BREAKING NEWS
Search

கட்சி தொடங்கும் வேலை 90 சதவீதம் முடிந்துவிட்டது! – தலைவர் ரஜினிகாந்த் அறிவிப்பு


சென்னை: கட்சி தொடங்கும் வேலைகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன. ஆனால் வருகிற டிச.12 தனது பிறந்த நாளன்று கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்படாது என தலைவர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

வட இந்தியாவின் வாரணாசியில் நடந்த பேட்ட படத்தின் படப்பிடிப்பை முடித்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பேட்ட படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. ரொம்ப நல்லா வந்திருக்கு. 15 நாட்கள் முன்பாகவே படத்தை முடித்துவிட்டோம். காரணம் அனைவரது கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு.

டிசம்பர் 12ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கவில்லை, அதே சமயத்தில், கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன. நேரம் காலம் பார்த்து அறிவிக்கவிருக்கிறேன்.

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்கு சம உரிமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் கோயில்களின் ஐதீகத்தை பின்பற்ற வேண்டும். காலம் காலமாக உள்ள சம்பிரதாயத்தை மாற்றுவது சரியல்ல. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கணும், அதே நேரம் அதில் பார்த்து நடந்து கொள்ள வேண்டும்.

மீ டூ விவகாரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

தன் மீதான குற்றச்சாட்டுகளை கவிஞர் வைரமுத்து முழுமையாக மறுத்துள்ளார். வழக்குத் தொடர்ந்தாலும் சந்திக்கத் தயார் என்று சொல்லியிருக்கிறாரே.

நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய நிலைப்பாட்டை தேர்தல் அறிவிக்கும்போது சொல்கிறேன்,” என்றார்.

அப்போது ஒரு செய்தியாளர் பேட்ட வசனம் ஒன்றைச் சொல்லச் சொல்லிக் கேட்டபோது, “பேட்ட பராக்..” என்று சொல்லி தனது ஸ்டைலில் சிரித்தார் ரஜினி.

– என்வழி




One thought on “கட்சி தொடங்கும் வேலை 90 சதவீதம் முடிந்துவிட்டது! – தலைவர் ரஜினிகாந்த் அறிவிப்பு

  1. Naren

    no wonder when u start or announce a party with ur name. So many uncles/ grandma / aunties started their party (but not registered)

    But what’s ur action. That’s very important.

    1. What’s ur action to below Poverty peoples education / basic amenities

    2. Middle class paying tax every year without fail ( may be like u ) but they receive nothing from politician and not to ask any favour from local councillor

    3. How do u make people
    Follow the existing rules ( both people and government servants) ?

    There are many obligations from comman man … but above are peanuts.

    At least make one city people (ur staying city Chennai) happy . Big role

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *