BREAKING NEWS
Search

தீபாவளியும் நான்தான், பொங்கலும் நான்தான்… – அதிரவைக்கும் தலைவரின் அடுத்தடுத்த ரிலீஸ்கள்!!

2.0 தீபாவளி… பேட்ட பொங்கல் விருந்து!

2.0 தீபாவளி… பேட்ட பொங்கல் விருந்து!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி சீஸன் மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வெளியாகிறது.

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு ஆகிய தினங்களில் ஏதாவது ஒரு ரஜினி படம் வெளியாகிவிடும். ஆனால் ரஜினிகாந்த் இந்தியாவி்ன் நிகரற்ற சூப்பர் ஸ்டார் என்றான பிறகு, அவர் படங்கள் வெளியாகும் தினங்களை பண்டிகை தினங்களாக மாறிவிட்டன.

கடைசியாக தீபாவளி நேரத்தில் வெளியான ரஜினி படம் முத்து. அதன் பிறகு தீபாவளி தேதியில் வெளியாகாமல், அதற்கு முன்பாகவே வெளியாகி பட்டையைக் கிளப்பிய படம் எந்திரன் (அக் 1, 2010). இப்போது தீபாவளி கழிந்து 22 நாட்கள் கழித்து வெளியாகும் மெகா படம் 2.0. இந்தப் படம் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகிறது. உலகெங்கும் 10000 அரங்குகளுக்கும் மேல் வெளியாகும் இந்தப் படம்தான் இந்தியாவின் மெகா பட்ஜெட் படம். அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படமும் 2.0 தான். ரசிகர்கள், சினிமா ஆர்வலர்களைப் பொருத்தவரை இந்த நவம்பர் 29தான் உண்மையில் தீபாவளி.

அடுத்து பொங்கல் விருந்தாக வருகிறது பேட்ட. ரஜினி நடிப்பில் கடைசியாக பொங்கலன்று வெளிவந்த படம் பாட்ஷா. இந்திய சினிமாவின் டாப் 10 படங்களில் ஒன்று. அதன்பிறகு கடந்த 23 ஆண்டுகளில் ரஜினியின் எந்தப் படமும் பொங்கலன்று வெளியானதில்லை. அந்தக் குறை தீர்க்க வருகிறது பேட்ட.

அநேகமாக ஜனவரி 11-ம் தேதியே இந்தப் படம் வெளியாகிவிடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள் வட்டத்தில்.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *