BREAKING NEWS
Search

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

d54dc514-7002-408c-8b39-367a410ec14e

சென்னை: சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா உடன் ஞாயிறன்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்று டாக்டர்கள் 25வது நாட்களுக்கும் மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களும், சமூகப் பிரபலங்களும் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ஞாயிறன்று மாலை 6.15 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். சுமார் 30 நிமிஷங்கள் இருந்து நிபுணர் குழுவினர், அதிமுக நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரித்துவிட்டு, மாலை 6.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், “அன்புள்ள சி.எம். அவர்கள் விரைவில் நலமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்று வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் நேரில் வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றுள்ளார்.

ரஜினிகாந்தின் வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ரஜினி வந்து சென்ற பின்னரே ஊடகங்களுக்கு தகவல் தெரியவந்தது.

-என்வழி




One thought on “முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. srikanth1974

    தமிழக முதல்வர் அவர்கள் விரைவில்
    பூரண உடல்நலம்பெற நாங்களும்,இறைவனை பிராத்திக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *