BREAKING NEWS
Search

தலைவரின் கம்பீர கபாலி அவதாரம்… சிலிர்ப்பில் ரசிகர்கள்!

கபாலி தலைவரின் கம்பீர முதல் தோற்றம்… சிலிர்ப்பில் ரசிகர்கள்!

kabali-1

பாலி படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தோற்றம் எப்படி இருக்கும்? இந்தக் கேள்வியை தங்களுக்குள் கேட்டுக் கொண்ட ரஜினி ரசிகர்கள் அனைவரும், அதற்கான விடையையும் தாங்களே தேடி திருப்திப்பட்டுக் கொண்டிருந்தனர், படம் அறிவித்த நாளிலிருந்து.

இந்தப் படத்தைப் போல வேறு எந்தப் படத்துக்கும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டிசைன்கள் வெளியானதில்லை. ஒவ்வொரு போஸ்டருமே அத்தனை தொழில்முறை நேர்த்தியுடன் வந்தன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட டிசைன்களை ரசிகர்கள் உருவாக்கி வந்தனர்.

kabali-2

இந்த நிலையில் புதன்கிழமை மாலையே கபாலி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியாகிவிட்டன. பத்திரிகைளுக்கும் அனுப்பப்பட்டன. சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த முதல் தோற்றப் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர்கள் வெளியான அடுத்த நொடியே உலகமே அதிரும் அளவுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றன. ரசிகர்கள் யாரும் யோசிக்காத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இந்த போஸ்டர்கள் அமைந்துவிட்டன.

முதல் தோற்ற போஸ்டரின் வெற்றியையே பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் எனும் அளவுக்கு இந்த போஸ்டர்கள் சமூக வலைத் தளங்களையும், பொது ஊடகங்களையும் கலக்கி வருகின்றன.

-என்வழி




6 thoughts on “தலைவரின் கம்பீர கபாலி அவதாரம்… சிலிர்ப்பில் ரசிகர்கள்!

  1. anbudan ravi

    தலைவரின் இந்த ஸ்டைல் வேறு எந்த நடிகனுக்கும் வராது இனி வரப்போவதுமில்லை…….கோச்சடையான் லிங்கா பிரச்சனைகளால் உழன்று கிடந்த எங்களின் இதயத்திற்கு இப்பொழுதுதான் ஆக்சிஜன் கிடைத்திருக்கிறது. இனி கபாலி வரும்வரை தினம் தினம் தீபாவளிதான்.

    அன்புடன் ரவி.

  2. Arokiyaraj

    ஒவ்வொரு ஸ்டில்லும் அருமை. தலைவர் கலக்க ஆரம்பித்து விட்டார்.
    எதிரிகள் ஜாக்கிரதை.

  3. குமரன்

    முதல் தோற்றம் என்பதை விடவும்…. முதற்பார்வை என்பது பொருத்தமாக இருக்கும்.

    அவரது புதிய ஆடைகள், அலங்காரம் அனைத்தும் அருமை.
    போஸ்டர் பிரமாதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *