BREAKING NEWS
Search

முதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி… தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்குகிறார்!

எம்ஜிஆருக்குப் பிறகு இலங்கை செல்லும் தலைவர் ரஜினிகாந்த்!

thalaivar-style

சென்னை: லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார்.

வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் உள்ள ஞானம் நகர் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள வீடற்ற தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அம்மாள் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.

இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9, 10 தேதிகளில் இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடக்கிறது.

இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களுக்காக அங்கே நேரில் வந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்டபோது, உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தார்.

விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார்  ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். மேலும் எம்ஜிஆருக்குப் பிறகு, அவருக்கு நிகரான ஆளுமையான தலைவர் இலங்கை செல்வதும் இதுவே முதல் முறை.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் திரு எஸ் விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் திரு ஜேம்ஸ் பெர்ரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் வருக!,” என்று கூறப்பட்டுள்ளது.

-என்வழி




4 thoughts on “முதல் முறையாக இலங்கை செல்லும் ரஜினி… தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்குகிறார்!

  1. Rajagopalan

    Dont Mistake but i personally feel this is not required.
    Lyca itself is close of Rajapakshe… This itself is not clarified yet.
    We all know the problems arised when Kathi was about to release. Even in our Site, there were so many negative remarks during Kathi release.
    I dont know who is giving this kind of advice’s to Thalaivar.
    Already there are so many negative remarks about our thalaivar.
    Why to add fuel to fire?
    Thalaivar should not go.
    If you feel my remarks are not good, please give clarifications so that the issue can understood clearly,

  2. Gokul

    Super ji தமிழ் குடிதாங்கிய கிளம்பிடுவானுங்களே oppose panna

  3. PREMANAND RAMARAJU

    Thee was shooted in Sri Lanka only. It is also a co-production between K.Balaje and a Sri Lankan Film Company.

  4. Raghul

    LIVING Tamils in north of Srilanka – Jaffna to Vavuniya needs soothing hands… When I visited last year I felt it, Tamils in Tamil Nadu need to engage with them, our fraternity…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *