BREAKING NEWS
Search

அமெரிக்காவில் குரு சச்சிதானந்தா ஆசிரமத்தில் தலைவர் ரஜினிகாந்த்… புதிய படங்கள்!

அமெரிக்காவில் தலைவர் ரஜினிகாந்த்… புதிய படங்கள்!

thalaivar-us1

யோகாவில்லே (வர்ஜீனியா): ஓய்வுக்காக அமெரிக்கா சென்ற தலைவர் ரஜினிகாந்த், அங்குள்ள தனது குரு சச்சிதானந்தாவின் லோட்டஸ் ஆசிரமத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.

கடந்த மே மாதம் 2.ஓ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். ஓய்வுக்காகவும், 2.ஓ படத்தின் சில சோதனைகளுக்காகவும் அவர் அமெரிக்கா சென்றார்.

ஆனால் ஊடகங்களில் கடந்த இரு மாதங்களாக பல்வேறு விதமான யூகங்களை செய்திகளாக வெளியிட்டு வந்தனர். அவருக்கு உடல் நிலை சரியில்லை, சிறுநீரகக் கோளாறு, மருத்துவமனையில் சிகிச்சை என்றெல்லாம் எழுதி வந்தனர்.

e7399cf7-a3e9-4f52-8902-abadbcef1f6b
Thalaivar-us-2
ஆனால் இதுகுறித்து ரஜினி குடும்பத்தினர், “தலைவர் ரஜினி நலமுடன் ஓய்வெடுத்து வருகிறார்,” என்று மட்டும் கூறினர். ஆனாலும் வதந்தி பரப்புவோர் ஓய்வதாக இல்லை.

இந்த நிலையில் அமெரிக்காவில் தலைவர் பங்கேற்ற லோட்டஸ் ஆசிரம விழாவில் எடுக்கப்பட்ட படங்களை சௌந்தர்யா ரஜினி இன்று வெளியிட்டுள்ளார்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் ஆசிரமத்துக்கு சென்ற தலைவர், அங்கு நடந்த ஆசிரமத்தின் 30வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.

Thalaivar-US-3

இந்த ஆசிரமத்தை உருவாக்கியவர் ரஜினியின் குரு சச்சிதானந்த சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி  




3 thoughts on “அமெரிக்காவில் குரு சச்சிதானந்தா ஆசிரமத்தில் தலைவர் ரஜினிகாந்த்… புதிய படங்கள்!

  1. srikanth1974

    MAKIZHCHI ! PERU MAKIZHCHI!

    THALAIVAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA!..

  2. jegan N

    #கபாலி மட்டும் இல்லை!#ரஜினியின் படங்கள் வரும்போதுதான் பலருக்கும் லோகத்தோட கஷ்டங்களெல்லாம் ஞாபகம் வரும்!
    கபாலி ரிலீஸ் பண்றாரே காஷ்மீர் பத்திக் கவலைப் பட்டாரா!?
    ஃபிளைட்ல பெயிண்ட் அடிச்சாரே ஃபிரான்ஸ் வெளியேறினது பத்தி ஏன் பேசலை!?
    ராக்கர்ஸை தடை பண்றாங்களே ராமேஸ்வரம் மீனவர்களுக்கு என்ன செஞ்சாரு!?
    அவரோட முகம் போட்டு காயின் அடிக்கறாரே அணுஉலை திறக்கறப்ப எங்கே போனாரு!?
    சிட்டிபாங்க் கார்டுல முகத்தைப் போடறாரே!
    ஸ்வாதி கொலையில் ஏன் ஓன்னுஞ் சொல்லலை!? அப்படி இப்படின்னு!

    இதுல ஒரு காமெடி என்னன்னா இப்படி சவுண்டைக் கொடுத்தவங்கதான் ஓசி டிக்கெட் ரஜினி படத்துக்குக்கு கிடைக்குமான்னு இருப்பாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *