BREAKING NEWS
Search

மூத்த அரசியல் விமர்சகர், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மரணம்!

‘துக்ளக்’ சோ மரணம்

choramaswamy

ருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக இன்று காலை 5 மணி அளவில் காலமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

சோ ராமசாமி  1934 அக்டோபர் 5-ல் சென்னையில் ஸ்ரீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார்.

இவர் 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பின‎ராக  பணியாற்றியுள்ளார். பத்திரிக்கை ஆசிரியர்,  வழக்கறிஞர், நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர்.

பத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக 1985 இல் ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கோயங்கா விருதும், 1998 இல் நசிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.

தமிழகத்தின் பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் திகழ்ந்தவர் சோ ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *