BREAKING NEWS
Search

‘வாத்தியார்’ படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்த ‘தலைவரின்’ அனுபவம் இது!

வாத்தியார்’ படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்த ‘தலைவரின்’ அனுபவம் இது!

rajini-screen

மிழகத்தில் முதல் நாள் முதல் காட்சி என்ற சொல் பிரபலமானதே தலைவர் ரஜினி படங்களால்தான். அதற்கு முன் இல்லை என்று சொல்லவில்லை… அந்த சொல் பிரபலமானதை மட்டும் குறிப்பிடுகிறேன். எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சிகள் போட்டதுண்டு. ஆனால் நள்ளிரவு, அதிகாலையில் கிடையாது. வழக்கமான காட்சி நேரங்கள்தான்.

அந்த ரஜினியே எம்ஜிஆரின் படத்தை முதல் நாள் முதல் காட்சி, அதுவும் பெங்களூரில் பார்த்து ரசித்திருக்கிறார். அந்த அனுபவத்தை அவர் நேற்றைய ஆர்எம்வீ பிறந்த நாள் நிகழ்வில் பகிர்ந்து கொண்டார்.

ரஜினியின் அந்த அனுபவம், அவரது வார்த்தைகளில்…

“என் நண்பன் ஒருவன் ‘எங்களோட வாத்தியார் எம்ஜிஆர் படத்தை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ நீ டிக்கெட் வாங்கி பாத்துட்டு வந்தா உனக்கு என்ன வேணாலும் நான் கொடுக்கிறேன்’னு சேலஞ்ச் பண்ணான். அப்போ வந்து நான் ஆணையிட்டால் படம் ரிலீசாகியிருந்தது.

அப்போ டிக்கெட் விலை 65 பைசா, ரூ 1.10 பைசா, ரூ 2.10 பால்கனி… அப்புறம் இன்னொரு க்ளாஸ். 65 பைசாதான் என் ரேஞ்ச். தமிழ்நாட்ல அவருக்கு எப்படின்னு தெரியும்… ஆனா அதைவிட ஜாஸ்தி, கர்நாடகாவுல உள்ள தமிழர்கள் எம்ஜிஆர் பேன்ஸ். வெறியனுங்கன்னு சொன்னா, அங்க மாதிரி எங்கும் கிடையாது.  அதாவது நாடு விட்டு நாடு வந்த அவங்க அங்க சேரும்போது அந்த ஒற்றுமை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். எப்பவுமே தமிழரோட ஒற்றுமை தமிழ்நாட்டைவிட வெளியேதான் அதிகமா இருக்கும்.

rajini-screen2

காலைல 5.30-க்குப் போயி டிக்கெட் வாங்கணும். கன்னட ராஜ்குமார் படங்களுக்கு 8, 8.30 மணிக்கு.. ஆனா இந்தப் படத்துக்கு 5.30 மணிக்கோ போயி 12 மணி வரை வேர்த்து விறுத்து, பக்கெட்ல தண்ணி எடுத்து ஊத்துவாங்க.. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கிட்டேன். டிக்கெட் வாங்கி படம் பாத்துட்டு வந்தேன். என் ப்ரெண்ட் ஆடிப் போயிட்டான்.

அந்தப் படத்தோட தயாரிப்பாளர்தான் நம்ம ஆர்எம்வீ அவர்கள். சத்யா மூவீஸ்.. நான் ஆணையிட்டால்.

நான் வந்து… பெரிய ஆர்டிஸ்ட் ஆன பிறகு, ராணுவ வீரன்.. முதல் படம், சத்யா மூவீஸுக்கு நான் பண்ண முதல் படம். அந்தப் படம் பண்ணும்போது எனக்கு அந்த பெங்களூர் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.

65 பைசா கொடுத்து கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி நான் பாத்த நான் ஆணையிட்டால் படத்தின் தயாரிப்பாளர் ஆர்எம்வீ பேனர்ல நான் படம் பண்ணது, நாத்திகர்கள் காலத்தின் கட்டாயம்னு சொல்வாங்க.. ஆன்மீகவாதிகள் விதி, தெய்வச் செயல்னு சொல்வாங்க… என்னை காலம் எங்கிருந்து எங்க கொண்டு வந்திருக்கிறது பாருங்க…

அதன் பிறகு ஆர்எம்வீ கூட நிறைய பழகியிருக்கேன். அவரிடம் போனில் பேசும்போது, நான் வீரப்பன் பேசறேன் என்பார். அப்போது எனக்கு பெரியார் ஞாபகத்துக்கு வருவார், அண்ணா ஞாபகத்துக்கு வருவார், காமராஜர் ஞாபகத்துக்கு வருவார், எம்ஜிஆர் ஞாபகத்துக்கு வருவார்… இன்னும் பெரிய பெரியவர்கள்கிட்டேயெல்லாம் ‘நான் வீரப்பன் பேசறேன்’ அப்டி பேசின அதே குரலை நானும் கேட்கறேன்னு நினைக்கும்போது எனக்கு புரியாத ஒரு உணர்வு ஏற்படும்.

ஆர்எம்வீ கூட பழகப் பழக எனக்கு எம்ஜிஆர் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாச்சு.. இவ்வளவு பெரிய அறிவாளி, இவ்வளவு ஒழுக்கமுள்ளவர், இவ்வளவு பெரிய மனிதர் அவருடன் பழகி, அவர் இவரை வேலை வாங்கியிருக்கிறாரே என்றபோது ஆச்சர்யம் அதிகமாச்சு.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு பத்தி எனக்குத் தெரியாது. ஆனா அவற்றை ஆர்எம்வீயிடம் நான் பார்க்கிறேன்.

ஒரு படம் எப்படி எடுக்கணும், அதை எப்படி பிஸினஸ் பண்ணனும், எப்படி மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும் போன்றவற்றில் ஏவிஎம் சரணவணனை அடிச்சிக்க ஆள் இல்ல. ஆனால் ஆர்எம்வீ சார்கிட்ட ஒரு மாஸ் ஹீரோவ கொடுத்திட்டா அந்தப் படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கறதுக்கு அவரை விட்டா ஆளில்லை….,” என்றார்.

-என்வழி
4 thoughts on “‘வாத்தியார்’ படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்த்த ‘தலைவரின்’ அனுபவம் இது!

  1. mohanraj

    மனதில் பட்டதை பேசும் தலைவர் ……… தலைவர் வாழ்க பலஆண்டு

  2. விஸ்வநாதன்

    உண்மையான யதார்த்தமான பேச்சு. தலைவர் ரஜினி அவர்கள் எப்பவுமே மனதில் உள்ளதை தான் பேசுவார். அதன் படியே செயல் படுவார். பிறரை போல எழுது வைத்து கொண்டு பேச சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தெரியாது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நோய் நொடி ஏதுமில்லாமல் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *