BREAKING NEWS
Search

‘தமிழ் படம்’ ரீமேக்.. எந்திரனை கிண்டலடிக்கும் காட்சி.. ஆனாலும் பாராட்டிய ரஜினி!

‘தமிழ் படம்’ ரீமேக்.. எந்திரனை கிண்டலடிக்கும் காட்சி.. ஆனாலும் பாராட்டிய ரஜினி!

சுடிகாடு என்றொரு படம் தெலுங்கில் வந்திருக்கிறது. நல்ல வசூல்… ஏக வரவேற்பு. தமிழில் வெளியாக ஏக திட்டுகள், அதே அளவு பாராட்டுகளைப் பெற்ற தமிழ்ப் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.

தெலுங்குக்கு ஏற்ற மாதிரி திரைக்கதையை மாற்றி, கூடுதலாக காட்சிகளைச் சேர்த்து இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டாரின் ரோபோ படத்தில், நூறு துப்பாக்கிகளுடன் ரஜினி தோன்றும் காட்சியை ஸ்பூஃப் (கிண்டல்) செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக கடந்த செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் திரையிடப்பட்டது. சென்னையில் உள்ள தனது வீட்டிலிருந்தபடி இந்தக் காட்சியை டிஜிட்டல் திரையிடல் மூலம் பார்த்தார் ரஜினி. அவருடன் படக்குழுவினரும் இருந்தனர். படம் முடிந்ததும், சிறப்பாக இருப்பதாகக் கூறி ஒவ்வொரு டெக்னீஷியன், நடிகர் நடிகைகளைப் பாராட்டியுள்ளார் ரஜினி.

குறிப்பாக படத்தின் ஹீரோ அல்லாரி நரேஷுக்கு தனது ஸ்பெஷல் பாராட்டுக்களைத் தெரிவித்தார் ரஜினி!!

-என்வழி சினிமா செய்திகள்




One thought on “‘தமிழ் படம்’ ரீமேக்.. எந்திரனை கிண்டலடிக்கும் காட்சி.. ஆனாலும் பாராட்டிய ரஜினி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *