BREAKING NEWS
Search

எளிமையான பூஜையுடன் கபாலி படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

எளிமையான பூஜையுடன் கபாலி படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி பெயரும், புதிய டிசைன்களும்தான் இன்று இணையத்திலும் மீடியாவிலும் நாளிதழ்களிலும் கலக்கிக் கொண்டிருக்கின்றன.

இவை வெளியானதிலிருந்தே ஒவ்வொரு ரஜினி ரசிகரும் விசாரித்தது, படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் நடக்கும் இடம் குறித்துதான். இந்த விஷயங்களை மகா ரகசியமாக வைத்திருந்தனர் படக்குழுவினர்.

இன்று காலை எளிய முறையில் படத்தின் பூஜை சென்னை ரஷ்ய கலை பண்பாட்டு மையத்தில் நடந்தது. இதில் நீல நிற ஜீன்ஸ், கரு நீல நிற சட்டை அணிந்து, கபாலி கெட்டப்பிலேயே வந்திருந்தார் ரஜினி.

அவர் கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்து வணங்கினார்.

இயக்குநர் பா ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு மற்றும் படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.

மீடியாக்காரர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை. படத்தின் பூஜை ஸ்டில்கள் உடனுக்குடன் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சுவர்களில் இன்று காலை முதலே கபாலி ஸ்டில்கள்தான் அலங்கரித்துக் கொண்டுள்ளன.

 




12 thoughts on “எளிமையான பூஜையுடன் கபாலி படப்பிடிப்பு இன்று தொடங்கியது!

  1. R O S H A N

    சூப்பர் தல…..செம்ம ஸ்டில்ஸ்….highest definition ஸ்டில்ஸ்…..இதே மாதிரி first look stills um highest definition la போஸ்ட் பண்ணுங்க ஜி…..தலைவர் என்ன அழகா இருக்காரு…..சீரியஸா இருக்கற மாதிரி இருக்கு , இப்போவே கபாலி mindset ku வந்துடாரு போல……இனிமேல் ஒரே அதிரடி தான் \m/

  2. anbudan ravi

    அனைவரின் மனதையும் கபளீகரம் செய்துவிட்டார் தலைவர்……கெட்ட பையன் சார் இந்த கபாலி.

    அன்புடன் ரவி.

  3. Rajagopalan

    மகிழ்ச்சி…மிக்க மகிழ்ச்சி…
    அதிரடி ஆரம்பம்….

  4. Kumaran

    இந்த வயதில் என் தலைவரின் கம்பீரம் வியக்க வைக்கிறது.
    வாழ்த்துக்கள் தலைவா .

  5. Sargunaraj

    தலைவா சூப்பர்…!!!!!!!!!!

    கெட்ட பையன் சார் இந்த கபாலி.

    ரஜினி வெறியன்,

    SARGUNARAJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *