BREAKING NEWS
Search

“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்!

சென்னை: ரஜினிக்கே உரித்தான காந்தக் குரலில் “பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த” என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த ட்ரைலரில், ரஜினியை ரசித்து ரசித்து அவரது தோற்றத்தை வடிவமைதிருக்கிறார்கள். ஸ்டைலும், சுறுசுறுப்பும், அழகும், கம்பீரமும் மிளிர ரஜினி நடப்பதும், ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் பண்ணுவதும், நக்கல் வசனங்களில் பின்னிப் பெடலெடுப்பதும், படம் குறித்த எதிர்ப்பார்ப்பை ஏகத்துக்கும் உசுப்பி விடுகிறது.

ஒரு மாணவி ரஜினியை பார்த்து “இளமையா, ஸ்டைலா இருக்கீங்க” என்று சொல்லிவிட்டுப் போக, ரஜினி “ஸ்டைலா இருக்கேனா… நேச்சுரலி” என்று சொல்லிவிட்டு சிரிப்பதும், இன்னொரு காட்சியில் தன்னை சீண்டும் வில்லனை பார்த்து நக்கலாக சிரித்தபடி, “சத்தியமா சொல்றேன் அடிச்சு அண்டர்வேரோட ஓட விட்ருவேன்… மானம் போனா திரும்பி வராது,” என்று எச்சரிப்பதும், இன்னொரு காட்சியில், “எவனுக்காவது பொண்டாட்டி, புள்ளக்குட்டின்னு சென்டிமென்ட் இருந்தா ஓடிப்போயிருங்க, கொல காண்டுல இருக்கேன், கொல்லாம விடமாட்டேன்” என அதிரடியாக சொல்வதும், ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்துள்ளது.

முத்தாய்ப்பாக, “இனிமேதான் சிறப்பான, தரமான சம்பங்கள பார்க்கப்போற,” என ரஜினி பேசும் வசங்களுக்கு தியேட்டர்களில் கூரைகளே பிளந்துவிடும் அளவுக்கு ரசிகர்களின் ஆரவாரம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ட்ரைலரில் கடைசி பிரேமில் மதுரை பின்னணி இசை ஒலிக்க ரஜினி தன் பாணியில் மிக இயல்பாக ஒரு ஆட்டம் போடுகிறார் பாருங்கள்… கொள்ளை அழகு!

ஒரு ரசிகன், தன் தலைவர் ரஜினி எந்த மாதிரி தோற்றங்களில் எல்லாம் வந்தால், எந்த மாதிரி வசனங்கள் பேசினால் மாஸ் ஆக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்திருப்பானோ அதையெல்லாம் உணர்ந்து சிறப்பாக, தரமாக உருவாக்கப்பட்ட ட்ரைலர் இது.

கார்த்திக் சுப்பராஜ்… கலக்கிட்டீங்க!!

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *