BREAKING NEWS
Search

எனக்கும் இஸ்லாமும் ஏதோ ஒரு பந்தமிருக்கு! – தலைவர் ரஜினிகாந்த்

3232PointO
துபாய்: எனக்கும் இஸ்லாமும் ஏதோ ஒரு பந்தமிருக்கு… என் வாழ்வில் நான் இந்த அளவுக்கு வந்ததற்க்கு மிகப்பெரிய காரணம் என் இஸ்லாமிய நண்பர்கள்தான், என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

துபாய் நகரில் பிரமாண்டமாய், கோலாகலமாய் நடந்த 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினி, துபாயின் சிறப்பு, தனக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்குமான பந்தம் குறித்துப் பேசினார்.

அவர் கூறுகையில், “இந்த துபாய்க்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன். தெற்காசியாவின் அமெரிக்கா துபாய். ஏராளமான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு தந்த நாடு இது. அதற்காக ஒரு இந்தியனா துபாய் அரசருக்கு நன்றி.

எனக்கும் இஸ்லாமுக்கும் ஏதோ ஒரு வகை பந்தம் தொடர்கிறது. எழுபதுகளில் நான் கண்டக்டராக இருக்கும் போது எனக்கு பல உதவிகளை செய்தவர்கள் என் இஸ்லாமிய நண்பர்கள்தான்.

நான் நடிக்க ஆரம்பித்த புதிதில் எனக்கு தங்க இடம் தந்த நண்பரின் வீட்டுக்குச் சொந்தக்காரர்தான்.

நான் இப்போது இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்.
ராகவேந்திரா மண்டபத்தின் இடத்தை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான். அது தானா அமைஞ்சது.

762PointO

அனைத்துக்கும் மேல என் குரு ராகவேந்திரா சுவாமி கோயில் அமைய மந்த்ராலயாவில் இடம் கொடுத்தவரும் ஒரு நவாப் தான்.

அதுக்கும் மேல நான் நடித்த படங்களிலேயே ஒரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும் என்றால் அது பாட்ஷா படம்தான். அதுவும் ஒரு இஸ்லாமியர் பெயர்தான்.

இப்படி பல வகையில் இஸ்லாம் என் வாழ்க்கையில் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது,” என்று ரஜினிகாந்த் மேடையில் பேசினார்.




One thought on “எனக்கும் இஸ்லாமும் ஏதோ ஒரு பந்தமிருக்கு! – தலைவர் ரஜினிகாந்த்

  1. குமரன்

    தலைவர் பேச்சில் பல அர்த்தம் இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *