BREAKING NEWS
Search

ஒரே ஒரு மேடைப் பேச்சில் அடுத்த பத்தாண்டு அரசியலுக்கு அஸ்திவாரம் அமைத்த ரஜினிகாந்த்!

ன்னென்ன கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என ஒவ்வொரு ரஜினி ரசிகனும் விரும்பினானோ…

என்னென்ன விமர்சனங்களுக்கு பதிலடி தர வேண்டுமென பொருமினார்களோ…

என்னென்ன சீண்டல்களுக்கு வட்டியும் முதலுமாய் திருப்பித் தர வேண்டும் என ஆத்திரப்பட்டார்களோ…

அத்தனைக்கும் ஒரே மேடையில் அனலும் புனலும் பொங்கும் பேச்சால் பதில் தந்து, தன் ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் ஆசுவாசப்படுத்திவிட்டார் தலைவர் ரஜினிகாந்த். இன்னும் பத்தாண்டு அரசியலுக்கு ஆழமான அஸ்திவாரம் இது!

இனியும் அவரை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பவர்களின் மனநிலையை நிச்சயம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும், நடுநிலையாளர்கள் என தங்களைச் சொல்லிக் கொள்வோர்.

ஒரு நல்ல மனிதன், மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என வருகிறார். அவரை நோக்கி சில்லறைத்தனமாக கேட்டுக் கொண்டிருப்போரை இனியும் அனுமதிக்கப்போகிறதா தமிழகம்…?

தலைவர் ஆட்சியில் தமிழகம் தழைக்கட்டும்!

ரஜினி பேச்சு.. வீடியோ:

 

நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சி




5 thoughts on “ஒரே ஒரு மேடைப் பேச்சில் அடுத்த பத்தாண்டு அரசியலுக்கு அஸ்திவாரம் அமைத்த ரஜினிகாந்த்!

  1. தமிழ்நேசன்

    தமிழக மக்கள் நினைத்து விட்டார்கள். அவர்கள் எண்ணப்படி, தலைவர் ரஜினி அவர்கள் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். இளைஞர்கள் பட்டாளம் என்றும் எப்பவும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பின்னால் தான் உள்ளது. தமிழக மக்கள், இளைஞர்கள், மாணவிகள் என அனைத்து தரப்பினரும், தலைவர் ரஜினி அவர்கள் தான் தமிழகத்தில் முதல்வராக வர வேண்டும் என விரும்புகிறார்கள்.
    தமிழன் வளர்ந்தால்தால் தமிழ் வளரும். மிக மிக அருமையாக பேசி உள்ளார்.
    தமிழர் அல்லாதவர்களுக்கு, தலைவர் ரஜினி அவர்களின் பேச்சு புரிய வாய்ப்பு இல்லை. மொத்தத்தில் ஊழல் வாதிகளுக்கு சரியான சவுக்கடி.
    வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி
    தலைவர் ரஜினி அவர்கள், காமராஜர் போன்று சிறப்பான ஒரு நல்லாட்சியை தமிழக மக்களுக்கு வழங்குவார்.
    தலைவர் ரஜினி அவர்கள் தான், ஏகோபித்த தமிழக மக்களின் ஆதரவுடன், தமிழக முதல்வர் சிம்மாசனத்தில் அமர போகிறார்.
    தலைவர் ரஜினி அவர்களின் ஆட்சியில் தான் தமிழகம் முன்னேறும்.
    தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும், தலைவர் ரஜினி அவர்களின் கள்ளம் கபடமில்லாத அதிரடி பேச்சுகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அவர்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *