BREAKING NEWS
Search

வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை


வாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… உன்னோட கடமைகளை சீரியஸா பண்ணு…

ஒருத்தனுக்கு ரொம்பப் பிரச்சினை… ரொம்ப ரொம்ப பிரச்சினை. சமாளிக்க முடியல. உடனே அங்க பக்கத்துல இருந்த ஒரு சாமியார்கிட்டப் போனான்.

“சாமி… ஏகப்பட்ட பிரச்சினை எனக்கு… சமாளிக்க முடியல… ஏதாவது ஒரு வழி சொல்லுங்க”ன்னு கேட்டான். உடனே அவரு, ஒரு பெரிய மாட்டுக்கொட்டகைக்கு கூட்டிட்டுப் போய், “இங்கே இருக்கிற மாடுகளை எல்லாம் படுக்க வச்சிட்டு வா, காலைல வழி சொல்லுறேன்”னு சொல்லிட்டுப் போயிட்டார்.

காலையில் வந்து சாமியார்கிட்ட நின்னான்… கண்ணெல்லாம் சிவந்து போய் இருந்தான்.

“என்னப்பா.. ராத்திரியெல்லாம் தூங்கலியா?”ன்னு சாமியார் கேக்க,
“எங்கே சாமி தூங்கறது… ஒரு மாட்டை கஷ்ட்டப்பட்டு படுக்க வச்சா, அடுத்த மாடு எழுது… அதை தூங்க வச்சா இன்னொன்னு நிக்கிது… இது படுத்தா அது நிக்கிது, அது எழுந்தா இது படுக்குது… முடியல சாமி,”ன்னான்.

“இதாம்பா வாழ்க்கை. ஏதாவது ஒரு மாடு எப்பவும் கத்திட்டேதான் இருக்கும், சில பிரச்சினை தீரும்… சில பிரச்சினை தீரவே தீராது… அதை அப்படியே கடவுள்கிட்ட விட்டுட்டு போயிட்டே இருக்கணும்… சிலதையெல்லாம் விட்டுடு..”

– 14.08.2019-ல் நடந்த கலைஞானம் பாராட்டு விழாவில் தலைவர் ரஜினி சொன்னக் குட்டிக் கதை

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *