கன்னா அது உங்களுக்கு கஷ்டமே இல்லை
அனைத்து தலைவரின் ரசிகர்களும் கவனிக்க:
தலைவரின் எதிரிகள் அவர் அரசியல் பற்றி பேசினால் அவரின் நேர்மை பற்றி விமர்சனம் செய்ய முடியாது. ஆனால் படம் ஓடுவதற்காக செய்யும் publicity என்றே விமர்சனம் செய்கின்றனர். இனி மேல் இந்த மாதிரி விமர்சனம் வராமல் இருக்க வேண்டும் என்றால் நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். ” எல்லா நடிகர்களும் அரசியல் பற்றி பேசினால் படம் ஓடி விடுமா?”
sharajinis says: அரசியல் ஒன்றும் ஈஸிஇல்லை நீங்க வந்துட்டிங்கன்னா அது உங்களுக்கு கஷ்டமே இல்லை.
– மிக சரியாக சொன்னீர்கள்
நான் ரஜினிக்கு மக்கள் மதியில் மரியாதை குறைந்து …இன்று கிட்ட தட்ட அவரை ஒரு Fraud போல சித்தரிக்க தொடங்கி இருகின்றது …ஊடகங்கள் ..இன்று ..எல்லா காட்சி ஊடகங்களிலும் ..அவரி திட்டி தீர்த்து கொண்டிருப்பது தான் மிச்சம் …!
இதோ ஒரு பதிவு இன்று தினமலரில் ..
http://www.dinamalar.com/news_detail.asp?id=1116488
இதில் பொது மக்கள் மக்கள் கருத்தை பாருங்கள் ….எல்லாம் இளைஞர்கள் ..அதுவும் ரசிகர்கள் ..இது தான் உண்மை!
எல்லா காட்சி ஊடகங்களின் கருத்து கணிப்புகளும் ரஜினியை 75% பேர் ஒரு சுயநல வாதியாய் வாக்கு அளித்து உள்ளனர்!
இவர் இந்த அந்தோ பரிதாப நிலைக்கு தள்ள பட்டிருப்பதும் …ஒரு நூதன திருடனை போல சித்தரிக்க படுவதும் ..இவரின் அரசியல் நிலை பாடுதான்!
இனிமேல் இவர் இந்த விளையாடேல்லாம் நிறுத்தி கொள்ள வேண்டும் ..இனிமேல் அவர் சம்பாதித்த பெயரை காப்பாற்ற வேண்டுமானால் ..சமுகர்திற்கு ஏதாவது செய்து ..தன் கலகத்தை துடைக்க பெரும் பாடு பட வேண்டி இருக்கும்!
_____________
தினமலம் ஒரு பத்திரிகையா.. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு விஷம் துப்பும் நீங்கள் நடுநிலையாளரா? அட குறைந்தபட்சம் ஒரு மனிதரா?… விஜயகாந்தை ஆராதிக்க வேறு இடம் பாருங்கள். Pl Dont try here… I never bother about you guys! பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் ஒரு எல்லை இருக்கிறது! ரஜினியைப் பிடிக்கவில்லை என்றால் போய்க் கொண்டே இருங்கள். உங்கள் கற்பனைக் கருத்துகளை இங்கே திணிக்க முயல வேண்டாம்.
-என்வழி
“தினமலம் ஒரு பத்திரிகையா.. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு விஷம் துப்பும் நீங்கள் நடுநிலையாளரா? அட குறைந்தபட்சம் ஒரு மனிதரா?… விஜயகாந்தை ஆராதிக்க வேறு இடம் பாருங்கள். Pl Dont try here… I never bother about you guys! பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது!
-என்வழி”
இளங்கோ போன்ற மாடுகளுக்கு என்வழியின் இந்த ஒரு சூடு போதும். திருந்தி விடுவார் என்று நம்புகிறோம்.
தினமலத்தின் விஷம் கக்கும் கட்டுரைகளை கண்டு ஒருபோதும் நாங்கள் வருந்தவில்லை, அதை பொருட்படுத்தவும் இல்லை. அவர்கள் பிஜேபியின் ஜால்ராவாக இருக்கட்டும். நாளையே தலைவரை போற்றி எழுதுவார்கள்.
தலைவரின் லிங்கா அனைத்து சாதனைகளையும் பெறப்போகிறது……தமிழ்நாட்டில் நிறைய சில்லறை கூட்டங்கள் மற்றும் கயவர்களின் கூட்டங்கள் இருக்கிறது. அவைகள் எல்லாம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.
அன்புடன் ரவி.
இளங்கோ – உன் மரியாதையை காப்பாற்றி கொள்ளவும். கமல் பற்றி பேசினால் உடனே விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து சந்தோஷ படுறே. தலைவர் பற்றி என்றால் ஏதாவது நடுநிலையாளர் போன்று உள்ளே வந்து கலகம் மூட்டுகிறாய்.
ரசிகர்கள் வருத்தமாய் இருக்கிறார்களாம். உன்கிட்டே எந்த ரசிகனாவது வந்து சொல்லி விட்டார்களா.
இந்த தளம் உனக்கானது அல்ல. உனக்கு சூடு சொரணை இருந்தால் உள்ளே வராதே.
சிங்கம் தயங்கினால்?அது நரிகளுக்கும்,ஓநாய்களுக்கும்,தான் கொண்டாட்டம்.
எனவே தயங்க வேண்டாம் தலைவா’
என்னை பொறுத்தவரை ரஜினி பேசுவதை விட செயலில் காட்டுவது நல்லது. எந்திரன் படத்துக்கு முன் ரசிகர்களை சந்தித்த ரஜினி படம் வெளிவரட்டும் உட்கார்ந்து பேசுவோம் என்றார்…ஆனால் பின்னர் அதை பற்றி வாயே திறக்கவில்லை..இப்போது வர பயப்படவில்லை ஆனால் தயங்குகிறேன் என்கிறார்..ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் நாம் அவரை நேசிக்காமல் இருக்கப் போவதில்லை..நாம் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விருப்பபட்டது உண்மை ..ஆனால் ஒரு கட்டத்தில் அந்த எதிர்பார்ப்பு நின்று போய்விட்டது..அடுத்த படம் என்ன என்கிற எதிர்பார்ப்பும், அவர் சினிமாவில் செய்யப்போகும் சாதனைகளும் மட்டுமே நம் கவனத்தில் இருந்தது…ஆனால் சில மாதங்களுக்கு முன் மங்கலூர் விமான நிலையத்தில் “அரசியலுக்கு வருவது மக்கள் கையில் இருக்கிறது” என்று சொல்லி மீண்டும் நம்மிடம் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தினார்..அதன் தொடர்சியாகவே பல அரசியல் கட்சிகள் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது..ஜெவுக்கு வாழ்த்து சொன்னதன் மூலம் கிட்டத்தட்ட அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்..நிம்மதியாக இருந்தது..ஆனால் இப்போது மறுபடியும் கமா போட்டு சர்ச்சையை தொடங்கி வைத்துவிட்டார்..நான் கேட்பது எல்லாம் ரஜினி அவர் இஷ்டப்படி முடிவு எடுக்கட்டும் ஆனால் அப்படி ஒரு முடிவு எடுக்கும் வரை அதை ஏன் வெளியில் சொல்லவேண்டும்..இதனால் ரஜினியின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது..அதுவும் சரியாக லிங்கா வெளியாவதற்கு முன் சொன்னால் விமர்சனம் வரத்தான் செய்யும்,இதனால் ரஜினி ரசிகர்களாகிய நாம் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என்று ரஜினிக்கு ஏன் புரியவில்லை…நம் நண்பர்களில் இருந்து , நம்மை பார்க்கும் எல்லோருக்கும் நாம் கேலிப்பொருளாகிவிட்டோம்..வருவதாக இருந்தால் வாருங்கள் …அப்புறம் வைக்கப்படும் விமர்சனத்தை .நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ..எவன் வாய் திறக்கிறானோ அவனை நாங்கள் எதிர்கொள்கிறோம்..ஆனால் இப்படி மதில் பூனையாக பேசுவதால் எங்களால் எதுவும் பேச முடிவதில்லை..மிகப்பெரும் மன உளைச்சலும், விரக்தியும் உண்டாகிறது…ரஜினியிடம் நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை..கடைசிவரை அவர் நன்றாக இருக்கட்டும், நாமும் நம் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக ஒரு நல்ல மனிதனுக்கு ரசிகனாக இருப்போம், நம் கவனமும் சிதறாமல் இருக்கும்…இல்லைன்னா இறங்குங்கள் ..ஒரு கை பார்த்துவிடுவோம்..எந்த ஒரு ரஜினி ரசிகனுக்கும் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வேண்டாம்,..யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள் ..நாங்கள் ஜெயிக்க வைக்கிறோம், பணம் செலவு பண்ண வேண்டுமா ? செய்கிறோம்..வெற்றி பெற்றால் பெருமிதம் கொள்வோம்..தோல்வியுற்றால் களத்தில் இறங்கிய பெருமையுடன் தலை நிமிர்ந்து நடப்போம், எவன் காசும் வேண்டியதில்லை , நம் காசை போட்டு ஒரு இயக்கமாக நல்லது செய்வோம்….ஆனால் தயவு செய்து இந்த தயக்கம் வேண்டாம்..நாங்கள் இன்னும் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல..பெரும்பான்மையான ரஜினி ரசிகர்கள் இன்று நடுத்தர வயதினர் ..குடும்பம் குழந்தை என்று இருக்கிறோம்,..அளவுக்கு மீறிய பொறுமை வந்துவிட்டது…முன்பு மாதிரி இருந்திருந்தால் எவனாவது பேச முடியுமா…? மவனே சங்குதான்….ஆனால் இன்று ? கண்டவனெல்லாம் பேசுகிறான் ..கேலி செய்கிறான் ..அதுவும் கூட பழகிவிட்டது . ஆனால் ஒரு அயர்ச்சி வருகிறது..இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அடுத்தவன் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி கொண்டிருப்பது..? இது ஏதாவது விபரீதத்தில் போய் முடியப் போகிறது..அதனால் நாங்கள் கேட்பதெல்லாம் இனியும் இப்படி பேசுவதை விட்டுவிட்டு ஒரு தெளிவான முடிவெடுங்கள் ..இல்லையென்றால் எங்கள் விதி என்று ஊர் பேசுவதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறோம்..அப்பொழுதும் எங்களுக்கு ரஜினி மட்டுமே அடையாளம்..வேறு எவனுக்கும் எங்கள் மனதில் இடமில்லை…
மிஸ்டர் இளங்கோ ,உங்கள் ஆசை எங்களுக்கு புரிகிறது ,ஆனால் உங்க ஆசை எந்தக்கலதிலும் உங்கள் அசை நிறைவேறாது ,நிங்க பேசாம நல்லவனா ஆகிடுங்க ,என்ன அவரது திரைப்பட வியாபாரம் கூடிக்கிட்டெ போகிறது ,மிடியக்களும் தங்களை பார்க்க வைக்க இன்னும் ரஜினி என்னும் மந்திரத்தைத்தான் கையில் எடுக்கின்றது .எரிச்சல் படாதிங்க ,யார் வந்த நாட்டுக்கு நல்லதின்னு பாருங்க ,,,,,,,,,,,,,,,,,
நண்பர்களே.. நான் தினமலர் நாளிதழை பல ஆண்டுகளாக படித்து
வருகிறேன்.. இது மறைமுகமாக அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக
பல செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது.
இதில் வந்த சூப்பர் ஸ்டார் பற்றிய கருத்துக்கள் ஒரு சில குறிப்பிட்ட
கட்சிக்காரர்கள் போலத் தான் இருந்ததே தவிர ரஜினி ரசிகர்கள்
கருத்துக்கள் என எடுத்துக் கொள்ள முடியாது. அந்தக் கட்சிகள்
எவை, எவை என்பதை நண்பர்கள் கணிப்புக்கு விட்டு விடுகிறேன்.
வேறொரு வார இதழ் “ரஜினிகாந்த் புலியா, எலியா?” என அட்டையில்
லிங்கா புகைப்படம் போட்டு கட்டுரை எழுதி இருக்கிறது. இதைப்
படித்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது.. “இப்படி எல்லாம் எழுதி ஒரு
பத்திரிகையை விற்க வேண்டுமா?” என்று தான் தோன்றியது… நன்றி..
-== மிஸ்டர் பாவலன் ==
Yarukkum ithu varai teriyatha tinamalar survey, adutha super star survey, ivaitan elango ponra velai vetti illatavargal athigam gavanam kudupangga. (intha survey-al unakku yenna payan? Mottha kaasum avange vidthukutanne pogum? )
Ana pona varusham nadantha Greatest Living Legend survey result vanthappo unakku vethanai??
his fans voted against him.? Then, who r we?
Rajini yen nanban, yendru pechil madthum sollum Kamal vazhtuvathukku admin romba nallavaranu kettiye, thalaivar pathi tappa pesiya nee nallavana?
Oru padam kuduthu athu flop ana kudhe, tanakku paanam vanthal podthumnu producersku mottai podhum actors mattiyil, yarum nashtam aga kudathu, yellarum laabam kidaikkanumnu ninaikkira avar suyanalavati, fraud? ( ithu varaikum yarum vangiya kaasu tiruppi kuduthathu illai)
First off all, he didnt start it. If others started talking abt politics, was it his fault? Even stupid media alwayz insist on his political views each time n put him under inconvenient situation. Avar arasiyal padthi pesavendamna arasiyal padthi avaridam ketkurathu muthala nirunthanum. Yetavuthu pesuna, athu publicitynu solrathu kevalam.