BREAKING NEWS
Search

‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’ பஞ்சு அருணாச்சலம்!

படைப்பாளி பஞ்சு அருணாச்சலம்!

panju - rajini

ஞ்சு அருணாச்சலம்…

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு, அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு அபார படைப்பாளி.

இசைஞானி இளையராஜாவை திரை இசை உலகுக்குத் தந்தவர். ரஜினிகாந்த் என்ற நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர். அவரை வைத்து அதிகப் படங்கள் தயாரித்த பெருமைக்குச் சொந்தக்காரர். இவரது திரையுலக அனுபவங்களைத் தொகுத்தால், அதுவே தமிழ் சினிமாவின் முக்கால்வாசி வரலாறாகிவிடும்.

அப்படி ஒரு அனுபவசாலி.

அவரது சினிமா அனுபவங்களை ஒரு ஆவணப் படமாக உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தலைப்பு ‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’.

இந்த ஆவணப் பட வெளியீட்டையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அண்மையில் வாழ்த்துச் செய்தியைப் பெற்றார் ஆவணப் படத்தின் இயக்குநரான ஜி தனஞ்செயன். அப்போது எடுத்த படம் இது.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *