BREAKING NEWS
Search

கோச்சடையானுக்காக காத்திருக்கும் ஜப்பான் ரசிகர்கள்!

கோச்சடையானுக்காக காத்திருக்கும் ஜப்பான் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தைப் பார்க்க அவருடைய ஜப்பானிய ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்துவி்ட்டது. ஹாலிவுட் படமான அவதாரில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்ச்சரிங் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் வெளியாகும் முதல் 3டி படம் கோச்சடையான். இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை தந்துள்ளார்.

கோச்சடையானில் கெஸ்ட் ரோலில் ஐஸ்வர்யா ராய் வருகிறார் என்று சிலர் தகவல் பரப்பினர். ஆனால் அது உண்மை இல்லை என்று இயக்குனர் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

இந்த படம் ஜப்பானிய மொழி மற்றும் ஆங்கிலத்திலும் டப் செய்து வெளியிடப்படுகிறது. ரஜினிக்கு ஜப்பானில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது  அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களின் வசதிக்காகத்தான் ஜப்பானிய மொழியிலும் டப் செய்யப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதிலிருந்து கோச்சடையான் படத்தைப் பார்க்க ஜப்பானிய ரசிகர்கள் பேராவலாக உள்ளார்களாம். இந்தப் படத்தை வாங்கி வெளியிட ஆர்வமாக உள்ளதாக ஜப்பானில் உள்ள திரைப்பட விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விஸ்வரூபத்தில் நடிக்க தீபிகா மறுத்து விட்டார்! – கமல்ஹாசன்

விஸ்பரூபம் படத்தில் தீபகா படுகோனை நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என கமல்ஹாஸன் கூறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் முதல் முறையாக விஸ்வரூபம் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டன.

விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள், இப்படத்தில் முதலில் தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லையே, ஏன்? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கமல், “தீபிகாவை இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனால் அவர்தான் நடிக்க மறுத்து விட்டார். நாங்கள் கேட்ட தேதிகல் அவரிடம் இல்லை.

உண்மையில் எனது படத்தின் பைனான்ஸியர்கள்தான் தீபிகா நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். எனக்கு அப்படி எதுவும் இல்லை (!?).

இருந்தாலும், இப்படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இது எனக்கு பெரும் திருப்தி,” என்றார் கமல்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *