BREAKING NEWS
Search

யார் வயித்திலயும் அடிக்காம நேர்மையா வாய்ப்புகளைப் பயன்படுத்தினா நல்லாருப்போம்! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுப் பேச்சு

3302PointO

 துபாய்: சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பது கஷ்டம். அப்படிக் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் வெற்றி கிடைக்கும் என்றார் ரஜினிகாந்த்.

துபாயில் உலகே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்த 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில், “ஷங்கர் மேல இருக்கற நம்பிக்கைதான் இந்தப் படத்துல என்னை நடிக்க வச்சது. ஷங்கர் சொன்னார் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன், வெயில்ல நின்னேன்னு.
ஒரு வாய்ப்பு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அந்த வாய்ப்புக் கிடைக்கும்போது அதைச் சரியா பயன்படுத்திக்கலேன்னா நம்மளை விட முட்டாள் யாருமில்லை. ஒருத்தர் பேரும் புகழோடும் இருக்காங்கன்னா அது அவங்க திறமையாலயோ, கடின உழைப்பாலயோ மட்டும் கிடையாது. அவருக்குக் கிடைச்ச வாய்ப்பை அவர் சரியா பயன்படுத்திக்கிட்டார். அதனாலதான் அவர் பெரிய இடத்தில் இருக்கார்.

வாய்ப்புகள் சில பேருக்கு தானா வரும். அது ஆண்டவனுடைய அருள். அப்படி வரலேன்னு சொன்னா நாமளே அந்த வாய்ப்புகளைத் தேடி உண்டாக்கிக்கணும்.

அந்த வாய்ப்பு மத்தவங்க வயித்துல அடிக்காம, மத்தவங்க வாய்ப்பைப் பறிக்காம, நாணயமா, நேர்மையா வாய்ப்பை சம்பாரிச்சு உழைச்சா என்னிக்குமே நல்லாருப்போம்.

2.ஓ படம் வந்து… நான் எப்படி சொல்றதுன்னு தெரியல… இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஷங்கர், சுபாஷ்கரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் ஒவ்வொருத்தரும் வாய்ப்பை நன்கு பயன்படுத்தியிருக்காங்க. அதாவது ஷங்கருடையை இந்த கற்பனையை திரையில கொண்டு வர்றதுக்கு சுபாஷ்கரன் பெரிய வாய்ப்பை அமைச்சிக் கொடுத்திருக்கார்.

202PointO

சினிமாவிலதான் சம்பாதிக்கணுங்கற நிலையோ, ஆசையோ சுபாஷ்கரனுக்குக் கிடையாது. அவருக்கு நிறைய தொழில்கள் உள்ளன. ஏராளமா சம்பாதிச்சிருக்கார். இந்தியாவுக்கு ஒரு நல்ல பிரமாண்டமான படம் கொடுக்கணும், இதுவரை யாரும் செய்திடாத அளவுக்கு இந்திய மண்ணுக்கு ஒரு படம் தரவேண்டும் என்ற ஆசையோட, எண்ணத்தோட அவர் வந்தது, அவருக்கு இந்த மாதிரி ஒரு டைரக்டர் கிடைச்சது ஒரு வாய்ப்புதான்.

எல்லாமே வாய்ப்புகள்தான். ஏ ஆர் ரஹ்மான், ரசூல் பூக்குட்டி.. இப்படி ஒவ்வொருத்தரும் இந்தப் படத்துக்கு அமைஞ்சது தெய்வ சங்கல்பம்தான்.

இந்தியாவில இனிமே இதுமாதிரி ஒரு படம் வருமா என்பது எனக்குத் தெரியாது. ஆனா ஷங்கரால நிச்சயமா முடியும் அது.

இந்தப் படத்தை நாமளே ஹாலிவுட்டுக்கு மீறின படம் என்று சொல்லிக்கிட்டிருந்தா, நம்மளைப் பத்தி நாமளே ஊதிப் பெருதாக்குற மாதிரி இருக்கும். ஆனா படம் பார்த்த பிறகு நீங்களே உணர்வீங்க.

இந்தப் படத்தில் நம்பர் ஒன் ஹாலிவுட் டெக்னீஷியன்ஸ் வேலை பாத்திருக்காங்க. அவங்க பணத்துக்காக மட்டும் இந்தப் படத்துல வேல செய்யல. ஏற்கெனவே படங்கள்ல ரொம்ப பிஸியா இருந்தவங்க. ஆனா ஷங்கரோட ஸ்க்ரிப்ட் கேட்டு பிடிச்சுப்போய் தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்திருக்காங்கன்னு சொன்னா, இந்த சப்ஜெக்ட் எப்படி இருக்கும்னு யோசிச்சிப் பாத்துக்கங்க.

இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு மீண்டும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்,” என்றார்.

துபாய் அரசருக்கு நன்றி

அவர் தனது பேச்சில் துபாய் அரசருக்கு நன்றி தெரிவித்தார். தன் பேச்சில், “நான் துபாய்க்கு வந்தது இதுதான் முதல் முறை. நிறையமுறை, வேறு நாடுகளுக்குச் செல்லும்போது வழியில் இங்கே இறங்கி ஏர்போர்ட்டில் தங்கி இருக்கேன்.

ஏர்போர்ட்டுக்கு வெளியே துபாய்க்கு வருவது இதுதான் முதல் முறை. இந்த துபாய் தெற்காசியாவில் ஒரு அமெரிக்கா. எத்தனையோ பேருக்கு வேலை கொடுத்திருக்காங்க. எத்தனையோ இந்தியர்கள் இங்கே வேலை பார்க்கிறாங்க. அவங்களுக்கு வேலை கொடுத்த துபாய் அரசருக்கு ஒரு இந்தியனா நன்றி தெரிவிச்சிக்கிறேன்,” என்றார்.

-என்வழி

Here Rajinikanth’s complete inspiring speech at 2.O audio launch
2 thoughts on “யார் வயித்திலயும் அடிக்காம நேர்மையா வாய்ப்புகளைப் பயன்படுத்தினா நல்லாருப்போம்! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுப் பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *