BREAKING NEWS
Search

எந்திரன் 2 முடிய இரண்டாண்டுகள் தேவை!

2017-ல் எந்திரன் 2!

e2rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கம்பீரமாக வெளிவரவிருக்கிறது.

இந்த நிலையில் எந்திரன் 2 படத்துக்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. கபாலி வெளியான கையோடு, எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

டிசம்பர் வரை கபாலி படப்பிடிப்பு நடப்பதால், 2016-ம் ஆண்டு ஜனவரியில் எந்திரன் 2 தொடங்குகிறது.

எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அர்னால்ட் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. அவரது சம்பளம் ரூ 35 கோடி என்கிறார்கள். 40 நாட்கள் அவர் கால்ஷீட் தந்துள்ளாராம்.

நாயகிகளில் ஒருவர் எமி ஜாக்ஸன். மேலும் ஒரு பிரபல நடிகையும் படத்தில் உண்டு.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 3டி மற்றும் 2டியில் படம் உருவாகிறது.

2016–ம் ஆண்டு தொடங்கும் எந்திரன் 2 படப்பிடிப்பு வரும் 2017-ல் முடிவடைகிறது. அந்தாண்டு இறுதிக்குள் அல்லது அதற்கடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் எந்திரன் 2ஐ வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.

-என்வழி




4 thoughts on “எந்திரன் 2 முடிய இரண்டாண்டுகள் தேவை!

  1. srikanth1974

    எந்திரன் 2 ஆம் பாகத்தில் தலைவர் நடிப்பது உறுதியாகிவிட்டதா?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *