BREAKING NEWS
Search

‘தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்!’ – தலைவர் ரஜினிகாந்த்

உயிரே போனாலும் சரி வாக்குறுதிகளை நிறைவேத்தனும்! – ரஜினி

rajini-election-new

சென்னை: இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், முதல் வேலையாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலில் காலையிலேயே வாக்களித்த ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தினருக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

ரஜினியின் முழுப் பேச்சு:

அனைவருக்கும் வணக்கங்கள். நம்ம நடிகர்கள் எல்லாம் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி…  நமக்குள்ள என்னிக்குமே எப்பவுமே ஒற்றுமை இருக்கும், இருக்கணும்.

சமீத்தில் சில வாக்குவாதங்கள் நடந்துவிட்டன. சரி, நடந்தது நடந்துவிட்டது. அதுக்காக நமக்குள் ஒற்றுமை இல்லை என ஊடகங்கள், மக்கள் நினைத்துவிடக் கூடாது.

ஒரு போட்டி வந்துவிட்டது. வெரிகுட். யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு இரண்டு வேண்டுகோள்.

முதல் வேண்டுகோள், யாரு ஜெயிச்சி வந்தாலும் முதலில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பேரை எடுத்துவிட்டு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றிவிடுங்கள்.

அடுத்து, இந்தத் தேர்தலில் நல்லா சிந்திச்சு, ஆயிரம் முறை யோசிச்சி வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள். ஜெயிச்சி வந்தவங்க, உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேத்தனும். அப்டி நிறைவேத்த முடியாமபப் போனா உடனே ராஜினாமா செஞ்சிடுங்க. அது உங்க மனசுக்கும் நிம்மதி. உங்களுக்கும் நற்பெயரைக் கொடுக்கும். நல்ல எடுத்துக் காட்டாகவும் இருப்பீங்க.

நன்றி, வணக்கம்!”

குறிப்பு: நண்பர்களே, நடிகர் சங்கத் தேர்தலில் தலைவரின் நிலை குறித்து நான் நேற்று இரவு எழுதிய கட்டுரையை மறுபடியும் வாசித்துப் பார்க்கவும்.

-என்வழி
20 thoughts on “‘தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்!’ – தலைவர் ரஜினிகாந்த்

 1. jegan N

  .

  இதற்கிடையில் இன்று காலையிலேயே வாக்களிக்க வந்திருந்தார் ச மின்னலை போல பேசிவிட்டு, அதே மின்னலை போல அவர் கடந்து போனது அங்கு திரண்டிருந்த சினிமா ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது

 2. kumaran

  தலைவர் பேசினதுக்கு நல்ல impact இருக்கும்

 3. Nanda

  Super!! Watched live video. Very nice speech. Super!!
  not sure why Kamal making an issue. India nadigar sangam means expecting Bollywood celebrities to vote.. don’t understand. etho sollanumnu sonna mathri irruku artham illa.

 4. மிஸ்டர் பாவலன்

  உலக நாயகன் கமல் ஹாசன் இதற்கு மாற்று கருத்து முன் வைத்துள்ளார்..

  -== மிஸ்டர் பாவலன் ==

 5. simple fan of super star

  சூப்பர் பஞ்ச் , மிக சூசகமாக வாக்குறுதிகள் காப்பாற்றப்பட உயிரை விட முக்கியம் என்று இந்த சின்ன நடிகர் சங்க தேர்தலில் சொல்கின்ற தலைவர் ஏன் பொதுதேர்தலுக்கு இத்தனை தூரம் யோசிக்கிறார் என்பது தெள்ள தெளிவு . இனி தலைவர் ரசிகர்கள் யாரும் தலைவர் அரசியலுக்கு வர தயங்குகிறார் அது இது என்று பசதீர்கள். என்ன தெளிவு , என்ன தீர்க்கம்
  தலைவா உங்களிடம் படிக்க எத்தனை எத்தனை விஷயங்கள். நான் கர்வபடுகிறேன் தலைவா நீ வாழும் களத்தில் நானும் வாழ்கிறேன் .உன் படங்களையும் , உன் பெச்ச்சுகளையும் வாழ்வை
  பட்கிகிறேன் endru

 6. jegan N

  இன்று ரஜினி பேசியதை கமல் பேசி இருந்தால் அவரை ஏதோ ஒரு தமிழின போராளி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துருப்பார்கள்!!

 7. மிஸ்டர் பாவலன்

  கமல் ஹாசன் வழிகாட்டிய பாண்டவர் அணிக்கு மாபெரும் வெற்றி !!

  உலக நாயகனே ! உலக நாயகனே!!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 8. தமிழ் இனியன் ரஜினி

  சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வேண்டுகோள் மனதை தொட்டது. இது ஒன்றே போதும், தலைவர் அவர்கள் தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் கொண்டு இருக்கும் அன்பின் வெளிப்பாடு எவ்வளவு என்று. வேறு ஒரு சான்றும் வேண்டாம்.
  வாழ்க கலியுக கடவுள் ரஜினி அவர்கள்

 9. enkaruthu

  ஒரு பானை சோற்றுக்சோறு பதம் என்பார்கள்.அதுபோல் ஒரு கமல் ரசிகர் எப்படியெல்லாம் பேசுவார் என்பதற்கு பாவலன் பேச்சே உதாரணம்.அன்று பெரிய நடுநிலையாளர் போல கமலும் ரஜினியும் ஒதிங்கிருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு இன்று கமல் ஆதரித்த அணி வெற்றி என்று கூப்பாடு போடுகிறார்.உண்மையாலுமே நாசர் அவர்கள் என்ன சொன்னார் கமல் எங்கள் அணிக்கு ஆதரவு என்பதை முற்றிலுமாக மறுக்கிறேன் என்றார்.இன்று உண்மையாலுமே விஷால் வென்றதற்கு காரணம் ஒரு மாற்றம் பண்ணி பார்ப்போமே என்று நடிகர்கள் எண்ணியதுதனே தவிர கமல் அல்ல.என்னமோ மக்கள் ஒட்டு போட்டு வென்றது போல் அலட்டி கொள்கிறார் பாவலன் அவர்கள்.கேட்பதற்கே கேவலமாக இருக்கு.ஒன்று மட்டும் சொல்கிறேன் ஒரு கிராமத்தில் கூட போனி ஆகாத இந்த கமல் உலக நாயகனாம்.இவர்கள் பெரிய ஹிட் என்று சொல்லும் பாபநாசம் கூட எங்கள் சேலத்தில் ஒரு காட்சி கூட அரங்கு நிறையவில்லை.கவுண்டமணி ஒரு படத்தில் ” அவுங்க உன்னை சார் என்று சொன்னால் நீ எப்படி ஒத்துக்கலாம் நான் அப்படி கூப்பிடுவதற்கு தகுதி இல்லாதவன் என்று சொல்ல மாட்டியா” என்பதுபோல்தான் இருக்கு இந்த உலக நாயகன் பட்டம்.

 10. Siva

  ரஜினி ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை !!! இதன் விளைவு பின் அவரையே baathikkum… யாரேனும் ஒருவர் முன் வந்து ரஜினி உண்மையான தமிழனா என கேட்பான் ….. தமிழ் படத்தை எடுத்து முடிக்க பெரும்பாலும் பொருளாதார உதவி செய்வது ஆந்திராவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்கள் … பின் அவர்களின் கையை எதிர்பாராமல் இங்கு படம் எடுக்க முடியுமா?

 11. RAGHURAMAN

  தலைவர் அவர்களின் பாபா, குசேலன், லிங்கா படப் பிரச்சனைகளுக்கு சூப்பர் ஸ்டார் அவர்களே தான் முன் நின்று தனது பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வந்தார். அன்றைக்கு இருந்த நடிகர் சங்கத் தலைமையும் உதவ வில்லை. இன்றைக்கு உள்ள நடிகர் சங்கத் தலைமையும் உதவ முன் வரவில்லை. அவர்கள் தான் பிரச்சனையை பெரிதாக்கி காட்டினர். மேலும், இது என்னவோ தலைவர் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல அமைதியாக இருந்து கொண்டனர். தலைவர் அன்பு ரசிகர்கள் உதவ வந்த போதும் தலைவர் அவர்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். இந்த பெருந்தன்மை வேறு எந்த நடிகனுக்கும் வராது. தனது ரசிகர்களை வைத்து அரசியல் விளையாட்டு நடத்தி இருப்பார்கள். இதனால், நடிகர் சங்கம் ஒன்று இருப்பதே தேவை இல்லாத ஒன்று என்பது எனது தனிப்பட்ட கருத்து.
  வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

 12. S VENKATESAN, NIGERIA

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  உலக நாயகன் போத்திஸ் விளம்பரம் நடித்து டிரஸ்ட்க்கு குடுத்து விட்டேன் என்று பொய் ஆதாரம் வெளியிட்டு அதை மறுக்கவும் செய்யாமல் சும்மா இருந்தது ஏன்?

  அந்த விளம்பரத்தின் முக்கிய கருத்து: அன்பு, பாரம்பரியம், அபிமானம் விலை 10 கோடி என்பதை ஒப்பு கொள்கிறீர்களா?

 13. கடலூர் சித்தன்.ஆர்

  “காதிலே பூந்தோட்டத்தையே சொருவினாலும்”…………..!!!
  // தென்னிந்திய நடிகர் சங்கம், விரைவில் இந்திய நடிகர் சங்கம் என்று மாற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் //
  “அகில உலக நடிகர் சங்கம்” என பெயர் வைத்தலே கணியன் பூங்குன்றனாரின் தமிழர் சிறப்பை உலக அளவில் கொண்டு எட்டுத் திக்கும் தமிழரின் புகழ் பரவிட ஏதுவாக இருக்கும் ; வாழ்க உலக நாயகனின் மொழிப்பற்று ; மன்னிக்கவும் நாட்டுப் பற்று / உலகப்பற்று ;செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”; ஹிஹும் ஹிஹும் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் /ஏமாறுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே; “காதிலே பூந்தோட்டத்தையே சொருவினாலும்…………..!!!
  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,முன் தோன்றி மூத்த குடியல்லவா???……….
  ” யாருக்காக இது யாருக்காக – பாடல்; டி எம் சௌந்தரராஜன்- பாடகர்; கண்ணதாசன்- வரிகள்; எம் எஸ் விஸ்வநாதன்-இசை ; வசந்த மாளிகை -திரைப்படம்; பாடி ஆறுதல் அடைபவன் – செந்தமிழுக்கு சொந்தக்காரன் / மன்னிக்கவும்-பாமரத் தமிழன்.

 14. கடலூர் சித்தன்.ஆர்

  // “தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்!’ – தலைவர் ரஜினிகாந்த் //

  என் கல்லறையில் “நான் ஒரு தமிழ் மாணவன்” என்று எழுதி வையுங்கள் என்று கூறிய ஜி.யு.போப் – மன்னிக்கவும்- வீரமாமுனிவர் நினைவுக்கு வருகிறார்”

  “வாழ்க இளம் பெரியார்”- “வாழ்க வளமுடன்” –

 15. enkaruthu

  அது மட்டு அல்ல வெங்கடேசன் அவர்களே இந்த பகுத்தறிவு பகலவன் வெறும் காசுக்காக நரகாசூரன் அழித்த நாளன தீவாளிக்கு மட்டும் போத்திஸ் உடையை நாங்க வாங்கனுமாம்.என்ன ஒரு பகுத்தறிவு பகலவன் இவர்கள்.கோவை குண்டு வெடிப்பின் பொழுது எங்கள் தலைவர் ரஜினி மட்டும்தான் உடனே முஸ்லிம் நண்பர்கள் காரணம் என்று சொல்லகூடாது என்று ஹிந்து அமைப்பின் மீது சந்தேகம் கொண்டு ஒரு கேள்வி எழுப்பினார்.அதுதான் எங்கள் தலைவர்.அவர் நல்லவர் நடுநிலையாளர்.கடவுளை உண்மையாலுமே உணர்ந்தவர் மட்டுமே இப்படி பெருந்தன்மையாக இருக்க முடியும்
  .மேலும் நரேந்திர மோடி தன் வீட்டுக்கு வந்து அலைத்தபோளுதும் சிரித்துகொண்டே அனுப்பிய தெய்வமடா எங்கள் தலைவர்.உங்களைமாத்ரி.விஸ்வரூபம் முஸ்லிம் பிரச்சினை என்றவுடன் மோடி பேச்சை கேட்பதுபோல் ஒரு சக மனிதன் அதுவும் இவன் ரசிகன் கை குடுக்க போனபொழுது வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று குப்பை கூட்ட போனார்.என்னை பொறுத்தவரை இந்த மாதிரி திருட்டு நடிகன் ஆபத்தானவன்.பாவலன் அவர்களே ரஜினி என்ற பெயர் என்ற மறந்துபோய் இருக்கும்.

 16. கடலூர் சித்தன்.ஆர்

  //Siva says: October 19, 2015 at 6:52 pm
  ரஜினி ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை !!! இதன் விளைவு பின் அவரையே baathikkum… யாரேனும் ஒருவர் முன் வந்து ரஜினி உண்மையான தமிழனா என கேட்பான் ….. தமிழ் படத்தை எடுத்து முடிக்க பெரும்பாலும் பொருளாதார உதவி செய்வது ஆந்திராவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்கள் … பின் அவர்களின் கையை எதிர்பாராமல் இங்கு படம் எடுக்க முடியுமா? //

  (baathikkum ) – ஆம் பாதிக்கும்; இப்படியே அனைவரும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று அரசியல் / வியாபார/ சுய லாப கணக்குகளிலேயே குறியாக இருந்தால் சமூக பொருளாதார வேறுபாடுகளால் – உதாரணம் தாங்கள் குறிப்பிட்ட (அவர்களின் கையை எதிர்பாராமல் இங்கு படம் எடுக்க முடியுமா)……………..?

  “தொடரட்டும் இளம் பெரியாரின் என் வழி தனி வழி”

  .

 17. enkaruthu

  இப்ப எங்கே போனார்கள் சீமான் வேல்முருகன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்.தலைவர் ஒரு விஷயம் சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.என்னை பொறுத்தவரை இந்த சுயநல நடிகர்களை விட்டுவிட்டு தலைவர் தன்னை என்றும் நேசிக்கும் ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் எதாவது செய்யல்லாம். தமிழ் நாட்டு சிம்மாசனமே வந்தபொழுதும் எனக்கும் என் ரசிகர்களுக்கும் பக்குவம் வரவில்லை என்று மறுத்தவர் தலைவர்.நடிகர் சங்க தேர்தலில் கொஞ்சம் மவுசு வந்தவுடன் என்னமோ அடுத்த அமெரிக்க ப்ரெசிடெண்ட் என்று எதிர்பார்க்கப்படும் ஹிலரி கிளிண்டன் அவர்களே இந்த கமலிடம் ஆதரவு கேட்கவேண்டும் என்று நினைப்பார்கள் போல இந்த ஊருக்கு நாலு பேர் இருக்கும் கமல் ரசிகர்கள்.இந்த அணி வென்றதற்கு முக்கிய காரணம் ராதா ரவி அவர்களின் கேவலமான பேச்சு மற்றும் அந்த பேச்சை தனக்கு சாதகமாக மாற்ற தெரிந்த விஷால் அவர்கள் மட்டுமே.எங்கே தோற்றால் கேவலம் ஆகிவிடுமோ என்று பயந்து நாசரை கமல் எங்களுக்கு ஆதரவு தரவில்லை என்று சொல்லவைத்துவிட்டு இன்று எதோ கொஞ்சம் வாக்குகள் அதிகம் பெற்று வென்றவுடன் கமல் ரசிகர்கள் துள்ளுகிறார்கள்.பார்பதற்க்கே சிரிப்பா இருக்கு.

 18. மிஸ்டர் பாவலன்

  கமல் ஹாசன் போத்தீஸ் கடைக்கு விளம்பரப் படங்கள், வீடியோவில்
  நடித்தது பற்றி விமர்சனம் படித்தேன்..

  விளம்பரங்களை விரும்பாதவர் விளம்பரப் படங்களில் நடிக்கலாமா?
  பெரியார் வழி நடப்பவர் தீபாவளிக்கு விளம்பரம் செய்யலாமா?
  ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்றனர் – போத்தீஸ் படத்தில் இருக்கலாமா?

  உலகநாயகனை புரிந்து கொள்வது அவரது ரசிகர்களுக்கே கடினமாக இருக்கிறது!

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *